திருச்சூர் பூரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திரிச்சூர் பூரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருச்சூர் பூரம்
Kudamatom at thrissur pooram 2013 7618.JPG
திரிச்சூர் பூரம் மலையாளம்: തൃശ്ശൂര്‍ പൂരം
அதிகாரப்பூர்வ பெயர்திரிச்சூர் பூரம் (மலையாளம்: തൃശ്ശൂര്‍ പൂരം)
வகைஇந்து கேரள திருவிழா/திருச்சூரில் விடுமுறை நாள்
முக்கியத்துவம்இந்து கேரள திருவிழா
அனுசரிப்புகள்குடமாற்றம்
(കുടമാറ്റം),
இலஞ்ஞித்தற மேளம்
(ഇലഞ്ഞിത്തറമേളം),
வாணவெடி
(വെടിക്കെട്ട്)
நாள்கொல்ல ஆண்டு மேடம் மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாள்
திரிச்சூர் பூரத்தில் தங்கத்தால் அலங்கரிக்கப்பபட்ட யானைகளின் அணிவகுப்பு. கேரளவர்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் புகழ்பெற்றிருக்கும் பூரங்கள் இந்துக் கோயில்களை மையமாகக் கொண்ட திருவிழாக்கள்.

பூரம் (மலையாளம்:പൂരം, ஒலிப்பு [puːɾam]) என்பது இந்துப் பஞ்சாங்கத்தில் உள்ள நட்சத்திரங்களுள் ஒன்றாகும். இந்துப் பஞ்சாங்கத்தில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதோடு ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட கோயில்கள் கேரளாவில் இருக்கின்றன, இந்தக் கலவை நன்னிமித்தமான பல பண்டிகைகளுக்குள்ள பல்வேறு சாத்தியங்களை உருவாக்குகின்றன, ஒவ்வொரு கோயிலும் வேறுபட்ட நட்சத்திரங்களுக்கேற்ப வேறுபட்ட முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், பல வருடங்களுக்கும் மேலாக பூரம் நட்சத்திரம் அதனுடைய கோயில் திருவிழாக்களுடன் இணைந்து சிறப்பு வாய்ந்த முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது, முக்கியமான காரணம் என்னவெனில் இது திரிச்சூருடன் இணைந்திருப்பதே ஆகும். திரிச்சூரில் பூரம் திருவிழாவின்போது மிகப்பெரிய கூட்டம் கூடுவதால் இவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து தற்போது வேறுபட்ட பொருளைக் கொண்டதாக இருக்கிறது.

திரிச்சூர் பூரம் - கண்ணோட்டம்[தொகு]

திரிச்சூர் பூரம் இன்று சரியான விதத்தில் 'எல்லா பூரங்களின் பூரம்' என்றழைக்கப்படுகிறது, அதாவது எல்லாப் பூரங்களிலும் பெரியதும் சிறந்ததும் ஆகும். திரிச்சூர் பூரம் மலையாள நாள்காட்டியின்படி மேதம் மாதத்தில் (ஏப்ரல் மத்தியிலிருந்து மே மத்திமம் வரை) பூரம் தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லாப் பூரங்களும் பக்கத்து ஊர்கள் மற்றும் நகரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கையில் வேறு சில திருவிழாக்களையும் கொண்டாடும்படி கோரப்படுகின்றன. திரிச்சூர் நகரம் இதை நடத்துகிறது, பூரம் தினத்தின் அதிகாலை நேரத்தில் 36 மணி நேரங்களுக்கு இது நடைபெறுகிறது, பெரிய அளவிற்கான மக்களும் யானைகளும் இதில் பங்கேற்கின்றன. திரிச்சூர் பூரத்தின்போது காணப்படும் அதிகம் அலங்கரிக்கப்பட்ட யானையும், அது கேரளாவுடன் கொண்டிருக்கும் உறவும் உலகம் முழுவதிலும் தெரிய வந்திருக்கிறது. பூரம் தினத்தில் ஐம்பது (50) அல்லது அதற்கு மேற்பட்ட யானைகள் திரிச்சூர் நகரம் அல்லது வடக்குநாதன் கோயிலின் வெகு மையப்பகுதியை கடந்துச் செல்லும். பூரம் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக இந்த யானைகள் நெற்றிப்பட்டத்துடன் (அலங்கார தலையணி) அலங்கரிக்கப்பட்டிருப்பதும், கையால் போடப்பட்ட கோலங்களும், அலங்கார மணிகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவையே. இதனுடன் மேள வாத்தியமான பஞ்சவாத்யமும் சேர்ந்துகொள்கிறது, இது தீவிரமான வாசிப்பில் தொடங்கி பின்னர் முறைப்படுத்தப்பட்ட ஆனால் தொடர்ச்சியான ஒத்திசைவில் ஒலிக்கிறது. அடுத்த நாள் அதிகாலையில் நடத்தப்படும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் உலகில் வேறு எங்கும் நடத்தப்படுகின்ற வானவேடிக்கை நிகழ்ச்சிகளோடு போட்டியிடக்கூடியவை, இவை நவீன மற்றும் புதிய வானவேடிக்கை உத்திகள் எதையும் பயன்படுத்துவதில்லை.

