குன்னத்தூர் பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குன்னத்தூர் பாடி
சிற்றூர்
குன்னத்தூர் பாடி is located in கேரளம்
குன்னத்தூர் பாடி
குன்னத்தூர் பாடி
குன்னத்தூர் பாடி is located in இந்தியா
குன்னத்தூர் பாடி
குன்னத்தூர் பாடி
Location in Kerala, India
ஆள்கூறுகள்: 11°59′0″N 75°24′0″E / 11.98333°N 75.40000°E / 11.98333; 75.40000ஆள்கூறுகள்: 11°59′0″N 75°24′0″E / 11.98333°N 75.40000°E / 11.98333; 75.40000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர் மாவட்டம்
மொழிகள்
 • அதிகாரப்பூரவமாகமலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KL

குன்னத்தூர் பாடி (Kunnathoor Padi) என்பது கேரள நாட்டார் தெய்வமான முத்தப்பனின் வரலாற்று மையமாகும். இந்த மையம் தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உடும்புமலையின் மேல் உள்ளது .

குன்னத்தூர் பாடி திருவிழா இங்கு நடத்தப்படுகிறது, ஆனால் இங்கு முத்தப்பனுக்கு எந்தக் கோவிலும் இல்லை. திருவிழா இயற்கையான முறையில் நடைபெறுகிறது, ஏனெனில், "உதிர்ந்த இலைகள், ஒரு நீரூற்று, ஒரு பெரிய மலை, ஒரு வட்ட கல், காடு, பனை மரங்கள் எனக்கு போதுமானது" என்று முத்தப்பன் கூறினார் எனப்படுகிறது.

விழா விவரங்கள்[தொகு]

திருவிழா காலங்களில், காட்டின் நடுவில் ஸ்ரீகோவில் என்று அழைக்கப்படும் ஒரு தற்காலிக மடப்புறம் அமைக்கப்படுகிறது. காடுகளின் நடுவில் ஒரு திறந்தவெளியும் குகையும் உள்ளது. மடப்புறத்தின் மேற்கு பக்கத்தில் கல் நடப்பட்ட ஒரு மண் மேடை உள்ளது. குகையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பனை மரம் உள்ளது . வடக்கு பக்கத்தில் திருவங்கடவு என்ற நீரூற்று உள்ளது. இவற்றிற்கும் அப்பால் ஆதிபாடி உள்ளது.

தாந்திரிகள் தூய்மையாக்கல் சடங்குகள் செய்கிளார்கள் (சுதி, பசுதானம், புன்யஹாம், கணபதி ஹோமம் மற்றும் பகவதிசேவா.) ஸ்ரீ முத்தப்பனின் மலையிறக்குதல் ( அழைத்தல் ) பூரளிமாலாவால் செய்யப்படுகிறது. மற்ற எல்லா மடப்புறாக்களிலும் இதை குன்னதூர்படி செய்கிறார்.

திருவபபனா மற்றும் வெல்லட்டம் ஆகியவை பல ஸ்ரீ முத்தப்பன் மையங்களைப் போல ஒரே சமயத்தில் பாடியில் தோன்றாது.

பாடியில் திருவிழாவானது தணு மாதம் முதல் மகரம் வரை (டிசம்பர் நடுப்பகுதி முதல் ஜனவரி நடுப்பகுதி வரை) நீடிக்கும்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னத்தூர்_பாடி&oldid=3042946" இருந்து மீள்விக்கப்பட்டது