உள்ளடக்கத்துக்குச் செல்

சதாப்தி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதாப்தி விரைவு வண்டி
போபால் சதாப்தி வண்டி (இந்தியாவின் வேகமான தொடர்வண்டி)
கண்ணோட்டம்
வட்டாரம்இந்தியா
Other
இணையதளம்www.indianrail.gov.in
சதாப்தி தொடர்வண்டிகளின் வழிதடம்

சதாப்தி தொடர் வண்டி (Shatabdi Express) என்பது முக்கியமான பெருநகரங்களை மற்ற சுற்றுலா, தொழில் மற்றும் புனிதயாத்திரை ஆகியவற்றோடு தொடர்புடைய சிறு நகரங்களை இணைக்கும் பயணிகள் தொடர் வண்டி ஆகும். இவற்றை இந்திய இரயில்வே இயக்குகிறது. இவ்வகை தொடர்வண்டிகள் முழுக்க பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன மற்றும் இவை இயக்கப்படும் நாளிலேயே மீண்டும் ஆரம்ப இரயில் நிலையத்திற்குச் சென்றடையும்.

இந்தியாவின் வேகமான தொடர் வண்டிகளில் சதாப்தியும் அடங்கும். இவ்வண்டியை இந்திய இரயில்வே பெருமைமிக்கதாகக் கருதுகிறது. சதாப்தி விரைவு வண்டி குறைந்த தூரத்தில் இருந்து நடுத்தர தூரம் வரை உள்ள வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த வகை வண்டியின் சராசரி வேகம் ஒரு மணிநேரத்திற்கு 140 கி.மீ ஆகும். ஆனால் போபால் சதாப்தி 160 km/h வரை செல்லக் கூடியது. எனவே போபால் சதாப்தியே இந்தியாவின் வேகமான சதாப்தி தொடர் வண்டியாகும்.

வரலாறு

[தொகு]

சதாப்தி என்னும் சொல் சமசுகிருதம், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் நூற்றாண்டு விழா என்பதை குறிக்கும். 1988 இல் ஜவஹர்லால் நேருவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு இயக்கப்பட்டதால் இந்த தொடருந்து சதாப்தி என அழைக்கப்படுகிறது. இந்த தொடருந்து அப்போதைய ரயில்வே அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவால் ஆரம்பிக்கப்பட்டது. முதன்முதலாக புது தில்லியில் இருந்து ஜான்சி வரை இயக்கப்பட்டு பின்பு போபால் வரை நீடிக்கப்பட்டது.

தொடருந்தின் அமைப்பு

[தொகு]

போபால் சதாப்தி தான் இந்தியாவின் மிக வேகமான தொடருந்து ஆகும். இதனுடைய சராசரி வேகம் 93 km/h ஆகும். இந்த தொடருந்து ஆக்ரா மற்றும் புது தில்லி இடையே சில இடங்களில் அதன் உச்ச வரம்பு வேகமான 160 km/h எட்டக் கூடியது. இந்த தொடருந்துகள் புதிய வகை எல்.எச்.பி. கோச்சுகள் கொண்டது.

சேவை

[தொகு]

சதாப்தி தொடருந்து வேகமான சேவையை தரும் நோக்கில் சில நிறுத்தங்களையே கொண்டது. இந்த இரயிலில் முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது. மற்ற இந்தியத் தொடருந்துகளைக் காட்டிலும் சதாப்தி ரயில்கள் சிறப்பாகவே இருக்கும்.

சதாப்தி ரயில்களை எளிதாக கண்டுகொள்ள மற்ற ரயில்களில் இருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்த ரயில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு நேரத்திற்கு ஏற்றவாறு உணவு வகைகள் வழங்கப்படும். இவ்வகை ரயில்களில் முன்பதிவற்ற இருக்கைகள் இருக்காது. அதனால் இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் முன்கூட்டியே இடத்தை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.

சதாப்தி தொடர்வண்டிக்கு மாற்றாக வந்தே பாரத் வகை ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாப்தி_விரைவுவண்டி&oldid=3612030" இலிருந்து மீள்விக்கப்பட்டது