வெள்ளரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளரிமலை (Vellarimala) என்பது இந்தியாவின், கேரளத்தில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும், இது கோழிக்கோடு மாவட்டத்தின் திருவம்பாடி பஞ்சாயத்து மற்றும் வயநாடு மாவட்டத்தின் மெப்பாடி பஞ்சாயத்து பகுதிகள் முழுவதும் பரவியுள்ளது. [1]

விளக்கம்[தொகு]

வெள்ளரிமலை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஒட்டகத்திமில் மலைகள் என அழைக்கப்படும் உயரமான மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். மலைத்தொடரின் பெரும்பகுதி தெற்கு வயநாடு கோட்டத்தின் மெப்பாடி வனக் சரகத்தில் வருகிறது, சில பகுதிகள் கோழிக்கோடு கோட்டதின் தாமரசேரி சரகத்தில் வருகிறது. இவை சாலியார் பள்ளத்தாக்கால் பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டின் நீலமலைகளுடன் அரைகுறையாக ஓட்டியுள்ளன. வயநாட்டின் பீடபூமி இந்த மலைகளின் கிழக்கு சரிவுகளில் அமைந்துள்ளது மற்றும் படிப்படியாக மைசூர் பீடபூமியுடன் இணைகிறது. கோழிக்கோட்டிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள அனக்காம்போயில் என்ற சிறிய நகரத்திற்கு அருகிலுள்ள முத்தப்பன்புழாவிலிருந்து இந்த மலைத்தொடர்களுக்கு நடத்தே செல்லலாம்.   முள்ளப்பன்புழாவிலிருந்து வெள்ளளரிமலைக்கு செல்லும் வழியில் ஆறு கி.மீ. தொலைவில் ஓலிச்சுச்சட்டம் என்ற அருவி உள்ளது. இது   திருவம்பாடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கேரள போக்குவரத்துக் கழக பேருந்துகள் திருவம்பாடியில் இருந்து அனக்கம்போயில் மற்றும் முத்தப்பன்புழா வரை செல்கின்றன. ஸ்வர்கம் குன்னுவும் இங்கு அமைந்துள்ளது. வெள்ளரிமலை - ஸ்வர்கம் குன்னு - மஸ்தகப்பாரா - ஒலிச்சுச்சட்டம் - மரிப்புழா - முத்தப்பன்புழா மலையேற்றம் வனதுதுறை அனுமதியுடன் மேற்கொள்ளலாம். இப்போது திருவாம்படியில் இருந்து மரிப்புழா வரை சாலை வசதி உள்ளது.

இது 1200 மீ -2000 மீட்டருக்கு இடையிலான உயரமான மலைகளின் தொகுதி, இதில் உள்ள தாவர, விலங்குகள் நீலகிரி மலைகளை ஒத்திருக்கிறது.

இந்த மலைப் பகுதியின் மிக உயரமான சிகரம் வவுல் மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சிகரம் 7677 அடி (2339 மீ) உயரம் கொண்டது, இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில், நீலகிரி மலையின் வடக்கே உள்ள மிக உயரமான சிகரமாகும். [2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளரிமலை&oldid=3592076" இருந்து மீள்விக்கப்பட்டது