உள்ளடக்கத்துக்குச் செல்

இளம்பிள்ளை

ஆள்கூறுகள்: 11°36′N 78°00′E / 11.6°N 78.0°E / 11.6; 78.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளம்பிள்ளை
—  பேரூராட்சி  —
இளம்பிள்ளை
அமைவிடம்: இளம்பிள்ளை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°36′N 78°00′E / 11.6°N 78.0°E / 11.6; 78.0
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
வட்டம் சேலம் தெற்கு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

11,797 (2011)

4,274/km2 (11,070/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2.76 சதுர கிலோமீட்டர்கள் (1.07 sq mi)

257 மீட்டர்கள் (843 அடி)

இணையதளம் www.townpanchayat.in/elampillai

இளம்பிள்ளை (ஒலிப்பு) (ஆங்கிலம்:Elampillai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°36′N 78°00′E / 11.6°N 78.0°E / 11.6; 78.0 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 257 மீட்டர் (843 அடி) உயரத்தில் இருக்கின்றது. இங்கு 28 ஏக்கர் நிலபரப்பில் இளம்பிள்ளை ஏரி உள்ளது.[5]

அமைவிடம்

[தொகு]

இப்பகுதியானது கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இம்மலையில் பிரசித்தி பெற்ற சித்தர் கோவிலானது இளம்பிள்ளைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இளம்பிள்ளை அபூர்வா பட்டு நெசவுத் தொழில் பிரபலமானது. விரைவில் வளர்ந்து வரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.

இளம்பிள்ளை பேரூராட்சிக்கு கிழக்கில் சேலம் 20 கிமீ; மேற்கில் தாரமங்கலம் 15 கிமீ; வடக்கே ஓமலூர் 20 கிமீ; தெற்கே சங்ககிரி 22 கிமீ மற்றும் இடங்கணசாலை 1 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

2.76 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[6]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,057 குடும்பங்களும், 11,797 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.96% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 962 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]

தொழில்

[தொகு]

இங்கு உள்ள மக்கள் கைநெசவுத் தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.இப்போது விசைதறி மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்

பெயர்க்காரணம்

[தொகு]

இளைஞரான திருமூலருக்கு வாய்த்த சீடரோ தொண்டுகிழம். காலாங்கி நாதர் என்னும் அக்கிழவர் கலிங்கத்தில் இருந்து வந்தவர். காயம் உடலை மூப்படையாது கல்லாக மாற்றி எப்பொழுது இளமைநலம் நல்கும் காயகல்பத்தைத் தேடி குருவான திருமூலர் காட்டிற்குள் சென்றுவிட்டார். குருவுக்கு சீடர் உணவாக்கத் தொடங்கினார். அடிப்பிடித்துவிடக்கூடாதே என அக்காட்டில் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவ்வுணவை அக்கிழவர் கிண்டத் தொடங்கினார். உணவு கருகிவிட்டது. பதறிப்போன அவ்வுணவைக் கீழே இறக்கிவைத்துவிட்டு குருக்கு புது உணவை ஆக்கினார். கருகிய உணவு வீணாகிவிடக்கூடாதே என அதனை எடுத்து சீடராகி அக்கிழவர் உண்டார். அதனை உண்டுமுடித்ததும் கிழவரான காலாங்கிநாதர் இளம்பிள்ளையாக மாறிவிட்டார். அவ்வாறு அவர் உருமாறிய இடமே இந்த இளம்பிள்ளை என்னும் ஊர் என்பது தொன்மம்.[8]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Ilampillai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. Encroachments on Elampillai Lake removed
  6. இளம்பிள்ளை பேரூராட்சியின் இணையதளம்
  7. Ilampillai Population Census 2011
  8. சிவம் சுகி; ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்; வானதி பதிப்பகம், சென்னை; ஐந்தாம் பதிப்பு: திசம்பர் 2005; பக். 67 -70
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்பிள்ளை&oldid=3927934" இலிருந்து மீள்விக்கப்பட்டது