கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரூர்கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். மாவட்டத்தின் தலைமைத் தொகுதியாகவும், மாவட்டத்தின் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாகவும் இருப்பதால் இது முக்கியத் தொகுதியாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 152ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 83.63 சதவீத வாக்குகளை பதிவு செய்த இத்தொகுதி தமிழகத்தில் அதிக மக்கள் வாக்களித்த தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
கரூர் தொகுதியின் கிழக்கே தொட்டியம், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், மேற்கே அரவக்குறிச்சி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், வடக்கே கபிலர் மலை, நாமக்கல் ஆகிய தொகுதிகளும், தெற்கே குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளும் அமைந்துள்ளன.
1,94,257 வாக்காளர்களை கொண்ட தொகுதியிது. 2011ஆம் ஏப்ரல் மாத கணக்கின்படி ஆண் வேட்பாளர்கள் 94,805 பேரும் பெண் வேட்பாளர்கள் 99,404 பேரும் மொத்தம் 1,94,257 வாக்காளர்களை கொண்டு மாவட்டத்தில் பெரிய தொகுதியாக உள்ளது.