மைசூர் சந்திப்பு

ஆள்கூறுகள்: 12°18′59″N 76°38′43″E / 12.3163°N 76.6454°E / 12.3163; 76.6454
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மைசூர், மைசூர் மாவட்டம், கருநாடகம்
 India
ஆள்கூறுகள்12°18′59″N 76°38′43″E / 12.3163°N 76.6454°E / 12.3163; 76.6454
ஏற்றம்760 மீட்டர்
நடைமேடை6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுMYS
இந்திய இரயில்வே வலயம் தென்மேற்கு ரயில்வே
இரயில்வே கோட்டம் மைசூர்
வரலாறு
திறக்கப்பட்டது1870
ஒன்றாவது நடைமேடையில் நிற்கும் சென்னை சதாப்தி விரைவுவண்டி
Old Rakes of the சென்னை-மைசூர் சதாப்தி விரைவுவண்டி

மைசூர் சந்திப்பு தொடருந்து நிலையம், கர்நாடகத்தின் மைசூர் நகரத்தில் உள்ள தொடருந்து நிலையம். இங்கிருந்து நகரத்தின் பிற பகுதிகளுக்குச் சீரான போக்குவரத்து வசதி உள்ளது.

வசதிகள்[தொகு]

  • ஒய்-பை:

தொடருந்து நிலையத்தைசி சுற்றிலும் 200 மீட்டர் விட்டத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் ஒய்-ஃபை வசதி அமைக்கப்பட்டுள்ளது.

  • மருத்துவ மையம்:

24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவ முகாம் அமைக்கப்படவுள்ளது.[1]

சிறப்புகள்[தொகு]

மைசூர் தொடருந்து நிலையம் இந்தியாவில், பார்வையற்றவர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது தொடருந்து நிலையமாகும்.

தொடருந்து அருங்காட்சியகம்[தொகு]

இத் தொடருந்து நிலையத்துக்கு அருகில் ஒரு தொடருந்து அருங்காட்சியகமும் உள்ளது. இங்கே பழமையான தொடருந்துப் பொறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1979ல் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், தில்லியில் உள்ள இது போன்ற அருங்காட்சியகத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட இரண்டாவது அருங்காட்சியகம் ஆகும். மைசூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்ததும், அடுக்களை, கழிப்பறை ஆகியவற்றோடு கூடியதும், 1899ம் ஆண்டின் மகாராணி வண்டியும் இங்கே உள்ளது. பழைய சிறீரங்கப்பட்டினம் தொடருந்து நிலையத்துக்கு உரிய மரக் கதவுகளும், தூண்களும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_சந்திப்பு&oldid=2114311" இலிருந்து மீள்விக்கப்பட்டது