கிருஷ்ணகிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிணகிரி
மாவட்டம்
Krishnagiri Fort Hill.jpg
கிருட்டிணகிரியில் உள்ள மலை
Krishnagiri in Tamil Nadu (India).svg
கிருட்டிணகிரி மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் TamilNadu Logo.svg தமிழ்நாடு
தலைநகரம் கிருட்டிணகிரி
பகுதி மழவர் நாடு
மாவட்ட ஆட்சியர் திரு. தீபக்
ஜேக்கப், இ. ஆ. ப
மாவட்ட காவல்துறைக்
கண்காணிப்பாளர்
திரு. சரோஜ் குமார் இ. கா. ப
மாநகராட்சி 1
நகராட்சி 1
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 8
பேரூராட்சிகள் 6
ஊராட்சி ஒன்றியங்கள் 10
ஊராட்சிகள் 333
வருவாய் கிராமங்கள் 636
சட்டமன்றத் தொகுதிகள் 6
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 5143 ச.கி.மீ.
மக்கள் தொகை
18,79,809 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
635 001
தொலைபேசிக்
குறியீடு

04343
வாகனப் பதிவு
TN 24, TN 70
பாலின விகிதம்
958 /
கல்வியறிவு
71.46%
இணையதளம் krishnagiri

கிருட்டிணகிரி மாவட்டம் (Krishnagiri district) இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கிருட்டிணகிரி ஆகும். இந்த மாவட்டம் 5143 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 30-ஆவது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக அளவில் மாம்பழம் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டம் மலைகள் நிறைந்து காணப்படுகின்றன.

இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் முதல் 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

வரலாறு[தொகு]

கிருட்டிணகிரி மலை

கிருட்டிணகிரி முற்காலத்தில் "எயில் நாடு" எனவும், ஓசூர் "முரசு நாடு" எனவும், ஊத்தங்கரை "கோவூர் நாடு" எனவும் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க காலத்தில் போர் வீரர்களுக்கு வைக்கப்படும் "நவகண்டம்" எனப்படும் நடுகற்கள் இம் மாவட்டத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த இடம் ஒரு காலத்தில் கொடை வள்ளலான அதியமான் ஆட்சி செய்து வந்த இடமாகும். சேலத்தில் சில பகுதிகளும், தருமபுரி, கிருட்டிணகிரி, மற்றும் மைசூர் ஆகிய இடங்கள் ஒருங்கே "தகடூர் நாடு" அல்லது "அதியமான் நாடு" எனவும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் தமிழகத்தின் எல்லையாகவும் இருந்து வந்துள்ளது, இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

இப்பகுதியில் "பாரா மகால்" என அழைக்கப்பட்ட 12 கோட்டைத் தலங்கள் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதில் முதன்மையானது கிருட்டிணகிரியில் அமைந்துள்ள கோட்டையாகும் சையத் பாசா மலை. இந்த கோட்டை விசயநகர பேரரசர்களால் கட்டப்பட்டதாகும். போசள மன்னன் வீர இராமநாதன் தற்போதய கிருட்டிணகிரி மாவட்டத்தின் "குந்தானி" என்னும் இடத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்ததாகவும், பிற்காலத்தில் செகதேவிராயர், செகதேவி என்னும் இடத்தைத் தலைநகராகக் கொண்டு 12 கோட்டைகளில் ஒன்றை அங்கு கட்டி ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.

முதலாம் மைசூர் போரின்போது ஆங்கிலேய படைகள் கிருட்டிணகிரி வழியாக காவேரிப்பட்டினத்திற்கு சென்று அங்கு ஐதர் அலியின் படைகளுடன் போரிட்டதாகத் தெரிகிறது. இதில் ஆங்கிலேயர்கள் படுதோல்வி அடைந்தனர். இரண்டாம் மைசூர் போரின் போது ஐதர் அலியின் கட்டுப்பாட்டிற்குள் சேலம் மற்றம் கர்நாடக பகுதிகள் வந்தன.

