சங்குமுகம் கடற்கரை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation
Jump to search
சங்குமுகம் கடற்கரை இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை. இது திருவனந்தபுரம் நகரத்திற்கு மேற்கே 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மிக அருகில் இது உள்ளது. இது திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா இடமாகும்.
நட்சத்திர வடிவிலான உணவகம் ஒன்றும் நீர்ச்சறுக்கு பயிற்றுவிக்கும் பள்ளியும் இங்கு உள்ளன.
சலகன்னிகை எனப்படும் சிற்பம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது 35 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது. இதைச் செதுக்கிய சிற்பி கானாயி குஞ்ஞிராமன் சென்னைக் கலைக்கல்லூரியின் பழைய மாணவராவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்குமுகம்_கடற்கரை&oldid=3037575" இருந்து மீள்விக்கப்பட்டது