திரிச்சூர் பூரம் - பின்னணியும் வரலாறும்[தொகு]

இந்தியா 5000 முதல் 10000 வருடங்கள் பழமையுள்ளதாகவும், பல சடங்குகள், இந்து பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகை தேதிகள் பல நூற்றாண்டு பின்னோக்கி செல்பவையாக கருதப்படுகின்ற சமயத்தில் திரிச்சூர் பூரம் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் மட்டுமே பழமை வாய்ந்தது. இது அப்போது கொச்சினை ஆண்ட சக்தன் தம்புரான் அல்லது ராஜா ராம வர்மா என்பவாரால் 1798 இல் அமைக்கப்பட்டது. தன்னுடைய புகழுக்காகவும் உறுதிக்காகவும் நன்கறியப்படும் சக்தன் தம்புரான் பாரம்பரியத்தை உடைத்து கோயில் இருக்குமிடத்தில் அவற்றின் பூரம் திருவிழாவைக் கொண்டாடுவதற்கான இடத்தை உருவாக்கினார்.

திரிச்சூர் பூரம் கொண்டாடப்படுவதற்கு முன்பாக, திரிச்சூர் தாலுக்காவில் கோடைகாலத்தின்போது கொண்டாடப்பட்ட மிகப்பெரிய கோயில் திருவிழா இந்த நகரத்திற்கும் தெற்கே 12 கிலோமீட்டரில் இருக்கும் ஆரத்துப்புழாவில் நடத்தப்படும் ஒருநாள் திருவிழாவாகும். திரிச்சூருக்கு உள்ளும் வெளியிலும் இருக்கும் கோயில்கள் பெருவானம் கிராமத்து தலைவரால் நுழைவதற்கு தடுக்கப்படும்வரை இந்த சமயச் சடங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. திரிச்சூர் மற்றும் குட்டநெல்லூர் கோயில்கள் காரணமாக ஏற்பட்ட தாமதம் இந்த மறுப்பிற்கான ஒரு காரணமாக அமைந்தது. இது திரிச்சூரில் பூரத்தைத் தொடங்கிய யோகதிரிபாத் மற்றும் குட்டாநெல்லூர் நடுவழி என்று அறியப்படுகின்ற வடக்குநாதனின் முதன்மை பூசாரியான திரிச்சூர் நடுவழிக்கு காரணமாக அமைந்தது. இரண்டு நடுவழிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் இது தன்னுடைய வசீகரத்தை இழந்துவிட்டதற்காக பழிவாங்கும் விதமாக இந்தப் பூரம் விரைவாகத் தொடங்கப்பட்டது. இது ஆட்சியாளர் இந்த உரிமையைப் பெறுவதற்கு குறுக்கிட வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. சக்தன் தம்புரான் வடக்குநாதன் கோயிலைச் சுற்றியிருந்த பத்து கோயில்களை ஒருங்கிணைத்து திரிச்சூர் பூரம் விழாவை ஒரு பெரிய மக்கள் திருவிழாவாகக் கொண்டாடும்படி உருவாக்கினார். சக்தன் தம்புரான் இந்தக் கோயில்கள் மேற்குக் குழு என்றும் கிழக்குக் குழு என்றும் பிரிக்க உத்தரவிட்டார். மேற்குக் குழு திருவம்படியாக கனிமங்கலம், லல்லூர், அயன்தோல், நெத்திலக்காவு மற்றும் முக்கியமான திருவம்படி கோயிலை உள்ளிட்டிருந்தது. பரமேக்காவு எனப்பட்ட கிழக்குக் குழு மேற்கொண்டு பரமேக்காவு கோயில், காரமுக்கு, செம்புக்காவு, சூரக்கோட்டக்காவு மற்றும் பலமுக்கம்பள்ளி ஆகியவற்றை உள்ளிட்டிருந்தது. இந்தப் பூரம் வடக்குநாதன் கோயிலை மையமாகக் கொண்டிருந்தது, எல்லாக் கோயில்களும் தங்களுடைய பூரங்களை (முழு ஊர்வலத்தை) குலதெய்வமான சிவனுக்கு மரியாதை செலுத்த அனுப்பிவைக்கப்பட்டன. தம்புரானே இந்தத் திருவிழாவையும் திரிச்சூர் பூரத்தின் முக்கியத் திருவிழாவையும் நடத்துவதாகக் கருதப்பட்டது. இதுதான் பூரம் நிகழ்ச்சியைத் தீர்மானிக்கின்ற வரலாற்றுப் பின்னணி என்பதோடு பிராமன அதிகாரத்தைக் கொண்டிருந்த திரிச்சூர் பூரத்தை சாமானிய மக்களுக்கும் திறந்துவைப்பதற்கான ஆட்சியாளரின் எதிருணர்வாகவும் இருக்கிறது.

