வந்தே பாரத் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வந்தே பாரத் விரைவு வண்டி
இடம்இந்தியா
இணையத்தளம்www.indianrail.gov.in

தொடருந்து 18(Train 18), என்பது வந்தே பாரத் விரைவு வண்டி எனவும் அழைக்கப்படுகின்ற[1]இந்திய நகரங்களுக்கிடையே செல்லக்கூடிய, ஒரு அதிவேக விரைவு வண்டியாகும்.[2] இந்த விரைவு வண்டியானது, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழான முன்னெடுப்பில் சென்னை, இரயில் பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் 18 மாத கால பணியின் விளைவாக உருவானது. இந்த விரைவுவண்டியின் ஒரு அலகுக்கான தயாரிப்புச் செலவினமானது ரூ.100 கோடியாகும். இருப்பினும் அடுத்தடுத்த தயாரிப்புகளின் போது இந்த தயாரிப்புச் செலவு இன்னும் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.[3]ஐரோப்பாவில் இருந்து இதனையொத்த ஒரு தொடருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் அதன் விலையோடு ஒப்பிடும் போது தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதன் விலையானது 40% குறைவானதாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.[4] இந்த விரைவுவண்டியானது தனது முதல் பயணத்தை 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் நாள் தொடங்கியது. புது தில்லியிலிருந்து வாரனாசிக்கான சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.[5] 2019 சனவரி 27 ஆம் நாளில் இந்த விரைவு வண்டியின் சேவையானது வந்தே பாரத் விரைவுவண்டி எனப் பெயரிடப்பட்டது.[6]முதல் நாள் சோதனை ஓட்டத்தின் போது, வாரணாசியிலிருந்து திரும்பிய போது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு புது தில்லியை வந்தடைந்தது. 2019 பெப்ரவரி 17 ஆம் நாள் அன்று வர்த்தகரீதியான தனது முதல் பயணத்தை வந்தே பாரத் விரைவுவண்டி தொடங்கியது.[7]


மேற்கோள்கள்[தொகு]

  1. "India's fastest to be called Vande Bharat Express". Indian Express. 28 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Train 18, India's first engine-less train, set to hit tracks on October 29", இந்தியன் எக்சுபிரசு, 24 October 2018
  3. Prabhakar, Siddarth (23 October 2018). "First Made-in-India engineless train gets on track for trial run - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/chennai/first-made-in-india-train-set-ready-for-trial-run/articleshow/66324376.cms. பார்த்த நாள்: 4 November 2018. 
  4. Arora, Rajat (16 March 2018). "Made-in-India 160 km per hour train to run from June". தி எகனாமிக் டைம்ஸ் (New Delhi, India). https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/made-in-india-160-km-per-hour-train-to-run-from-june/articleshow/63323107.cms. பார்த்த நாள்: 5 November 2018. 
  5. PTI (7 February 2019). "Train 18: PM Modi to flag off Vande Bharat Express on February 15 from New Delhi". Business Today. https://www.businesstoday.in/current/economy-politics/train-18-pm-modi-to-flag-off-vande-bharat-express-on-february-15-from-new-delhi/story/317978.html. பார்த்த நாள்: 15 February 2019. 
  6. "Minister of Railways & Coal Shri Piyush Goyal Announces 'Vande Bharat Express'". Press Information Bureau, India. 2019-01-27 அன்று பார்க்கப்பட்டது.
  7. "டெல்லி-வாரணாசி இடையே வர்த்தக ரீதியான பயணத்தை தொடங்கியது 'வந்தே பாரத்' ரெயில்". மாலை மலர். 18 பெப்ரவரி 2019. 19 பெப்ரவரி 2019 அன்று பார்க்கப்பட்டது.