கடவல்லூர்
கடவல்லூர் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°41′0″N 76°5′0″E / 10.68333°N 76.08333°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூரவமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL- |
கடவல்லூர் (Kadavallur) என்பது இந்தியாவின், கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின் வடக்கே உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த சிற்றூரானது திருச்சூர் மற்றும் மலப்புறம் மாவட்டங்களின் எல்லையாகும். மேலும் இது பாலக்காடு மாவட்டத்திற்கும் மிக அருகில் உள்ளது. இது திருச்சூருக்கு 35 கி.மீ வட மேற்கிலும், குன்னங்குளத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், சங்கரங்குளத்திலிருந்து தெற்கில் 5 கி.மீ. தொலைவிலும், சல்லிசரியில் இருந்து 4 கி.மீ. தென் மேற்கிலும், பட்டம்பியில் இருந்து 14 கி.மீ. தென் மேற்கிலும் உள்ளது .
இங்கு இராமருக்கு கட்டபட்ட ஒரு பழங்கால கோயில் உள்ளது. நம்பூதிரி பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வான அன்யோனியம் என்ற வருடாந்திர வேதப் போட்டி இந்த கோயிலில் நடக்கிறது.
தொல்லியல்
[தொகு]விஷ்ணு கோயிலின் ஸ்ரீகோயிலின் (கருவறை) வெளிப்புற சுவரில் உள்ள 29 மரத்தாலான சுவர்நிலை அடுக்குப்பேழைகள் மற்றும் அதே சன்னதியில் உள்ள பிற கலைப் படைப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன, மேலும் இது இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கபட்டுள்ளது.