திரிச்சூர் பூரம் பற்றிய கூடுதல் தகவல்[தொகு]

திரிச்சூர் பூரம் என்பது மேதம் மாதத்தில் (ஏப்ரல்-மே) பூரம் தினத்தன்று, நகரத்தின் மையத்திலிருந்து வலதுபக்கத்தில் இருக்கும் தெக்கின்காடு மைதானத்தில் அமைந்திருக்கின்ற வடக்குநாதன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. செல்வ வளத்தோடு அலங்கரிக்கப்பட்ட யானைகள் வடக்குநாதன் கோயிலில் கூடுகின்ற பல்வேறு அருகாமையிலிருக்கும் கோயில்களைச் சேர்ந்த மேளதாளங்கள் சூழ ஊர்வலமாகச் செல்கின்றன. மிகவும் வசீகரமான ஊர்வலங்கள் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் இருந்து திருவம்பாடி பகவதி கோயிலுக்கும், பரமேக்காவு கோயிலில் இருந்து பரமேக்காவு பகவதி கோயிலுக்கும் செல்பவை ஆகும். 36 மணிநேரங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் சிறுகுடை காட்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளை உள்ளிட்டிருக்கிறது.

அநேகமாக வேறு எந்தத் திருவிழாவும் கேரளாவில் இதுபோன்ற நம்பமுடியாத கவனத்தை இவ்வளவு மக்களிடமிருந்து பெற்றிருக்கவில்லை. இருப்பினும் வடக்குநாதனே இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் என்பதோடு தன்னுடைய இடம் மற்றும் நிலங்களை இந்தப் பெரும் நிகழ்ச்சிக்காக வழங்குகிறார். பூரம் திருவிழா வாணவேடிக்கைகளின் கண்கொள்ளாக் காட்சிகளுக்காகவும் பிரபலமானதாக இருக்கிறது. அதிகாலை நேரங்களில் தொடங்கும் வாணவேடிக்கைகள் மற்றும் கண்கொள்ளாக் காட்சிகள் மூன்றிலிருந்து நான்கு மணிநேரங்களுக்கு நீடிக்கின்றன.

இந்த வாணவேடிக்கைகளை பிரம்மாண்டமானதாகவும் மிகுந்த வண்ணமயமாகவும் நடத்துவதற்கு போட்டிபோட்டுக்கொண்டு செயல்படும் திரிச்சூர் பரமேக்காவு மற்றும் திருவம்பாடியைச் சேர்ந்த இரு போட்டிக்குழுக்காளாலும் கொண்டாடப்படுகிறது. இரு குழுவும் அதிகபட்சம் பதினைந்து யானைகள் வரை கொண்டுவருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் என்பதோடு தென்னிந்தியாவிலே சிறந்த யானையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்த ஒவ்வொரு தரப்பினராலும் எல்லா முயற்சிகளும் செய்யப்படுகின்றன. அத்துடன் மிகவும் கலாப்பூர்வமான சிறுகுடைகளுள் சில வேடிக்கை நிகழ்ச்சியின்போது யானைகளுக்கு மேலாக உயர்த்தப்படுகின்றன. அதிகாலை நேரத்தில் தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் அடுத்த நாள் காலை விடியும்வரை தொடர்ந்து நடக்கிறது.

