சேலம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேலம் மாவட்டம்
India Tamil Nadu districts Salem.svg
தலைநகரம் சேலம்
மிகப்பெரிய நகரம் சேலம்
மாவட்ட ஆட்சித் தலைவர்

திரு வி. சம்பத் , இ.ஆ.ப

காவல்துறைக் கண்காணிப்பாளர்

ஆக்கப்பட்ட நாள்
பரப்பளவு 5205
மக்கள் தொகை
(கணக்கெடுப்பு வருடம்)
அடர்த்தி
34,82,056
வருவாய் கோட்டங்கள் 4
வட்டங்கள் 10
வருவாய் கிராமங்கள்
631 மாநகராட்சி 1
நகராட்சிகள் 5
பேரூராட்சிகள் 33
ஊராட்சி ஒன்றியங்கள் 20
ஊராட்சிகள் 385
இணையதளம் http://www.salem.tn.nic.in/
பின்குறிப்புகள்

சேலம் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் சேலம் ஆகும்.

இம்மாவட்டத்தில் இருந்து பிரிந்ததே நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆகும். இவை பிரிப்பதற்கு முன் சேலம் மாவட்டமே தமிழ்நாட்டின் பெரிய மாவட்டமாக இருந்தது.

வரலாறு

சேலம் மாவட்டம் சோழநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. சோழ மன்னர்களின் காலத்தில் இது ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இப்பகுதி தனியொரு ஆட்சிப்பரப்பாகி சேலம் நாடு எனப்புகழ் பெற்றது.[1] அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தகடூர் (தர்மபுரி) அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் 1792 இல் நடந்த போரின் முடிவில் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவானது. அந்த ஒப்பந்ப்படி திப்பு சுல்தான் தன் ஆட்சிப்பகுதிகளில் சிலவற்றை கிழக்கிந்திய நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்தார். அவர் அவ்வாறு விட்டுக்கொடுத்த பகுதிகளான தற்போதைய தருமபுரி மாவட்டம் மற்றும் கிருட்டிணகிரி மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்ட பாராமகால் மற்றும் சேலம் மாவட்டத்தின் சில பகுதிகள் அடங்கிய பகுதிகளைக் கொண்டு பாராமகால் மற்றும் சேலம் மாவட்டம் 1792 இல் உருவாக்கப்பட்டது. இது சில ஆண்டுகளுக்குப் பிறகு கிருட்டிணகிரியைத் தலைமை இடமாகக் கொண்ட பாராமகால் மாவட்டம் என்றும் சேலத்தை தலைநகராகக் கொண்ட தாலாகாட் மாவட்டம் என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டது. 1801 இல் இவை இரண்டும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. 1808 இல் இது சேலம் மாவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. மாவட்டத்தின் தலைநகரானது அவ்வப்போது தருமபுரி, சேலம் ஒசூர் என மாற்றப்பட்டு, 1860 இல் மீண்டும் சேலமே தலைநகராக ஆக்கப்பட்டது.

நிர்வாகம்

மாவட்ட ஆட்சியரகம்

இம்மாவட்டத்தில் உள்ள வட்டங்கள்(தாலுகா) விவரம் பின்வருமாறு:

மலைகள்:

சேலம் மாவட்ட மண் வகைகள்

சேலம் மாவட்டம் பொதுவாக மலைகள் சூழ்ந்த மாவட்டம் ஆகும். இங்கு உள்ள மலைகள் விவரம் வருமாறு

ஆறுகள்:

 • காவிரி
 • திருமணிமுத்தாறு
 • வஷிஷ்ட நதி
 • சரபங்கா நதி

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சேலம் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,480,008.[2] இது தோராயமாக பனாமா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 54வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 663 inhabitants per square kilometre (1,720/சது மை).[2] மேலும் சேலம் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 15.37%.[2]சேலம் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 954 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் சேலம் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 73.23%.[2]

சமயம்

சமயவாரியாக மக்கள் தொகை [4]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 3,016,346 100%
இந்துகள் 2,883,909 95.60%
இசுலாமியர் 77,648 2.57%
கிறித்தவர் 50,450 1.67%
சீக்கியர் 535 0.017%
பௌத்தர் 208 0.006%
சமணர் 1,043 0.034%
ஏனைய 248 0.008%
குறிப்பிடாதோர் 1,248 0.041%

சட்டமன்றத் தொகுதிகள்

முதன்மைக் கட்டுரை 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சேலம் மாவட்டம்)

 1. கங்கவல்லி (தனி)
 2. ஆத்தூர் (தனி)
 3. ஏற்காடு (தனி))
 4. ஓமலூர்
 5. மேட்டூர்
 6. எடப்பாடி
 7. சங்ககிரி
 8. சேலம் மேற்கு
 9. சேலம் வடக்கு
 10. சேலம் தெற்கு
 11. வீரபாண்டி

மேற்கோள்கள்

 1. தமிழ்நாடன், சேலம் திருமணி முத்தாறு, லவ் ஓ ஏ. கே. நாகராஜன் அறக்கட்டளை, சேலம் வெளியீடு 2004
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
 3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்த்த நாள் 2011-10-01.
 4. Census of india , 2001

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மாவட்டம்&oldid=2566618" இருந்து மீள்விக்கப்பட்டது