சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். குண்டுகட் பாலியாதனார் என்னும் புலவர் இவனது பண்புகளைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] பதிற்றுப்பத்து நூலில் ஏழாம் பத்தாக உள்ள கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் செல்வக் கடுங்கோ வாழியாதன் மேலவை. அவன் வேறு, இவன் வேறு எனக் காட்டவே இவனைச் ‘சிக்கற்பள்ளித் துஞ்சிய’ என்னும் அடைமொழி தந்து குறிப்பிட்டுள்ளனர். புகழூர்க் கல்வெட்டு குறிப்பிடும் ‘கோ ஆதன் செல்லிரும்பொறை’ இந்த இருவருள் ஒருவன் எனலாம்.

புலவர் இவனைப் ‘பூழியர் பெருமகன்’ எனக் குறிப்பிடுகிறார். பொருநை ஆறு பாயும் வஞ்சி இவனது தலைநகர் என்கிறார். பகைவர்கள் தந்த திறையை நகைவர்களுக்கு (நண்பர்களுக்கு) வழங்கி மகிழ்ந்தானாம். புலவரின் சிறுமையை மதிப்பிடாமல் தன் பெருமையை எண்ணிப் புலவருக்கு யானைகளைப் பரிசாக வழங்கினானாம். மன்று நிறைய ஆனிரைகளையும், மனை மனையாக உழவர்களையும் வழங்கினானாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 387