" சிரீரங்கபட்டிண உடன்படிக்கை"யின் படி சேலம் மற்றும் பாரா மகால் பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. 1792 ஆம் ஆண்டு கேப்டன் அலெக்சான்டர் ரீட் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். பின்னர் ராபார்ட் கிளைவ் மதராசு மாகாணத்தின் கவர்னராக ஆனபோது பாரா மகாலின் தலைநகரமாக கிருட்டிணகிரி மாறியது[2].

  • மூதறிஞர் இராசாசி, கிருட்டிணகிரி மாவட்டதிலுள்ள ஓசூர் நகருக்கருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர்.[2].
  • திருவள்ளுவருக்கு திருவுருவம் தந்த ஓவியப் பெருந்தகை கே. ஆர். வேணுகோபால் சர்மா ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள காமாட்சிபட்டியில் பிறந்தவர்.
  • கிருட்டிணகிரியில் [200 ஆண்டுகள் பழமைவாய்ந்த (சிறப்புமிக்க) நீதிமன்றம்] மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
  • 2500 ஆண்டு கால சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற [சிரீ காட்டு வீர ஆஞ்சநேயர் திருத்தலம்] கிருட்டிணகிரிக்கு மிக அருகில் மகாராசகடை என்னும் இடத்தில் மலைமீது அமைந்துள்ளது.
  • கிருட்டிணகிரி மாவட்டம், ஓசூரில் பிரசித்தி பெற்ற சிரீ சந்திர சூடேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.

மாவட்ட வருவாய் நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 8 வருவாய் வட்டங்களையும், 29 உள்வட்டங்களையும், 661 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.[3]

வருவாய் கோட்டங்கள்[தொகு]

வருவாய் வட்டங்கள்[தொகு]

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்[தொகு]

இம்மாவட்டம் 1 மாநகராட்சியையும், 1 நகராட்சியையும், 6 பேரூராட்சிகளையும்[4], 10 ஊராட்சி ஒன்றியங்களையும்[5], 333 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[6]

மாநகராட்சி[தொகு]

நகராட்சிகள்[தொகு]

பேருராட்சிகள்[தொகு]

  1. காவேரிப்பட்டணம்
  2. கெலமங்கலம்
  3. தேன்கனிக்கோட்டை
  4. நாகோசனகள்ளி
  5. பருகூர்
  6. ஊத்தங்கரை

ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]

மக்கள் தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1901 3,89,745 —    
1911 4,07,883 0.00%
1921 3,89,723 0.00%
1931 4,54,928 0.01%
1941 5,26,107 0.01%
1951 5,92,009 0.01%
1961 7,16,442 0.01%
1971 8,81,371 0.01%
1981 10,56,885 0.01%
1991 13,05,013 0.01%
2001 15,61,118 0.01%
2011 18,79,809 0.01%
சான்று:[7]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,879,809 ஆகும். அதில் ஆண்கள் 960,232; பெண்கள் 919,577 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 2.61% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 367 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 958 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 71.46% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 78.72% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 63.91% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 217,323 ஆக உள்ளனர்.[8]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 1,723,737 (91.70%); கிறித்தவர்கள் 35,956 (1.91%); இசுலாமியர்கள் 115,303 (6.13%); மற்றவர்கள் 0.25% ஆக உள்ளனர்.

இம்மாவட்டத்தில் தமிழ், கன்னடம்,

தெலுங்கு, ஆங்கில மொழிகள் பேசப்படுகிறது.

