மைசூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மைசூரு மாநகராட்சி | |
அமைவிடம் | 12°11′N 76°25′E / 12.18°N 76.42°Eஆள்கூறுகள்: 12°11′N 76°25′E / 12.18°N 76.42°E |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மைசூரு மாவட்டம் |
ஆளுநர் | வாஜுபாய் வாலா |
முதலமைச்சர் | பி. எஸ். எதியூரப்பா |
நகரத் தந்தை | மோதாமணி |
மக்களவைத் தொகுதி | மைசூரு மாநகராட்சி |
மக்கள் தொகை • அடர்த்தி |
10,38,490 (2001[update]) • 385.4/km2 (998/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
80.5 கிமீ2 (31 சதுர மைல்) • 763 மீட்டர்கள் (2,503 ft) |
குறியீடுகள்
|
மைசூரு அல்லது எருமையூர் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூரு மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூரு நகரமே பண்டைய மைசூரு இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.இங்கு கன்னடம் பரவலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் கணிசமாக குறிப்பிட்ட தக்க அளவில் உள்ளனர்
சங்கநூல் குறிப்புகள்[தொகு]
எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூரு நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)
தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36)
இக்கால மைசூரு[தொகு]
மைசூரு அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூருவில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூரு மிருகக்காட்சிசாலை (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை. இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உள்ளது.