வசிட்ட நதி
வசிட்ட நதி (வசிஷ்ட நதி) | |
ஓடை | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | தமிழ் நாடு |
பகுதி | சேலம் மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | பேளூர் |
கழிமுகம் | |
- elevation | 0 அடி (0 மீ) |
வசிட்ட நதி தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கல்ராயன் மலைப்பகுதில் உள்ள புழுதிக்குட்டை அணையிலிருந்து ஒரு சிற்றாறும்,பாப்பநாய்க்கன்பட்டி அணையிலிருந்து ஒரு சிற்றாறும் உற்பத்தியாகிப் பின்னர் இரண்டும் ஒன்றாக கலந்து வசிட்ட நதியாக உருவெடுத்து கடலூர் மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து வங்கக் கடலில் கலக்குமுன்னர் சுவேதா ஆற்றுடன் இணைந்து வெள்ளாறு என பெயர் பெற்று வங்க கடலில் சேர்கிறது இது சேலம் மாவட்டத்தில் ஊற்றெடுத்து பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், காட்டுகோட்டை, மணிவிழுந்தான் வடக்கு மற்றும் தெற்கு இடையிலும், தேவியாக்குறிச்சி, பட்டுத்துறை, தலைவாசல், ஆறகழூர், பெரியேரி, கடலூர் ஊர்களின் வழியாகப் பாய்கின்றது. இவ்வற்றிற்கான அணைகள் ஆத்தூரிலும் பெரியேரியிலும் (Periyeri) காணப்படுகின்றன.
பெயராய்வு
[தொகு]வசிட்ட முனிவரின் பெயரை வைத்தே இவ்வாற்றுக்கு வசிட்ட நதி என பெயரிடப்பட்டது. அவர் இந் நதிக் கரையில் பேளூருக்கருகில் ஒரு வேள்வி செய்தார் எனக் கூறப்படுகிறது. அவ்வூருக்கு வடக்கில் வெண்மையான பாறையொன்று உள்ளது. வசிட்டர் செய்த வேள்வியால் விளைந்த சாம்பலே அவ் வெண்மையான பாறையாக மாறிவிட்டதென்று கூறுகின்றனர். வசிட்ட நதிக்கும் பேராறு என்ற வேறு பெயரும் உண்டு.[1]
உசாத்துணைகள்
[தொகு]- Madras District Gazetteers, By Madras (India : State) google Maps.
- ↑ "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 51-94". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.