குறிஞ்சி மலை சரணாலயம்
குறிஞ்சி சரணாலயம் ( மலையாளம் : കുറിഞ്ഞിമല വന്യജീവി സംരക്ഷ്ണ കേന്ദ്രം) என்பது தென்னிந்தியாவின் . வரைபடம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் எல்லையில் கேரள மாநிலத்தின், இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் வட்டத்தில் உள்ள கோட்டகம்பூர் மற்றும் வட்டவாடா கிராமங்களில் உள்ள அருகிவரும் நீலக்குறிஞ்சி தாவரத்தைப் பாதுகாக்க சுமார் 32 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு சரணாலயம் ஆகும்.
வரலாறு
[தொகு]2006 அக்டோபர் 7, 2006 அன்று மூணாறில் நடந்த நீலகுரிஞ்சி விழாவில் கேரள வனத்துறை அமைச்சர் பெனாய் விஸ்வம் இந்த சரணாலயத்தை அறிவித்தார். 2006 ஆம் ஆண்டு குறிஞ்சி மலர்ந்த போது, நீலகுரிஞ்சிப் பூக்களைக் காண சுமார் பத்து லட்சம் (1,000,000) மக்களை மூணாறு மற்றும் பிற இடங்களிக்கு வந்தனர். [1]
இந்த சரணாலயம் இப்பகுதியின் தனித்துவமான பல்லுயிர், குறிப்பாக குறிஞ்சிச் செடி மற்றும் அதன் வாழ்விடங்களை நீண்டகாலம் பாதுகாப்பதை உறுதி செய்யும் என்று அரசாங்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமாக தனியார் பெயரில் உள்ள நிலங்கள் இந்த சரணாலயப் பகுதியிலிருந்து விலக்கப்படுகின்றன.
வனவிலங்குகள்
[தொகு]இந்தச் சரணாலயத்தில் அச்சுறுத்தளுக்கு உள்ளான யானை, காட்டெருது, வரையாடு மான் போன்ற விலங்கினங்கள் உள்ளன.
புதிய சரணாலயத்தின் அருகில் வடமேற்கில் சின்னார் கானுயிர்க் காப்பகம், மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கு வடகிழக்கில், அமராவதி காப்புக் காட்டில் உள்ள இந்திரா காந்தி கானுயிர் காப்பகம், எரவிகுளம் தேசிய பூங்கா மேற்கில் ஆனைமுடி சோலை தேசிய பூங்கா தெற்கில் பம்படம் சோலை தேசியப் பூங்கா, கிழக்கில் பழனி மலை தேசியப் பூங்கா போன்றவை உள்ளளன. இந்த ஐந்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுடன் சரணாலயம் தொடர்ச்சியாக இணைந்துள்ளது. [2] [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ Mathew Roy (7 May 2007) "Neelakurinji - generation next" the Hindu, retrieved 5/12/2007 the Hindu பரணிடப்பட்டது 1 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Government of Kerala, Forest and Wildlife Department, Notification No. 36/2006 F&WLD (6 October 2006) retrieved 5/12/2007 Kerala Gazette பரணிடப்பட்டது 30 திசம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mathew Roy (25 September 2006) "Proposal for Kurinjimala sanctuary awaits Cabinet nod", retrieved 5/12/2007 The Hindu பரணிடப்பட்டது 1 அக்டோபர் 2007 at the வந்தவழி இயந்திரம்