பூக்கோட்டேரி

ஆள்கூறுகள்: 11°32′33″N 76°01′38″E / 11.5424566°N 76.0272233°E / 11.5424566; 76.0272233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூக்கோட்டேரி
அமைவிடம்கேரளம், வயநாடு மாவட்டம், பூக்கோடு
ஆள்கூறுகள்11°32′33″N 76°01′38″E / 11.5424566°N 76.0272233°E / 11.5424566; 76.0272233
பூர்வீக பெயர்പൂക്കോട് തടാകം Error {{native name checker}}: parameter value is malformed (help)
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு13 ஏக்கர்கள் (5.3 ha)
சராசரி ஆழம்40 மீட்டர்கள் (130 அடி)
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,100 மீட்டர்கள் (6,900 அடி)
இணையதளம்http://wayanadtourism.org/explore
மேற்கோள்கள்[1]
பூக்கோட் ஏரியில் ஹேட்சரி

பூக்கோட்டேரி என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நன்னீர் ஏரியாகும் . மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பூக்கோட் ஏரி கடல் மட்டத்திலிருந்து 770 மீட்டர் உயரத்தில் பசுமையான காடுகள் மற்றும் மலை சரிவுகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு இயற்கை நன்னீர் ஏரியாகும். இது   கல்பற்றாவிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கேரளத்தின் மிகச்சிறிய மற்றும் மிக உயரத்திலுள்ள நன்னீர் ஏரியாகும்.

தோற்றம்[தொகு]

இந்த ஏரி 8.5 ஹெக்டேர் பரப்பிலும், அதிகபட்சமாக 6.5 மீட்டர் ஆழம் கொண்டதாகவும் உள்ளது. [2] வைதிரி நகரத்திற்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த ஏரி வயநாட்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்..

அம்சங்கள்[தொகு]

இந்த ஏரியானது வான்வழி பார்வையில் இந்தியாவின் வரைபடத்தை இயற்கையாகவே ஒத்ததாக உள்ளது. கேரளத்தின் காடுகளின் மலைகள் மத்தியில் அமைந்துள்ள வற்றாத நன்னீர் ஏரிகளில் இது ஒன்றாகும். பெத்தியா பூகோடென்சிஸ், பூகோட்டேரியில் மட்டுமே உள்ள ஒரு வகை சைப்ரினிடு மீன் ஆகும். இந்த ஏரியில் நீல அல்லி (புளூ லோட்டசு) மற்றும் மீன்கள் ஏராளமாக உள்ளன. இங்கு படகு வசதிகளும் உள்ளன. ஏரியைச் சுற்றியுள்ள காடுகள் பல காட்டு விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சி இனங்களைக் கொண்டுள்ளது. ஏரியில் ஆங்காங்கே அல்லிப் பூக்கள் உள்ளன. ஏரியின் நுழைவாயிலில் ஒரு கைவினைப் பொருள் கடை உள்ளது, அங்கு நீங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட சவர்க்காரம், ஆயுர்வேத மருத்துவ பொருட்கள், கைவினைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் வாங்கலாம்.

நிருவாகம்[தொகு]

இந்த ஏரி தெற்கு வயநாடு வனக்கோட்டத்தின் கீழ் உள்ளது மற்றும் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலால் வேண்டிய வசதிகள் செய்யபட்டுள்ளது. இங்கு படகு வசதி, குழந்தைகள் பூங்கா, கைவினைப்பொருட்கள் மற்றும் மசாலா பொருள் கடை மற்றும் நன்னீர் மீன்வளம் ஆகியவை இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. [3]

இங்கு எப்படிச் செல்வது[தொகு]

சாலை வழியாக: கோழிக்கோட்டிலிருந்து தே. நெ. சாலை 212 இன் வழியாக 60  கி.மீ., தொலைவில் உள்ளது. அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் தாலிப்புழா. அருகிலுள்ள தொடருந்து நிலையம்: கோழிக்கோடு தோடருந்து நிலையம் (60   கி.மீ), அருகிலுள்ள வானூர்தி நிலையம்: கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கோட்டேரி&oldid=3564509" இருந்து மீள்விக்கப்பட்டது