ஆறன்முளா படகுப்போட்டி

ஆள்கூறுகள்: 9°19′40″N 76°41′18″E / 9.32778°N 76.68833°E / 9.32778; 76.68833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறன்முளா படகுப்போட்டி
ஆறன்முளா உத்திரட்டாதி படகுப் போட்டி
நிகழ்நிலைசெயல்பாட்டில்
வகைதிருவிழா
நாட்கள்மலையாள நாட்காட்டியில், சிங்கம் மாதத்தில் உத்தத்திரதி நட்சத்திரத்தில் (அதன்படி ஆகஸ்ட் / செப்)
காலப்பகுதிஆண்டுதோறும்
நிகழ்விடம்பம்பை ஆறு, ஆறன்முளா பார்த்தசாரதி கோயில்
அமைவிடம்(கள்)ஆறன்முளா
பத்தனம்திட்டா மாவட்டம், கேரளம்
ஆள்கூறுகள்9°19′40″N 76°41′18″E / 9.32778°N 76.68833°E / 9.32778; 76.68833
நாடு இந்தியா
துவக்கம்1972
முந்தைய நிகழ்வு15 செப் 2019
அடுத்த நிகழ்வு04 செப் 2020
ஆறன்முளா படகுப்போட்டி 2020 has started. (refresh)
ஆறன்முளா உத்தத்திரதி ஜலோத்சவ கமிட்டி
வலைத்தளம்
aranmulavallamkali.com

ஆறன்முளா படகு பந்தயம் (Aranmula Boat Race) என்பது இந்தியாவின் தென்மேற்கு மாநிலமான கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஓணம் விழாவை (ஆகஸ்ட்-செப்டம்பர்) ஒட்டி நடைபெறும் ஆற்றுப் படகு போட்டியாகும். இது கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலுக்கு அருகிலுள்ள ஆறன்முளாவில் நடைபெறுகிறது. இது ஒரு பந்தய நிகழ்வு என்பதை விட அர்ஜுனனின் பிறந்த நாளில் நடத்தப்படும் ஒரு சடங்கு ஆகும். பாம்பு படகுகள் ஜோடிகளாக பாடும் தாளத்திற்கு ஏற்ப நகர்கின்றன.[1] 1972 ஆம் ஆண்டில், திருவிழாவின் நிகழ்ச்சியில் பாம்பு படகு பந்தயங்களும் சேர்க்கப்பட்டன. படகு பந்தயங்களைக் காண பம்பா ஆற்றின் கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். 2019 ஆம் ஆண்டில் ஐம்பது இரண்டு பாம்பு படகுகள் அல்லது பள்ளியோடங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டன. படகை செலுத்துபவர்கள் வஞ்சிப்பாட்டு என்னும் பாரம்பரிய படகு பாடல்களைப் பாடுகிறார்கள், வெள்ளை முண்டு மற்றும் தலைப்பாகைகளை அணிவார்கள். படகின் முகப்பில் உள்ள தங்க சரிகை, கொடி மற்றும் மையத்தில் அலங்கார குடை ஆகியவை போட்டியின் ஒரு காட்சியாக அமைகின்றன.

ஆறன்முளா கோயில்[தொகு]

ஆறன்முளா கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 128  கி.மீ. தொலைவில் உள்ளது. இது கேரளத்தின் பதனம்திட்டா மாவட்டத்தில் பம்பா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆறன்முளாவில் உள்ள புகழ்பெற்ற கோயில் அர்ஜுனனினுக்கு தேரோட்டியான கிருஷ்ணனான பார்த்தசாரதிக்கு கட்டபட்டுள்ளது. தோராயமாக இந்த கோயிலின் வயதை 1700 ஆண்டுகள் என குறிப்பிடுகின்றனர்.

