கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)
கங்கவள்ளி, சேலம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி கங்கவள்ளி வட்டம் முழுவதும் மற்றும் ஆத்தூர் வட்டத்தின் நடுவலூர், தெடாஊர், ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
இந்த தொகுதியில் ஆண்கள் 1,14,127 பேர், பெண்கள்- 1,20,095 பேர், இதரர்- 2 பேர் என மொத்தம் 2,34,224 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆதி திராவிடர், வன்னியர், கொங்கு வேளாளர், நாயக்கர் மற்றும் முதலியார் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினரும் உள்ளனர்.[1] கடந்த 1951-ம் ஆண்டு முதல் கடந்த 2006-ம் ஆண்டு வரை தலைவாசல் தொகுதியாக இருந்த போது, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
இத்தொகுதியின் முக்கியத் தொழில் விவசாயம். கரும்பு, நெல், மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், பருத்தி, பாக்கு உள்ளிட்டவை அதிகம் பயிரிடப்படுகின்றன.நூல் மில்கள், ஜவ்வரிசி (சேகோ) ஆலைகள் மக்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகின்றன. கொல்லிமலையில் உற்பத்தியாகி வரும் சுவேத நதி சேலத்தின் கூவமாக மாற்றப்பட்டிருப்பது பகுதிவாசிகளின் நீண்ட கால கவலை ஆகும்.[2]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- கங்கவள்ளி வட்டம்
- ஆத்தூர் வட்டம் (பகுதி)
நடுவலூர்,தெடாஊர்,ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்[3]
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | ஆர். சுபா | தேமுதிக | 72922 | 48.60 | சின்னதுரை | திமுக | 59457 | 39.63 |
2016 | ஏ. மருதமுத்து | அதிமுக | 74301 | 42.65 | ஜே. ரேகா பிரியதர்சினி | திமுக | 72039 | 41.35 |
2021 | அ. நல்லதம்பி | அதிமுக[4] | 9,568 | 48.02 | ஜே. ரேகா பிரியதர்சினி | திமுக | 82,207 | 44.08 |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம். மாலைமலர். 21 மார்ச் 2021 இம் மூலத்தில் இருந்து 2021-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210816111207/https://www.maalaimalar.com/news/district/2021/03/21171559/2460883/Gangavalli-constituency-Overview.vpf. பார்த்த நாள்: 2021-08-16.
- ↑ கெங்கவல்லி தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்
- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ கங்கவல்லி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா