இடுக்கி அணை
இடுக்கி அணை | |
---|---|
இடுக்கி அணை | |
அமைவிடம் | இடுக்கி மாவட்டம், கேரளம், இந்தியா |
நிலை | செயல்பாட்டில் உள்ளது |
கட்டத் தொடங்கியது | 30 ஏப்ரல் 1969 |
திறந்தது | பெப்ரவரி 1973 |
உரிமையாளர்(கள்) | கேரளா மின்சார வாரியம் |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | பெரியாறு |
உயரம் | 168.91 m (554 அடி) |
நீளம் | 365.85 m (1,200 அடி) |
கொள் அளவு | 4,50,000 cu.m |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 1,996,000,000 m3 (1,618,184 acre⋅ft) |
செயலில் உள்ள கொள் அளவு | 1,459,000,000 m3 (1,182,831 acre⋅ft) |
செயலற்ற கொள் அளவு | 536,000,000 m3 (434,542 acre⋅ft) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 649.3 km2 (251 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 60 km2 (23 sq mi) |
இயல்பான ஏற்றம் | 732.62 km2 (283 sq mi) |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 1975 |
சுழலிகள் | 6 x 130 MW |
நிறுவப்பட்ட திறன் | 780 MW |
இடுக்கி அணை கேரள மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை 839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட அணையாகும். ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (arch dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணையாகும்[1]. இந்த அணையின் கட்டுமானப் பணியானது 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1973ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.[2] இதன் உயரம் 167.68 மீட்டர்கள். இந்த அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியுடையது. இந்த அணையில் தேக்கப்படும் நீர் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. மின் உற்பத்திக்குப்பிறகு நீரானது அரபிக்கடலில் கலக்கிறது.
சுற்றுலா வசதி
[தொகு]இந்த அணையைச் சுற்றிப் பார்க்கப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஓணம், புத்தாண்டு தினம் என்று ஆண்டுக்கு இரு நாட்கள் மட்டும் அணையைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.இந்த நாட்களில் அணையைப் பார்ப்பதற்குப் பெரியவர்களுக்கு ரூ. 10, சிறியவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணமாகப் பெற்றுக் கொள்கின்றனர். இங்கு ஐந்து நபர்கள் அமர்ந்து கொள்ளும் வசதியுடைய விரைவுப் படகுச் சவாரி செய்வதற்கு ரூ. 300 கட்டணமாகப் பெறப்படுகிறது.
குறத்தி மலையில் சிறிய குகை ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. குறவன் மலையிலும் ஒரு குகை வெட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பயன்பாட்டில் இல்லை. குறவன் மலையின் மறுபுறம் செறுதோணி அணை உள்ளது. இவை இரண்டும் தடுப்பதால் உருவாகும் நீர்த்தேக்கம் இடுக்கி நீர்த்தேக்கம் எனப்படுகிறது.
மின் உற்பத்தி
[தொகு]கேரள அரசின் மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு இடுக்கியில் உள்ள மூலமட்டம் பகுதியில் உள்ள நீர்மின்நிலையத்தில் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் 4ஆம் நாள் முதல் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.[3]. இந்த நீர் மின் உற்பத்தி நிலையம் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
புவியியல்
[தொகு]இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணையின் மின்னுற்பத்தி நிலையம் மூலமட்டம் என்னும் இடத்தில் உள்ளது. இது அணையில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தினமணி 09 செப்டம்பர் 2013
- ↑ "'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை: கேரளாவில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை திறக்கப்படுகிறது". செய்தி. இந்து தமிழ். 2 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2018.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-19. பார்க்கப்பட்ட நாள் 2008-11-25.