வைபின் கலங்கரை விளக்கம்
![]() The lighthouse in 2016 | |
கேரளம் | |
அமைவிடம் | கேரளம், கொச்சி, புத்துவேப்பி |
---|---|
ஆள்கூற்று | 9°59′54″N 76°13′18″E / 9.998397°N 76.221599°Eஆள்கூறுகள்: 9°59′54″N 76°13′18″E / 9.998397°N 76.221599°E |
கட்டப்பட்டது | 1839 (முதலில்) |
ஒளியூட்டப்பட்டது | 1979 (மாற்றம்) |
கட்டுமானம் | கறைகாரை கோபுரம் |
கோபுர வடிவம் | மாடம் மற்றும் விளக்கு கொண்ட எண்கோண கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை மற்றும் சிவப்பு கிடைமட்ட பட்டைகள், வெள்ளை விளக்கு |
உயரம் | 46 மீட்டர்கள் (151 ft) |
குவிய உயரம் | 49 மீட்டர்கள் (161 ft) |
ஒளி மூலம் | முதன்மை ஆற்றல் |
வீச்சு | 28 கடல் மைல்கள் (52 km; 32 mi) |
சிறப்பியல்புகள் | Fl (4) W 20s. |
Admiralty எண் | F0698 |
NGA எண் | 27528 |
ARLHS எண் | IND-083[1] |
வைபின் கலங்கரை விளக்கம் அல்லது கொச்சி கலங்கரை விளக்கம் [2] என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின்ன், கொச்சியில் உள்ள புத்துவேப்பில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும். தற்போதைய கலங்கரை விளக்கம் 15, நவம்பர், 1979 இல் செயல்படத் தொடங்கினாலும், கொச்சி கலங்கரை விளக்கம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கொச்சி கோட்டையில் 1839 முதல் செயல்பட்டு வந்த கலங்கரை விளக்கம் 1979 இல் புதுவேப்பிற்கு மாற்றப்பட்டது. இது கேரளத்தின் மிக உயரமான கலங்கரை விளக்கமாகும்.
தொழில்நுட்ப விவரங்கள்[தொகு]
இந்த கலங்கரை விளக்கதின் உயரம் 46 மீட்டர்கள் (151 ft) மேலும் இது இரட்டை அடுக்கு கற்காரையால் ஆனது. ஒளி கற்றை 28 கடல் மைல்கள் (52 km; 32 mi) தொலைவுவரை செல்லக்கூடியது . [3]
வரலாறு[தொகு]
கொச்சி கோட்டையின் பழைய விளக்கு[தொகு]
கொச்சி கோட்டையில் 1839 இல் ஒரு எண்ணெய் விளக்கு கொண்ட கலங்கரை விளக்கம் செயல்படத் தொடங்கியது. 1902 ஆம் ஆண்டில், புதிய விளக்கு மற்றும் பிரதிபலிக்கும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1914 இல் மாற்றங்கள் செய்யப்பாட்டுக்கு வந்தன. 1920 களில், 10 மீட்டர் உயரமுள்ள புதிய கோபுரம் அமைக்கப்பட்டது.
1936 ஆம் ஆண்டில், 25 மீட்டர் உயர எஃகு கோபுரம் ஒரு எரிவாயு விளக்குடன் நிறுவப்பட்டது. 1966 ஆம் ஆண்டில், சூரிய வால்வு எனப்படும் ஒரு புதியமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. உயரமான, பிரகாசமான ஒளி மற்றும் வானொலி கலங்கரை விளக்கத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் தீட்டபட்டன. இடப் பற்றாக்குறை இருந்த காரணத்தால் புதிய விளக்கு வைப்பின் தீவில் உள்ள புத்துவைப்பிற்கு மாற்றப்பட்டது மேலும் ரேடியோ பெக்கான் அழுகோடிற்கு மாற்றப்பட்டது. [4]
குறிப்புகள்[தொகு]
- ↑ Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). 7 February 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ிளக்
- ↑ கள்
- ↑ க்கு
வெளி இணைப்புகள்[தொகு]
- Vypin Lighthousepin Lighthouse
- கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் இயக்குநரகம்