பள்ளியோடங்கள் (பாம்புப் படகுகள்)[தொகு]

ஆறன்முளா உத்ரததி படகு பந்தயம்

பள்ளியோடங்கள் என்பவை ஆறன்முளாவின் தனித்துவமான பாம்பு படகுகள் ( சுண்டன் வள்ளம் ) இதை பக்தர்கள் பயபக்தியுடன் வைத்திருப்பார்கள். இந்த பள்ளியோடங்கள் பம்பா ஆற்றங்கரோரம் உள்ள வெவ்வேறு கரைகளைச் (கிராமியப் பகுதிகள்) சேர்ந்தவை. ஒவ்வொறு படகிலும் வழக்கமாக 4 படகு இயக்குநர்கள், துடுப்பு போடுபவர்கள், பாடகர்கள் இருப்பார்கள். இந்த படகுகள் தங்கச் சரிகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இவற்றில் ஒரு கொடியும், இரண்டு அல்லது மூன்று அலங்கார குடைகள் இருக்கும்.

கட்டுமானம்[தொகு]

முதலில்ல் பொருத்தமான மரத்தை கண்டுபிடிப்பர் அஞ்சிலிக்கு முன்னுரிமை அளிக்கபடும். அதை வெட்டி, படகு கட்டும் இடத்திற்கு கொண்டு வருவது முதல் படியாகும். பின்னர் ஒரு நல்ல நாளில், நல்ல நேரத்தில் வேலைகளைத் தொடங்குவர். இவை அனைத்தும் மரப் படகுகளை கட்டுவது பற்றிய பழங்கால வேத நூல்களின்படி நடக்கும். இந்த படகுகள் சுமார் 100 முதல் 138 அடி நீளம் கொண்டவை. படகின் பின்பாகம் 20 அடி உயரத்தில் இருக்கும். முன்பாகம் நீளத்தில் கூர்மையாக இருக்கும். படகு வேலை முடிந்ததும் அது ஒரு பாம்பை ஒத்திருக்கும். இதன் மேல்புறமானது துல்லியமாக 83 அடி நீளமும் ஆறு அங்குல அகலமும் கொண்ட பலகைகளால் கட்டப்பட்டிருக்கும்.

பாம்பு படகு பராமரிப்பு[தொகு]

படகானது நீரில் ஊறாமல் இருக்கவும் படகைச் செலுத்தும் போது நீருடன் உராய்வதால் ஏற்படும் எதிர்விசையைக் குறைக்கவும் வள்ளத்தின் வெளிப்புறம் மீன் எண்ணெய், தேங்காய் ஓட்டின் சாம்பல், முட்டை ஆகியவற்றைப் பூசுவர். மேலும் கிராம தச்சர் வருடாந்திர பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்கிறார். மக்கள் தங்கள் படகு குறித்து பெருமை கொள்கிறார்கள். ஒவ்வொரு படகும் ஒரு கிராமத்திற்கு உரித்தானது.

பாம்பு படகில் ஏறுதல்[தொகு]

 1. கிராமத்து ஆண்கள் மட்டுமே படகில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
 2. உடை. வெள்ளை வேட்டி ( முண்டு ) மற்றும் தலைப்பாகை .
 3. சட்டையும், பாதணிகளும் அணிவதில்லை.

பாரம்பரியமாக படகானது ஒரு கார்னவன் / காரணாதன் (கிராமத் தலைவர்) கட்டளையியிலும், மேலும் அவரின் கீழ் 12 அடி நீளமுள்ள பிரதான சுக்கான்-துடுப்பைக் கொண்ட ஓருவரும் (அடனயம்பு), படகின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூன்று முக்கிய படகு இயக்குநர்களும் இருப்பார்கள் . படகில் நீளவாக்கில் வரிசைக்கு இரண்டு பேராக துடுப்புபோடுபவர்கள் உட்கார்ந்திருப்பார்கள், அவர்கள் வஞ்சிப்பட்டு ( படகின் பாடல்) தாளத்தில் இயங்குவார்கள். படகின் நடுவில் மேடையில் நின்று, முக்கிய பாடகர் வஞ்சிப்பட்டுக்கு தலைமை தாங்குவார் . ஒரு சில பாடகர்கள் முதன்மைத் தலைவருடன் இருப்பார்கள்.

