மீனுளியன் பாறை

ஆள்கூறுகள்: 10°00′08″N 76°51′34″E / 10.002335°N 76.859363°E / 10.002335; 76.859363
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனுளியன் பாறை
MeenuliyanPara1.JPG
மீனுளியன் பாறையின் உச்சியின் தோற்றம்
உயர்ந்த இடம்
உயரம்1,220 m (4,000 ft)
ஆள்கூறு10°00′08″N 76°51′34″E / 10.002335°N 76.859363°E / 10.002335; 76.859363
புவியியல்
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
ஏறுதல்
எளிய அணுகு வழிHike

மீனுளியன் பாறை (Meenuliyan Para) அல்லது மீனுளிஞ்ஞன் பாறை (മീനുളിയന് പാറ) என்பது இந்திய மாநிலமான, கேரளத்தில், இடுக்கி மாவட்டத்தில், தொடுபுழாவுக்கு அருகே அமைந்துள்ள மலைச் சிகரமாகும். மீனுளியன் பாறை என்பது 4000 அடிக்கு மேல் உயர்ந்த ஒரு பெரும் பாறையின் மேல் சுமார் இரண்டு ஏக்கர் பசுமையான காடு செழித்துள்ளது. இந்த பாறைக் குன்று 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த பிரம்மாண்டமான பாறைக் குன்றின் மேற்பரப்பு மீன் செதில்கள் போல தோற்றமளிக்கிறது, எனவே இந்த குன்று 'மீனுளியன் பாறை' என்ற பெயர் பெற்றது. [1] மீனுளியன் பாறையின் உயரமான சிகரங்கள் மழை நாட்களில் மூடுபனியால் மூடப்பட்டிருக்கும், ஆனால் தெளிவான வானிலை நிலவும் நாட்களில் கீழ் பெரியார் பகுதி, பூதத்தங்கெட்டு மற்றும் எர்ணாகுளம் போன்ற பகுதிகளின் உயரமான பகுதியில் இருந்து இது தெரியும். மீனுளியன் பாறை   மூவாற்றுப்புழையிலிருந்து 47 கி.மீ தொலைவிலும்,   தொடுபுழாவிலிருந்து 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் வன்னப்புரம் பஞ்சாயத்தில் உள்ள பட்டாயக்குடியில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவு கொண்ட ஒரு நடை பாதையில் மட்டுமே மீனுளியன் பாறையை அடைய முடியும். கொச்சி துறைமுகம் மற்றும் திருச்சூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் மீனுளியன் பாறையின் மேலிருந்து காண இயலும். [2]

மீனுளியன் பாறையின் மேல் உள்ள தாவரங்கள்

குறிப்புகள்[தொகு]

  1. "Meenuliyan Para | Gods Own Idukki". 2017-02-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-01-27 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2014-02-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2020-01-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனுளியன்_பாறை&oldid=3567802" இருந்து மீள்விக்கப்பட்டது