சிக்கல் (ஊர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் 'சிக்கல்' என்னும் பெயர் கொண்ட ஊர் உற்றது.

சிக்கல்
சிக்கல்
இருப்பிடம்: சிக்கல்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 10°45′22″N 79°47′56″E / 10.756°N 79.799°E / 10.756; 79.799ஆள்கூற்று: 10°45′22″N 79°47′56″E / 10.756°N 79.799°E / 10.756; 79.799
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
ஊராட்சி மன்ற தலைவர் ந.ஆனந்த்
மக்களவைத் தொகுதி சிக்கல்
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


சிக்கல் (ஆங்கிலம்:Sikkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இதனை சிக்கற்பள்ளி என தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

அமைவிடம்[தொகு]

நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 6 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் அன் அளவாக 20 கி. மீ. தொலைவிலும், கீழ்வேளூர் ஊரில் இருந்து கிழக்கில் 6 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலன் முருகன் கோயில் மிகப் புகழ் பெற்றது. இங்கு சூரசம்கார விழா விமரிசையாக நடைபெறுகிறது.

பாடல் பெற்ற தலம்[தொகு]

திருஞான சம்பந்தர் இவ்வூரிலுள்ள 'வெண்ணெய்ப் பெருமான' (நவநீதேசுவரனை)ப் பாடியுள்ளார்.

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய
அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.

வரலாற்றுச் சிறப்பு[தொகு]

கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் இவ்வூருக்கு வந்து மருத்துவம் செய்துகொண்டவன்.


நிர்வாக அலகு[தொகு]

வெளி இனைப்பு[தொகு]

தமிழ்நாடு அரசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கல்_(ஊர்)&oldid=1399938" இருந்து மீள்விக்கப்பட்டது