கொல்லம் கடற்கரை
கொல்லம் கடற்கரை
Kollam Beach കൊല്ലം ബീച്ച് மகாத்மா காந்தி கடற்கரை | |
---|---|
Country | India |
State | கேரளா |
District | கொல்லம் மாவட்டம் |
Languages | |
• Official | மலயாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
கொல்லம் கடற்கரை (Kollam Beach) என்பது மகாத்மா காந்தி கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கடற்கரை இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் நகரத்தில் இருக்கிறது.
இக்கடற்கரையில் சர்வதேசத் தரத்துடன் கூடிய ஒரு பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்காவின் பெயர் மகாத்மா காந்தி பூங்காவாகும். இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சாகீர் உசேன், 1961 ஆம் ஆண்டு சனவரி 1, அன்று இப்பூங்காவைத் தொடங்கி வைத்தார். கேரளாவில் நீச்சல் புறக்காவல் நியமிக்கப்பட்டுள்ள சில கடற்கரைகளில் கொல்லம் கடற்கரையும் ஒன்றாகும்.[1] 2005 ஆம் ஆண்டு முதல் இக்கடற்கரையில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூலை 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி கோவளம், வார்கலா மற்றும் கொல்லம் கடற்கரைகள் மட்டுமே நீச்சல் புறக்காவல் வசதி பெற்றிருக்கும் தென் கேரளக் கடற்கரைகளாகும்.[2]
மீள்பார்வை
[தொகு]அரபிக்கடலின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள பழமையானதும் மற்றும் மிகமுக்கியமானதுமான துறைமுகம் கொல்லம் துறைமுகம் ஆகும். இத்துறைமுகத்தில் அனைத்துலக முந்திரி வர்த்தகம் நடைபெறுகிறது. 2010 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி கொச்சித் துறைமுகத்திற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய துறைமுகம் கொல்லம் துறைமுகமாகும். கொல்லம் துறைமுகம் சுதந்திரத்திற்கு முன்பு போர்த்துகீசியர், டச்சுக்காரர், மற்றும் ஆங்கிலேயர் என அடுத்தடுத்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
தங்காசெரி முனையின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் 1.8 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருக்கும் தங்காசெரி அலைதாங்கி கடற்கரை கொல்லம் துறைமுகத்தைப் பாதுகாக்கிறது. கவர்ச்சியான அமைவிடம் மற்றும் அழகான காயல்கள் கொல்லம் கடற்கரையை கேரளாவின் மிகமுக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன.
கடல்மீன் காட்சியகம்
[தொகு]கொல்லம் கடற்கரையில் 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் 22 ஆம் நாள் அன்று கடல்மீன் காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது. கேரளாவில் இவ்வகையான திட்டத்துடன் அமைக்கப்பட்ட முதலாவது கடல்மீன் காட்சியகம் இதுவாகும். கொல்லம் நகராட்சி ஆணையத்திற்காக கடற்கரையின் கிழக்குப் பக்கத்தில் துறைமுகப் பொறியியல் துறை இக்கடல்மீன் காட்சியகத்தை கட்டத்தொடங்கியது. இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மார்ச்சு மாதம் நடைபெற்றது. திட்டம் 2014 திசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது. ஒரடுக்காகக் கட்டப்படும் இக்கடல்மீன் காட்சியகத்தில் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களையும் காட்சிப்படுத்துவதற்காக 40 பெரிய தொட்டிகள் அமைக்கப்படும்.[3]
தங்கச்செரி கலங்கரை விளக்கு
[தொகு]கொல்லம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 144 அடி உயரமுள்ள கலங்கரை விளக்கு, இக்கடற்கரையின் மிகமுக்கியமான ஒரு அடையாளமாகும்.
வரலாற்றுச் சின்னங்கள்
[தொகு]இத்துறைமுகத்திற்கு அருகில் போர்த்துக்கீசியக் கட்டிடங்களின் இடிபாடுகள், டச்சுக் கோட்டைகள் மற்றும் 18 ஆம் நூற்றாண்டு தேவாலயங்கள் முதலியன அவர்களின் ஆட்சிக்கால நினைவுச் சின்னங்களாகக் காட்சி தருகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Move to post lifeguards on Kollam beach". Archived from the original on 2007-07-15. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
- ↑ "Move to post lifeguards on Kollam beach - The Hindu". Archived from the original on 15 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ A home for marine life in Kollam
புற இணைப்புகள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2012-07-24 at the வந்தவழி இயந்திரம்
படக்காட்சியகம்
[தொகு]-
கொல்லம் கடற்கரையில் கலங்கரை விளக்கு
-
தங்காசெரி அலைதாங்கி கடற்கரை
-
செயிண்ட் தாமசு கோட்டை
-
கொல்லம் கடற்கரையில் கட்டப்பட்டு வரும் கடல்மீன் காட்சியகம்
-
சலகள்ளி கேந்திரம்
-
கொல்லம் கடற்கரைக்கு அருகில் கொல்லம் மாநகராட்சியின் உடல்நலக் கழகம்