சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடர்வண்டி நிலையம்
ChennaiCentral2.JPG
நிலையத்தின் பிரதான நுழைவாயில்
அமைவிடம்
ஆள்கூறு 13.09°N 80.27°E
வீதி ஈ. வே. ரா. பெரியார் சாலை, பார்க் டவுண்
நகரம் சென்னை
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
ஏற்றம் MSL + 20 அடி
நிலையத் தகவல்கள் & வசதிகள்
நிலையம் வகை முனையம்
அமைப்பு தரையில் உள்ள நிலையில்
நிலையம் நிலை செயல்படுகிறது
வேறு பெயர்(கள்) மதராஸ் சென்ட்ரல்
வாகன நிறுத்தும் வசதி உண்டு
Connections டாக்சி நிறுத்தும், மாநகரப் போக்குவரத்துக் கழகம்
இயக்கம்
குறியீடு MAS
கோட்டம் சென்னை (மதராஸ்)
மண்டலம் தென்னக இரயில்வே
தொடருந்து தடங்கள் 30
நடைமேடை 17
வரலாறு
திறக்கப்பட்ட நாள் 1853[1]
முந்தைய உரிமையாளர் மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே
மின்சாரமயமாக்கல் 1931 [2]
வரைபடத்தில் அமைவிடம்
Chennai Central Station is located in Chennai
Chennai Central Station
Chennai Central Station
Chennai Central Station (Chennai)
1880ல் பக்கிங்காம் கால்வாயின் மேற்கிலிருந்து சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம், 1905

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய தொடர்வண்டி (ரயில்) நிலையங்களுள் ஒன்றாகும். இது சென்னை நகரில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் இந்தியாவின் தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்த ரயில் நிலையம் இன்று சென்னை நகரின் மிகப்பழமையான கட்டிடங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.

வரலாறு[தொகு]

சென்னையின் முதல் தொடருந்து நிலையம் இராயபுரத்தில் கி.பி. 1856-ல் அமைக்கப்பட்டது. மதராஸ்-வியாசர்பாடி வழித்தடம் உருவாக்கத்தின் சென்னையின் இரண்டாவது இரயில் நிலையமாக சென்னை மத்திய தொடருந்து நிலையம் பார்க்டவுணில் உருவாக்கப்பட்டது. இந்த ரயில் நிலையம் ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது.2019 ல் இந்நிலையம் 'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சேவைகள்[தொகு]

இத்தொடருந்து நிலையத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்களும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவிற்கு செல்லும் சில ரயில்களும் இங்கிருந்து புறப்படுகின்றன. தமிழ்நாட்டின் கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், காட்பாடி ஆகிய நகரங்களுக்கு செல்லும் ரயில்களும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. சென்னையின் புறநகர் ரயில்களும் கும்முடிபூண்டி மற்றும் திருவள்ளூர் மார்க்கத்தில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. கடற்கரை மார்க்கமாகவும் புறநகர் ரயில்கள் இயக்கபடுகின்றன.

வசதிகள்[தொகு]

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடருந்து நிலையத்தின் அருகில் பேருந்து நிலையமும், 'ஆட்டோ ரிக்சா', 'டாக்ஸி' நிறுத்தும் இடமும் உள்ளது. சீருந்து, இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டி ஆகிய வாகனங்களை நிறுத்துமிடங்களும் உள்ளன.

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய தொடர்வண்டி நிலையத்திலிருந்து புறப்படும் வண்டிகள்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இந்திய இரயில்வேயின் அதிகாரப்பூர்வத் தளம்