மாராரி கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Marari Beach
Maraikulam
city
A view of the sunset at the Marari beach
A view of the sunset at the Marari beach
Marari Beach is located in கேரளம்
Marari Beach
Marari Beach
Location in Kerala, India
Marari Beach is located in இந்தியா
Marari Beach
Marari Beach
Marari Beach (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°36′09″N 76°18′00″E / 9.602527°N 76.299877°E / 9.602527; 76.299877ஆள்கூறுகள்: 9°36′09″N 76°18′00″E / 9.602527°N 76.299877°E / 9.602527; 76.299877
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்Alappuzha District
Languages
 • OfficialMalayalam, English
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN688549
Telephone code91477
வாகனப் பதிவுKL-04 or KL-32

மாராரி கடற்கரை, இந்தியாவில் கேரள மாநிலம் அலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அழப்புலா நகர்பகுதியில் இருந்து 14கி.மீ தொலைவில் மராரி கடற்கரை அமைந்துள்ளது.இக்கடற்கரை சுத்தமான மணற்பாங்கான கடற்கரைப்பகுதி மேலும் வசீகரிக்கக் கூடிய மீனவ குக்கிராமமாகும்.

அமைவிடம்[தொகு]

மாராரி கடற்கரை, இந்தியாவில் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழப்புலா நகர்பகுதியில் இருந்து 14கி.மீ தொலைவில் மராரி கடற்கரை அமைந்துள்ளது. இது கேராள மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மீனவ குக்கிராம பகுதி. காஞ்சிக்குழி வட்டத்தை சார்ந்த கிராமப்பகுதி. ஆலப்புழா சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தொகுதியினை சார்ந்தது.இக்கிராமம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு வட மாராரிக்குளம் என்று மற்றொரு பெயரும் உண்டு. இக்கிராமத்திற்கு அருகில் உள்ள நகர்ப்புறப் பகுதிகள் காஞ்சிக்குழி,வைக்கம்,செர்த்தலா,ஆலப்புழா.

பயண முறைகள்[தொகு]

மாராரிக் குளத்திற்கு இரயில் மற்றும் சாலை வழி செல்லும் வசதி உள்ளது. மாராரிக் குளத்தின் இரயில் நிலையம் அதன் பெயரிலேயே அமைந்துள்ளது. S.L. புறம் வழியாக செல்லும் நெடுஞ்சாலை எண் : 47 லில் இவ்வூருக்கு செல்லும் சாலை இணைக்கப்பட்டுள்ளது. வான்வழி மார்க்கமாகச் செல்ல வேண்டும் எனில் கொச்சின் சர்வதேச விமான தளம் அடைந்து பின் சாலை வழியாகப் பயணிக்கலாம். 

மக்களின் வாழ்க்கை முறையும் தொழில் விபரமும்[தொகு]

மாராரிக்குளம் கிராமத்து மக்கள் இன்றும் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பாரம்பரிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சனல் தயாரிக்கும் தொழிலிலேயே ஈடுபடுவதால் மாராரிக்குளம் கிராமம், கயிறு மற்றும் சனல் தயாரிப்புக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது.மேலும் சுற்றுலாவிற்காக வரும் பார்வையாளர்களை கட்டண அடிப்படையில் கடலில் சிறு பயணமாக தங்கள் படகில் அழைத்து சென்று பொருள் ஈட்டி தங்கள் வாழ்க்கையை நடத்திவருகின்றனர்.[1]

மாராரியில் பார்க்க வேண்டிய மற்றும் அருகாமையில் உள்ள இடங்கள்[தொகு]

 • கொக்கமங்களம் செயின்ட் அப்போஸ்த்துலே தேவாலயம்,
 • அருந்தன்கால்,
 • பூச்சக்கால்,
 • பணவல்லி,
 • வெலோர்வட்டம்,
 • சிவன் கோயில்,
 • சேர்தலா கார்த்தியேணி கோயில்,
 • காஞ்சிகுங்க்லரா கோயில்.

காலநிலை[தொகு]

மாராரிகுளம் சீரான வெப்பமண்டல காலநிலை கொண்ட பகுதி. ஆண்டு முழுதும் மிதமான காலநிலையாகவே பெரும்பான்மையாக அமைந்திருக்கும் பகுதியாக அறியப்படுகிறது.வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய இரு பருவ மழையினைப் பெறும் பகுதி. இங்கு சராசரி மழையளவு 1100 மி.மீ.

சிறப்பு[தொகு]

National Geographic -ன் ஆய்வின்படி இக்கடற்கரை உலகின் ஐந்து முக்கிய (HAMMOCK-வலையினாலான துாங்குமஞ்சம்) ஹெமோக் கடற்கரைகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மாராரிக்குளம் கடல் பகுதியில் கட்டுமரத்தில் பயணம் செய்வது, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வதோடு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுத் திளைக்கலாம்.மேலும் இங்குள்ள CGH (Casino Group of Hotels) தங்கும் விடுதி அங்குள்ள மரபுகளின் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு விருதினை இக்குழுமம் பெற்றுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 1. http://blogs.timesofindia.indiatimes.com/footloose-and-drifting/walking-along-mararikulam-beach/
 2. http://www.thrillophilia.com/blog/must-see-indian-virgin-beaches/
 3. http://www.cghearth.com/cgh-earth/people பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம்
 4. http://www.onefivenine.com/india/villages/Alappuzha/Kanjikkuzhy/Mararikkulam-North

படங்கள்[தொகு]

சூரியன் மறையும் நேரத்தில் மாராரி கடற்கரை
மாராரி கடற்கரை 
மாலையில் மீனவர் பிடிக்கும் காட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாராரி_கடற்கரை&oldid=3480327" இருந்து மீள்விக்கப்பட்டது