அரசியல்[தொகு]

மக்களவைத் தொகுதி[தொகு]

  1. கிருட்டிணகிரி மக்களவைத் தொகுதி[9]

சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

  1. ஊத்தங்கரை (தனி)
  2. பர்கூர்
  3. கிருட்டிணகிரி
  4. வேப்பனபள்ளி
  5. ஓசூர்
  6. தளி

அமைவிடம்[தொகு]

கிருட்டிணகிரி மாவட்டமானது கிழக்கே திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களையும், மேற்கே கருநாடக மாநிலத்தையும், வடக்கே ஆந்திர மற்றும் கருநாடக மாநிலங்களையும், தெற்கே தருமபுரி மாவட்டத்தையும் வரையரையாகக் எல்லையாகக் கொண்டுள்ளது.

கிருட்டிணகிரி மாவட்டம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் பெங்களூர் முதல் சென்னை வரை உள்ள தங்க நாற்கர சாலையும், கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான தேசியநெடுஞ்சாலை 7, (தற்போது காசுமீர் வரை தேசிய நெடுஞ்சாலை 44) மற்றும் கிருட்டிணகிரி - வாலாசா தேசிய நெடுஞ்சாலை 46, கிருட்டிணகிரி - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. பெங்களூர் முதல் சேலம் வரையிலான இருப்புப் பாதையும், சென்னை சென்ட்ரல்,

ஜோலார்  பேட்டை வழியாக சேலம் செல்லும் இருப்புப் பாதையும் இம்மாவட்டத்தின் வழியாக செல்கின்றது.

பொருளாதாரம்[தொகு]

இங்கு மா சாகுபடி 300,17 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கிருட்டிணகிரி மாவட்டத்தின் முக்கிய பயிர் மாங்கனி ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் 300,000 டன் மா உற்பத்தி ஆகிறது. மா உற்பத்தியில் கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாட்டில் முதல் இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்நகரில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி அரசின் சார்பாக நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான மாம்பழ ஏற்றுமதி மண்டலம் கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏற்கப்பட்டுள்ளது. மாம்பழப் பதப்படுத்தும் தொழிலும், அத்துடன் வளர்ந்து வருகின்றது. தற்போது ஓசூர் மாநகராட்சி ஒரு தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு சிப்காட் 1 மற்றும் 2 அலகுகள் உள்ளன. டைட்டன், அசோக் லேலண்ட், டி.வி.எசு, பிரிமியர் மில் , லட்சமி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பசுமைக் குடில் அமைத்து உரோசா மலர் சாகுபடி செய்வதில் ஓசூர் மாநகராட்சி சிறந்து விளங்குகிறது.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

இந்த மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பாரத பிரதமரின் தங்க நாற்கர சாலை குவியும் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சாலை கீழக்கண்ட முக்கிய சாலைகளை இணைக்கும் பிரதான மாவட்டமாக திகழ்கிறது.

தேசிய நெடுஞ்சாலை:

மலைகளின் ஊடாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் காட்சி
  1. தேசிய நெடுஞ்சாலை -7 (கன்னியாகுமரி - காசுமீர்)
  2. தேசிய நெடுஞ்சாலை-46 (சென்னை - பெங்களூர்)
  3. தேசிய நெடுஞ்சாலை-66 (பாண்டிச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூர்)
  4. தேசிய நெடுஞ்சாலை-207 (சர்ச்சாபூர் -பாகலூர் - ஓசூர்)
  5. தேசிய நெடுஞ்சாலை-219 (கிருட்டிணகிரி - குப்பம்)

மாநில நெடுஞ்சாலைகள்:

  1. மாநில நெடுஞ்சாலை 17: மாலூர்- ஓசூர் - அதியமான் கோட்டை
  2. மாநில நெடுஞ்சாலை 17 ஏ: ஓசூர் - தேன்கனிகோட்டை
  3. மாநில நெடுஞ்சாலை 17 பி: ஓசூர் - தேன்கனிகோட்டை (தளி வழியாக)
  4. மாநில நெடுஞ்சாலை 131: பர்கூர் - திருப்பத்தூர்
  5. மாநில நெடுஞ்சாலை 85: அத்திப்பள்ளி - இராயக்கோட்டை
  6. மாநில நெடுஞ்சாலை 60: ஒகேனக்கல் - திருப்பத்தூர் (மத்தூர் வழியாக)
  7. மாநில நெடுஞ்சாலை 514: குப்பம் - பச்சூர் - நாட்டறம்பள்ளி
  8. மாநில நெடுஞ்சாலை 433: வேப்பனப்பள்ளி - குப்பம்

