கிருஷ்ணாபுரம் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ணாபுரம் அரண்மனை
കൃഷ്ണപുരം കൊട്ടാരം
Krishnapuram palace2.jpg
கிருஷ்ணாபுரம் அரண்மனை முகப்பு
கிருஷ்ணாபுரம் அரண்மனை is located in கேரளம்
கிருஷ்ணாபுரம் அரண்மனை
கேரளம் இல் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிபதினெறகேட்டு
கேரள கலைப்பாணி
நகரம்காயம்குளம், கிருஷ்ணாபுரம், ஆலப்புழை மாவட்டம்
நாடுஇந்தியா
ஆள்கூற்று9°09′01″N 76°30′31″E / 9.1503°N 76.5086°E / 9.1503; 76.5086
கட்டுமான ஆரம்பம்1700–75 AD; 18ஆம் நூற்றாண்டில் மறுபடியும் புதுப்பிக்கப்படல்
நிறைவுற்றது1950களில் தற்போதைய புதுப்பித்தல்
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைலேட்டரைட், ரப்பிள், தேக்கு, ரோஸ்வுட், அகிலிவுட்

கிருஷ்ணாபுரம் அரண்மனை (Krishnapuram Palace) என்பது தென்மேற்கு இந்தியாயாவில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டம், ஆலப்புழை நகருக்கு அருகில் அமைந்துள்ள காயம்குளம் என்னும் இடத்தில் உள்ள ஒரு அரண்மனை மற்றும் அருங்காட்சியகம் ஆகும். இது 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் இராச்சியத்தின் மன்னரான அனிஷாம் திருநாள் மார்த்தாண்ட வர்மா (கி.பி 1729-1758) என்பவரால் கட்டப்பட்டது. இது கேரளக் கட்டிடக்கலை பாணியில் கிருஷ்ணபுரத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலுக்கு அருகில், முக்கோண முகடு, ஒடுக்கமான நடைக்கட்டு, உந்தித் தோன்றும் ஜன்னல்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டு கட்டப்பட்டதாகும். [1] [2] [3] [4] [5]

இந்த அரண்மனை கேரள மாநில தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அரண்மனையில் முன்னர் குடியிருந்த திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா போன்றோருக்கு சொந்தமான பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரண்மனை வளாகத்திற்குள் அமைந்துள்ள பெரிய குளமானது மிகவும் பிரபலமான ஒரு குளமாகும். [1] குளத்தின் அடிப்பகுதியில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் பாதையாக ஒரு சுரங்கப் பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது. [2] [5]

இந்த அரண்மனையின் கீழ்தளத்தில் 154 சதுர அடிகள் (14.3 m2) உயரம் கொண்ட காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பல கேரள பாணி ஓவியங்களில் உள்ள கஜேந்திரமோட்சம் சுவர் ஓவியம் மிகப் புகழ் பெற்றதாகும். இது கேரளத்தில் மிகப்பெரிய ஓவியம் என்று கூறப்படுகிறது. இது அரண்மனையின் தரை தளத்தின் மேற்கு முனையில் வைக்கப்பட்டுள்ளது. [2]

இரட்டை முனைகளைக் கொண்ட காயம்குளம் வாள் [6] இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முற்றப் பகுதியில் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு புத்தர் சிலைகளில் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவியல்[தொகு]

கிருஷ்ணாபுரம் அரண்மனை அப்பகுதியில் காணப்படுகின்ற அமைதியான சூழலில், காயம்குளம் நகரின் தெற்கே சுமார் 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவில் உள்ள கிருஷ்ணபுரம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலின் பெயரைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த அரண்மனை ஒரு சிறிய குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இங்கு நீரூற்றுகள், குளங்கள் மற்றும் புல்வெளிகளுடன் மொட்டை மாடி தோட்டம் ஆகியவை காணப்படுகின்றன. இது தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா) (என்எச் 66)க்கு இடது புறத்தில் ஆலப்புழையில் மாவட்டத்தில் ஓச்சிறை மற்றும் காயம்குளம் ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இது 47 கிலோமீட்டர்கள் (29 mi) ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஆலப்புழையில் இருந்து கொல்லம் செல்லும் வழியில் 47 கி.மீ. (29 மைல்) தொலைவில் இது அமைந்துள்ளது. [1] [5] [7]

