வில்லிங்க்டன் தீவு
தோற்றம்

வில்லிங்க்டன் தீவு, இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை தீவு ஆகும்.[1][2][3][4] இது கேரளத்தின் கொச்சி நகரத்தில் உள்ள தீவு ஆகும். இத்தீவுக்கு இந்தியாவின் வைசிராயாக இருந்த வில்லிங்டன் பிரபு பெயரால் அழைக்கபடுகிறது. இந்தத் தீவு கொச்சி ஏரியில் இருந்த சிறிய இயற்கை தீவின் மீது கட்டப்பட்டது. கொச்சி மாநகரின் துறைமுகம், தாவரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம், கொச்சி சுங்கச்சாவடி, மத்திய மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இந்திய வேளான் ஆராய்ச்சி மன்றம் மற்றும் இந்திய படையின் அங்கமான கொச்சி கடற்படைத் தளமும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[5][6]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Willingdon Island - a man-made Island in Kochi, Ernakulam". www.keralatourism.org (in ஆங்கிலம்). Retrieved 2026-08-10.
- ↑ "Loading..." www.avathi.com. Retrieved 2026-08-10.
- ↑ "Visit Willingdon Island, Kochi". Incredible India (in ஆங்கிலம்). Retrieved 2026-08-10.
- ↑ "Kochi Water Metro | Willingdon-Island". Kochi Water Metro (in ஆங்கிலம்). Retrieved 2026-08-10.
- ↑ "Cochin Port Trust, Kerala, India, Ports, CPT, Shipping, Ships, Transport, Indian, India on Internet,Careers,jobs in Cochin port trust, Daily Vessel Position, cargo, water transport, container, passenger ships, vessel,wharf".
- ↑ http://www.cochincustoms.nic.in/