தொடருந்து[தொகு]

சேலம் - பெங்களூரு பாதையில் ஓசூர் தொடருந்து நிலையம் உள்ளது. கோவை - ஈரோடு - சோலார்பேட்டை அகல இருப்புப் பாதையானது சாமல்பட்டி வழியாக செல்கிறது.

கிருட்டிணகிரி மாவட்டத்தின் விவரங்கள்[தொகு]

புவியியல் அமைப்பு[தொகு]

இது 11 ° 12 'N மற்றும் 12 ° 49' N அட்சரேகை, 77 ° 27 'E முதல் 78 ° 38' E தீர்க்கரேகை வரை அமைந்துள்ளது.

தட்பவெப்பநிலை[தொகு]

(1) சமவெளியில்:

அ. அதிகபட்சம் - 37.20 C

ஆ. குறைந்தபட்சம் - 16.40 C

மழையளவு (மி.மீட்டரில்)[தொகு]

(1) சாதாரணமாக:

அ. தென்மேற்கு பருவமழை - 399.0

ஆ. வடகிழக்கு பருவமழை - 289.4

(2) உண்மையாக:

அ. தென்மேற்கு பருவமழை - 359.1

ஆ. வடகிழக்கு பருவமழை - 442.5

விவசாய பயிரிடப்பட்ட நிலங்கள்[தொகு]

அ. மொத்த பயிரிடப்பட்ட பரப்பு (எக்டேரில்) - 2,13, 748

ஆ. நிகர பயிரிடப்பட்ட பரப்பு - 1,72,884

இ. ஒன்றுக்கு மேற்பட்ட பயிரிடப்பட்ட பரப்பு - 40,86

முக்கிய மற்றும் பகுதி பயிர்கள் உற்பத்தி பரப்பு[தொகு]

தயாரிப்பு பரப்பு (எக்டேரில்)
நெல் 20,687
கேழ்வரகு 48,944
பிற சிறு பயிர்கள் கம்பு மற்றும் இதர தானியங்கள் 11,937
பருப்பு வகைகள் 48,749
கரும்பு 50,000
மாங்காய் 30,017
தேங்காய் 13,192
புளி 1,362
பிற பயிர்கள் 43,199

விவசாய நிலங்கள்[தொகு]

அ. குத்தகை நிலங்களின் எண்ணிக்கை (2010-11) - 281392

ஆ. பரப்பு எக்டேரில் - 2,25,410

இ. குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலங்களின் சராசரி பரப்பு (எக்டேரில்) - 0.80

முக்கிய உணவுப்பயிர்கள்[தொகு]

நெல், கேழ்வரகு, சோளம், துவரை, உளுந்து, மாங்காய், தென்னை, முட்டைக்கோசு, வாழை, தக்காளி, நிலக்கடலை

பிற பயிர்கள்[தொகு]

மலர் சாகுபடி (உரோசா, மல்லிகை, முல்லை, சாமந்தி, செண்டுமல்லி), பருத்தி, காய்கறிகள் (கேரட், முட்டைக்கோசு, முள்ளங்கி, வாழை, பீன்ஸனசு, தக்காளி, கத்தாி)

நீர்ப்பாசனம்[தொகு]

அ. நிகர பாசனப்பகுதிகள் (எக்டேரில்)

