உள்ளடக்கத்துக்குச் செல்

தேவள்ளி அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேவல்லி அரண்மனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவள்ளி அரண்மனை
தேவள்ளி அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிபிரித்தானிய-இடச்சு-போர்த்துகேய
நகரம்கொல்லம் நகரம் தேவள்ளி
நாடுஇந்தியா
ஆள்கூற்று8°54′10″N 76°34′46″E / 8.902911°N 76.579546°E / 8.902911; 76.579546
கட்டுமான ஆரம்பம்1811
நிறைவுற்றது1819
கட்டுவித்தவர்கௌரி பார்வதி பாயி

தேவள்ளி அரண்மனை ( மலையாளம்: തേവള്ളി കൊട്ടാരം ) அல்லது தேவள்ளி மாளிகை என்பது தென்னிந்தியாவின், கேரளத்தில் உள்ள ஒரு பாரம்பரிய அரண்மனையாகும். கொல்லம் நகரத்தின் தேவள்ளியில், அஷ்டமுடி ஏரியின் கரையில் அமைந்துள்ள இது கேரள மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான வரலாற்று நினைவுச்சின்னமாகும். இந்த அரண்மனையானது கௌரி பார்வதி பாயின் ஆட்சியில் 1811 - 1819க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. [1] இது கொல்லம் நகரத்தின் அடையாளம் என்று கருதப்படுகிறது. இப்போது அரண்மனையானது கொல்லம் மாவட்டத்தின் எதேசிய மாணவர் படை தலைமையகமாக பயன்படுத்தப்படுகிறது. [2] [3] அரண்மனை மற்றும் அதன் வளாகங்கள் தற்போது பொதுப்பணித் துறையின் வசமாக உள்ளது. [4] [5]

வரலாறு[தொகு]

தெவலி அரண்மனை 1900

தெவலி அரண்மனையானது கொல்லம் நகரில் அமைந்துள்ள ஒரு வகையான கட்டடக்கலை அற்புதமாகும். இது 1811 - 1819 க்கு இடையில், கௌரி பார்வதி பாயியின் ஆட்சியின்போது கட்டப்பட்டது. திருவிதாங்கூர் மன்னர்கள் பித்தானிய குடியேற்றக்காரர்ளைச் சந்திப்பதற்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கொல்லத்திற்கு வருகை தந்தபோது தெவலி அரண்மனையைப் பயன்படுத்தினர். அரண்மனையின் கட்டிடக்கலை பிரித்தானிய, இடச்சு, போர்த்துகீசியர்களின் கட்டக்கலையின் கலவையாகும். [6] [7] இந்த அரண்மனை ஒரு காலத்தில் நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. கொல்லம் அப்போது திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைநகராக இருந்தது. அரண்மனையின் மொத்த கட்டுமானமானது, செம்புரைக்கல் மற்றும் சுண்ணச்சாந்து போன்றவற்றால் ஆனது. அரண்மனையின் முக்கிய கவரும் அம்சமானது, இது அஷ்டமுடி ஏரியின் கரையில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் சாஸ்தா கோயில் உள்ளது. [8] [9]

குறிப்புகள்[தொகு]

  1. [1] Thevally Palace, Kollam
  2. [2] Infokerala - Kollam
  3. "Archived copy". Archived from the original on 9 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. [3] பரணிடப்பட்டது 2016-12-31 at the வந்தவழி இயந்திரம் Corporation of Kollam
  5. "Archived copy". Archived from the original on 9 November 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) NCC - Kollam
  6. [4] Minister visits Thevally Palace
  7. [5] Kerala Tourism - Kollam
  8. [6] Kerala Tourism - Kollam
  9. [7] Thevally Palace - Detail Information
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவள்ளி_அரண்மனை&oldid=3516232" இலிருந்து மீள்விக்கப்பட்டது