உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°58′42″N 77°34′10″E / 12.97833°N 77.56944°E / 12.97833; 77.56944
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்
Bengaluru/Bangalore City Railway Station
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பெங்களூர், கருநாடகம்
 இந்தியா
ஆள்கூறுகள்12°58′42″N 77°34′10″E / 12.97833°N 77.56944°E / 12.97833; 77.56944
ஏற்றம்896.920 மீட்டர்கள் (2,942.65 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்மேற்கு ரயில்வே
தடங்கள்சென்னை சென்டிரல்-பெங்களூர் நகர வழித்தடம்
நடைமேடை10
இணைப்புக்கள்கெம்பேகவுடா பேருந்து நிலையம், நம்ம மெட்ரோ
கட்டமைப்பு
தரிப்பிடம்Yes
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுSBC
மண்டலம்(கள்) தென்மேற்கு ரயில்வே
கோட்டம்(கள்) பெங்களூர் கோட்டம்
வரலாறு
மின்சாரமயம்Yes

பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம், கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் உள்ளது. இது பெங்களூர் நகரத்தின் ரயில் போக்குவரத்துக்கான நிலையமாகும். இது தென்மேற்கு ரயில்வேயின் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இது 10 நடைமேடைகளைக் கொண்டது. இந்திய அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் நிலையங்களில் இதுவும் ஒன்று.

நிலையம்

[தொகு]

இதில் உள்ள 1 முதல் 7 வரையிலான நடைமேடைகளில் சென்னை, சேலம் ரயில் வழித்தடங்களின் ரயில்கள் நிற்கின்றன. 8,9,10 ஆகிய நடைமேடைகளில் ஹூப்ளியில் தொடங்கி யஷ்வந்த்பூர் வழியாக வரும் ரயில்கள் நிற்கின்றன. 1 முதல் 4 வரையிலான நடைமேடைகளுக்கு வரும் ரயில்கள் பெங்களூருடன் நிற்கின்றன. 5 முதல் 10 வரையிலான நடைமேடைகளுக்கு வரும் ரயில்கள் மைசூர் வரை பயணிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் 88 ரயில்கள் வந்து செல்கின்றன. இவற்றில் 63 ரயில்கள் விரைவுவண்டி வகையைச் சேர்ந்தவை. சராசரியாக ஒவ்வொரு நாளும் 220,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.[1]

சான்றுகள்

[தொகு]