(i) அரசு கால்வாய்கள் - 858

(ii) அரசுடமையல்லாத கால்வாய்கள் --

(iii) ஏரிகள் - 8192

(iv) ஆழ்துழை கிணறுகள் - 17674

(v) இதர கிணறுகள் - 41452

மொத்த நிகர பாசன வசதிபெறும் பகுதிகள் - 57268 எக்டேர்

ஆ. மொத்த பரப்பு (எக்டேரில்) - 68301

இ. ஆறுகளின் பெயர் - பெண்ணையாறு, பாம்பாறு

ஈ. ஏரியின் பெயர் - பாரூரா பெரிய ஏரி

கால்நடை வளர்ப்பு[தொகு]

அ. கால்நடை நிறுவனங்கள்

(i) கால்நடை மருத்துவமனைகள் - 2

(ii) கால்நடை மருந்தகங்கள் - 67

(iii) மருத்துவர் மையங்கள் - 1

(iஎ) துணை மையங்கள் - 22

(எ) கிராமப்புற கால்நடை மருத்துவமனைகள் - 10

காடுகள்[தொகு]

அ. காடுகள் பரப்பு (எக்டேரில்)

1. காப்பு காடுகள் - 141622.2663

2. காப்பு நிலங்கள் - 8345.37

3. இனம் பிரிக்கப்படாத காடுகள் - 54310

நீர்தேக்கங்கள்[தொகு]

கிருட்டிணகிரி அணைக்கட்டு
  1. கிருட்டிணகிரி அணைக்கட்டு நீர்த்தேக்கம்
  2. சூளகிரி-சின்னாறு நீர்த்தேக்கம்
  3. தங்கரை நீர்த்தேக்கம்
  4. பாம்பாறு நீர்த்தேக்கம்
  5. கெலவரப்பள்ளி நீர்த்தேக்கம்
  6. பாரூர் ஏரி நீர்த்தேக்கம்

இதன் மூலம் 18,965 எக்டேர் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மருத்துவம் மற்றும் சுகாதாரம் (எண்ணிக்கையில்)[தொகு]

(i) நவீன மருத்துவம்:

அ. மருத்துவமனைகள் - 6

ஆ. மருந்தகங்கள் - 4

இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள் - 56

ஈ. சுகாதார துணை நிலையங்கள் - 239

உ. இதர மருத்துவ நிறுவனங்கள் - 41

(ii) இந்திய மருத்துவம்:

அ. மருத்துவமனைகள் --

ஆ. மருந்தகங்கள் --

இ. ஆரம்ப சுகாதார நிலையங்கள்(மையங்கள்) - 23

ஈ. படுக்கை வசதி மற்றும் மருந்தகங்களுடன் இயங்கும் மருத்துவமனைகள் --

உ. சித்தா மருத்துவர்கள் - 21

ஊ. செவிலியர்கள் --

எ. சித்தா --

(iii) ஓமியோபதி::

அ. மருத்துவமனைகள் --

ஆ. மருந்தகங்கள் --

இ. ஆரம்ப சுகதார மையங்கள் - 2

ஈ. மருத்துவர்கள் - 2

உ. செவிலியர்கள் --

கல்வி[தொகு]

  • கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 10
  • பொறியியல் கல்லூரிகள் - 7
  • முதன்மை ஆரம்ப பள்ளிகள் - 32
  • ஆரம்ப பள்ளிகள் - 1281
  • இடைநிலை பள்ளிகள் - 306
  • உயர்நிலை பள்ளிகள் - 169
  • மேனிலைப் பள்ளிகள் - 108
  • ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் - 10

தகவல் தொடர்பு[தொகு]

  1. தலைமை தபால் நிலையங்கள் - 1
  2. சார் அஞ்சல் நிலையங்கள் - 38
  3. கிளை அஞ்சல் நிலையங்கள் - 263

கூட்டுறவு நிறுவனங்கள்[தொகு]

