ஆறாட்டு
Appearance



ஆறாட்டு (Aaraattu) என்பது இந்தியாவின், கேரளத்தின் பெரும்பாலான முக்கிய கோயில்களில் நடக்கும் பண்டிகைகளின் ஒரு முக்கிய சடங்குகளின் ஒரு பகுதியாகும். இந்த சடங்கில், அர்ச்சகர் கடவுளின் தெய்வீகச் சிலையை தன்னுடன் கொண்டுவந்து ஆற்றில் அல்லது புனித குளத்தில் நனைத்து குளிப்பாட்டுவார். இது கோவில் திருவிழாவின் இறுதியில் முக்கிய நிகழ்வாக மேற்கொள்ளப்படுகிறது.
கேரளத்தின் முக்கியமான ஆறாட்டுகளில் ஒன்றாக திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் திருவாங்கூர் அரச குடும்பத்தினரால் இது நடத்தப்படுகிறது. [1]
இந்த விழா தமிழ்நாட்டில் தீர்த்தவாரி உற்சவம் என்ற பெயரில் செய்யப்படுகிறது.