இந்த ஊர்வலமும் ஜீவனுள்ளதாக இருக்கிறது. பஞ்சவாத்தியத்தின் பிரம்மாதமான மாயாஜால வித்தைகளான ஐந்து மேளங்கள் மற்றும் ஒரு காற்று வாத்தியத்தின் கலவை உணரப்படவேண்டியதும் அனுபவிக்க வேண்டியதும் ஆகும். கேரளாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களிலேயே திரிச்சூர் பூரம் மிகவும் கண்கொள்ளாத வண்ணமயமான விழாவாகும். இந்தத் திருவிழாவில் பல கோயில்கள் பங்கேற்கின்றன. இது ஒலி மற்றும் வண்ணத்தின் கவர்ச்சியூட்டும் வெளிப்பாடு என்பதோடு, தன்னுடைய அற்புதக் காட்சியால் இது எல்லோரையும் கவர்கிறது. கிராமத்தின் எல்லாக் கோயில்களிலும் உள்ள கடவுளர்களின் பிம்பங்கள் முக்கியமான கோயில்களுக்கு யானைகளில் எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்தத் திருவிழாவின் உச்சகட்டமாக முப்பது யானைகளின் கண்காட்சியும், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் புகழ்பெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியும் இருக்கிறது.

திரிச்சூர் பூரம் என்பது மலையாள மேதம் மாதத்தில் (ஏப்ரல்/மே) பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்ற ஒப்பிடமுடியாத கலாச்சார நிகழ்வு.

இரண்டு நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்தத் திருவிழா அலங்கரிக்கப்பட்ட யானைகளின் ஊர்வலம் மற்றும் அதிகாலை 6 மணியிலிருந்து மறுநாள் பகல்வரை தொடர்கின்ற 36 மணிநேர தொடர் காட்சியாகவும் நடத்தப்படுகின்ற ஊர்வலத்தையும் கொண்டிருக்கிறது. திரிச்சூர் பூரம் திருவிழாவில் மதம் மற்றும் சாதித் தடைகளைக் கடந்து எல்லா மக்களும் பங்கேற்கின்றனர்.

மத்தியகால பாரம்பரிய பெருவானத்தோடு உறவுகொண்டுள்ள இந்தத் திருவிழா தேவி (பெண் கடவுளர்) மற்றும் சாஸ்தா (சிவன் மற்றும் விஷ்ணுவின் தெய்வீகக் கலவை) கோயிலோடு வரம்பிற்குட்பட்டதாக இருக்கிறது. அருகாமையிலுள்ள கோயிலிலுள்ள பத்து கடவுளர்கள் திரிச்சூரின் குலதெய்வமான சிவனுக்கு தங்கள் மரியாதையை செலுத்துகின்றனர்.

வடக்குநாதன் கோயிலுக்கு நெருக்கமான பெரமக்காவு மற்றும் திருவம்பாடி ஆகியவை முதன்மைப் பங்கேற்பாளர்கள் ஆவர். மேலும் பங்கேற்பவை மற்றும் பூரத்தில் அடங்கியிருப்பவை மொத்தத்தில் எட்டு கடவுளர்களான கனிமங்கலம், கரமுக்கு-சிய்யாரம், சூரக்காட்டுக்குரா-அமாலா, லல்லூர், அய்யன்தோல், நெய்திலக்காவு-குட்டூர், செம்புக்காவு மற்றும் பனமுக்கம்பள்ளி-திரிசூர் கிழக்குக் கோட்டை ஆகியனவாகும். வடக்குநாதன் கோயிலைச் சுற்றி நீண்டுசெல்லும் தெக்கின்காடு சிறுமலை, திருவிழாவின் முக்கியத் தளம் என்பதோடு வழக்கமாக திரிச்சூர் ஸ்வராஜ் சுற்று என்று அறியப்படுகிறது.

செயற்கைக்கோள் படம்[தொகு]

குறிப்புதவிகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சூர்_பூரம்&oldid=3512061" இருந்து மீள்விக்கப்பட்டது