  1. முதன்மை வேளாண் கிராமப்புற மேம்பாட்டு வங்கிகள் - 3
  2. கூட்டுறவு ஐ.டி.ஐ. பர்கூர் - 1
  3. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் - 21
  4. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் - 120
  5. நகர கூட்டுறவு வங்கிகள் - 2
  6. பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் - 120
  7. உயர் பாசன கூட்டுறவு சங்கங்கள் - 1
  8. ஊழியர்கள் கடைகள் - 3
  9. வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் - 4
  10. ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு கடைகள் - 3

காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை[தொகு]

காவல்படை 23[தொகு]

  1. உள்ளுர் - 957
  2. ஆயுதப்படை - 279
  3. காவல் நிலையங்கள் (ஆண்) - 30
  4. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் - 4
  5. சிறப்பு அலகுகள் (ஆயுதப்படை உள்பட) - 19

தீயணைப்பு துறை - 7 நிலையங்கள். அவை:

  1. கிருட்டிணகிரி
  2. ஒசூர்
  3. பருகூர்
  4. போச்சம்பள்ளி
  5. ஊத்தங்கரை
  6. இராயக்கோட்டை
  7. தேன்கனிக்கோட்டை

விவசாயம்[தொகு]

மாவட்டத்தின் விவசாயத்தில்

நெல் 20,687 எக்டேரிலும், கேழ்வரகு 48,944 எக்டேரிலும், பயிறுவகைகள் 48,749 எக்டேரிலும், கரும்பு 4,078 எக்டேரிலும், மாங்கனி 30,017 எக்டேரிலும், தேங்காய் 13,192 எக்டேரிலும், புளி 1,362 எக்டேரிலும் பயிரிடப்படுகின்றன.

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

கிருட்டிணகிரி அணை பூங்கா

கிருட்டிணகிரி அணை[தொகு]

கிருட்டிணகிரி அணை கிருட்டிணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் கிருட்டிணகிரி, தருமபுரி பாதையில் அமைந்துள்ளது. இந்த அணையினால் அணையை சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

தளி[தொகு]

தளி கருநாடக மாநில எல்லையில், ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளி சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருப்பதால் இது குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.

பெட்டமுகிளாலம்[தொகு]

இது கிருஷ்ணகிரியின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உயர்ந்த மலை சிகரம் ஆகும். இந்த மலையில் தான் காவிரி வடக்கு காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அதிக அதிகளவில் காட்டு யானைகள் உள்ளது. இங்குள்ள சாமி ஏரி யானைகளின் தாகம் போக்கும் நீர் நிலை ஆகும். மாரண்டஹள்ளி சாலையில் உள்ள அண்ணாநகர் காட்சி முனையில் இருந்து பார்த்தால் மாரண்டஹள்ளி மற்றும் இராயக்கோட்டை நகரங்கள் சிறப்பாக தெரியும்.

சந்திர சூடேசுவரர் திருக்கோயில்[தொகு]

சந்திர சூடேசுவரர் திருக்கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள ஒரு பழமையான கோயிலாகும். இக்கோயில் ஒசூரின் கிழக்கே உள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தங்கத்தேர் அமைந்த ஒரே கோயில் இது ஒன்றேயாகும்.

சந்திர சூடேசுவரர் திருக்கோயிலில் உள்ள தங்கத்தேர்

.

இக்கோயிலின் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மாசிமாதம் பௌர்ணமி அன்று நடக்கிறது. அதையொட்டி 13 நாட்கள் திருவிழா நடக்கிறது. இத்திருவிழாவின் போது தமிழகம் தவிர கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் திருவிழாவில் கூடுவது வழக்கமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arab political world's uncertainty shakes Mango export of India". BBC. November 14, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 http://krishnagiri.nic.in/history.htm
  3. Krishnagiri District Revenue Administraion
  4. Local Bodis of Krishnagiri Diststrict
  5. "கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்". 2015-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  6. Panchayat Unions and Panchayat Villages
  7. Decadal Variation In Population Since 1901
  8. Krishnagiri District : Census 2011 data
  9. Elected Representatives

வெளியிணைப்புகள்[தொகு]