பானாசுர சாகர் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பானாசுர சாகர் அணை

பானாசுர சாகர் அணை கேரள மாநில மின்சார வாரியத்தினால் கரமனதோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது பனமரம் ஆற்றின் துணை ஆறாகும். பனமரம் கபினி ஆற்றின் துணை ஆறாகும். பானாசுர சாகர் திட்டம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதன் நோக்கம் கக்கயம் நீர் மின் திட்டத்துக்கு தேவையான நீரை அளிப்பதும் அப்பகுதியின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதுமாகும்.

பானாசுர சாகர் அணை கல்பட்டாவிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். பானாசுர சாகர் அணை இந்தியாவிலேயே பெரிய மண் அணையாகும் (earthen dam).இவ்வணை நிரம்பும் போது பல தீவுகளை உருவாக்குகிறது. அத்தீவுகளும் பின்னனியில் உள்ள பானாசுர மலையும் அருமையான காட்சியை உண்டாக்குகின்றன.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானாசுர_சாகர்_அணை&oldid=3037613" இருந்து மீள்விக்கப்பட்டது