வரலாறு[தொகு]

இந்த அரண்மனை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் அவர்களால் ஒடனாடு-திருவிதாங்கூர் 1746 ஆம் ஆண்டு போரில் ஓடனாட்டை தோற்கடித்து இணைக்கப்பட்ட பின்னர் கட்டப்பட்டது. அரண்மனையை நிர்மாணிப்பதற்கு முன்பு, மன்னர் அந்த இடத்திலுள்ள முந்தைய அரண்மனையை இடித்தார். இது ஓடனாடு மன்னர் வீர ரவி வர்மா (கி.பி 1700–1775 ஆட்சி) என்பவரால் முதலில் கட்டப்பட்டது ஆகும். [5]

கட்டிடக்கலை[தொகு]

கிருஷ்ணபுரம் அரண்மனை, பொதுவாக கேரள-பாணி கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த மற்றும் அரிதான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இது உள்ளூர் மொழியில் பதின்றுக்கெட்டு என்று அழைக்கப்படுகிறது, இது முக்கோண முகட்டுக் கூரைகள், ஒடுக்கமான நடைக்கட்டு மற்றும் உந்தித் தோன்றும் ஜன்னல்களைக் கொண்டு அமைந்துள்ளது. திருவாங்கூர் மன்னர்களின் தலைமையகமாக இருந்த பத்மநாபுரம் அரண்மனையின் சிறிய அளவிலான அரண்மனையாக இதனைக் கொள்ளலாம். [1] [2]

சேகரிப்புகள்[தொகு]

தற்போது ஒரு தொல்பொருள் அருங்காட்சியகமாக செயல்படும் இந்த அரண்மனை வளாகத்தில், பண்டைய ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள், நாணயங்கள், மெகாலித்திக் காலத்தைச் சேர்ந்த எச்சங்கள், மரத்தால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள், பித்தளை மற்றும் கல் சிற்பங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் உள்ள சில முக்கிய காட்சிப்பொருள்காக கஜேந்திர மோட்ச சுவரோவியம், காயம்குளம் வாள், 10 ஆம் நூற்றாண்டின் புத்தரின் சிலை மற்றும் சடங்கு பாத்திரங்கள் உள்ளிட்ட பல கலைப்பொருட்களைக் கூறலாம்.[1] [2] [8] [9]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Krishnapuram Palace". Archaeology Department of Government of Kerala. 22 January 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 File:Gajendramoksham.jpg: Official plaque at the Palace Complex
  3. "Krishnapuram Palace and Archeological Museum, Kayamkulam, Alappuzha (Alleppey) Kerala, India". alappuzhaonline.com. 19 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Krishnapuram Palace Alappuzha". keralafreelisting.com. 19 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 5.3 "A monument from a glorious past". The Hindu. 21 October 2006. 9 நவம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 March 2011 அன்று பார்க்கப்பட்டது. பிழை காட்டு: Invalid <ref> tag; name "Hindu" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "Hindu" defined multiple times with different content பிழை காட்டு: Invalid <ref> tag; name "Hindu" defined multiple times with different content
  6. "Kayamkulam vaal", Wikipedia (ஆங்கிலம்), 2019-09-30, 2020-01-01 அன்று பார்க்கப்பட்டது
  7. "Krishnapuram Palace". Kerala Tourism. 20 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  8. Citralakṣaṇa : a treatise on Indian painting. Saraswat Library. https://books.google.com/books?id=E2IlAAAAMAAJ. பார்த்த நாள்: 20 March 2011. 
  9. A social history of India. APH Publishing. https://books.google.com/books?id=Be3PCvzf-BYC&pg=PA131. பார்த்த நாள்: 20 March 2011. 


வெளி இணைப்புகள்[தொகு]