விழாக்கள்[தொகு]

பாரம்பரியங்கள் நிறைந்த பல வண்ணமயமான திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆறன்முளா கோவிலில் நடத்தப்படுகின்றன. மிக முக்கியமான திருவிழா பாரம்பரிய பள்ளியோடம் திரளணி (படகு திருவிழா) ஆகும். பள்ளியோடங்கள் கலந்துகொள்ளும் மூன்று முக்கியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் புனிதமான சமய வழக்கமே அல்லாமல் போட்டிகள் அல்ல.

திருவோணம்[தொகு]

திருவணம் நாளை கேரள மக்கள் விருந்துடன் கொண்டாடுகிறார்கள். கட்டூரிலிருந்து திருவோணத்தோனி (சிறப்பு படகுகள்) வருவதுடன் ஆறன்முளா கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. ஆறன்முளாவில் இறைவனுக்கு திருவோணம் நாளுக்கான ஆடம்பரமான உணவுக்காக, தேவையானவற்றைக் கொண்ட ஒரு படகு, அணையா விளக்குடன், கட்டூரில் உள்ள கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு தனது பயணத்தை தொடங்கும். இது மறுநாள் அதிகாலை 4 மணிக்கு (திருவோணம் நாள்) ஆறன்முளா கோவிலை அடையும். மாலை 6 மணியளவில் கட்டூரில் உள்ள கோயிலில் நீளமான பிரதான சுக்கான்-துடுப்பு (அடனாயம்பு) வழங்கப்படும், பின்னர் அது முதன்மை படகு தலைவரிடம் ஒப்படைக்கப்படும். 18 நபர்களுடன் மங்காடு இல்லத்தின் திரு பட்டாத்திரி படகில் ஏறுவார். படகு ஆறன்முளாவுக்கான பயணத்தைத் தொடங்கும். நீரோட்டத்தின் வேகத்திற்கு ஏற்ப படகு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகசுவரத்தின் ஒலி தொலைவிலிருந்து கேட்க இயலும். வயது, சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஆற்றங்கரையில் ஒன்றுகூடி திருவோணத்தோணியை வரவேற்று ஆற்றில் ஒளிரும் விளக்குகளை மிதக்கவிடுவார்கள். இந்த திருவோணதோணியைப் பாதுகாப்பதற்காக பள்ளியோடங்கள் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே திருவோணம் நாளின் அதிகாலையில் இந்த பள்ளியோடங்கள் அனைத்தும் திருவோணதோணோயுடன் வரும்.

உத்திரட்டாதி[தொகு]

பாண்டவர்களால் தெற்கில் புனிதப்படுத்தப்பட்ட சிலை நிறுவப்பட்ட ஆண்டு நிறைவு நாள் 'உத்திரட்டாதி' என்று கருதப்படுகிறது. எனவே, அன்று, ஆறன்முளா கோயிலுக்கு முன்னால் ஒரு பாம்பு படகு திரளணி இருக்கும்.

ஆறன்முளா வல்லசத்யா[தொகு]

ஒரு பொதுவான ஓணம் விருந்து. ஓணம் கேரளாவின் முக்கிய பண்டிகை.

மற்றொரு முக்கியமான நிகழ்வு ஆறன்முளா வல்லசத்யா (விருந்து). இது பார்த்தசார்த்தி கோயில் வளாகத்திலும் அருகிலுள்ள சாப்பாட்டு மண்டபம் மற்றும் அரங்கத்திலும் பாம்பு படகுகளைச் செலுத்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது சூலை நடுப்பகுதியில் (கார்கிடகம்) தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். (கன்னி மாதம்) அஷ்டமி ரோகினியின் பெருவிருந்து தவிர 2008 இல் 254 வல்லசத்தியாக்கள் நடைபெற்றன. இந்த நெடு விருந்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50,000 பேர் கலந்துகொள்கின்றனர். சத்யாவில் பின்வரும் உணவுகள் உட்பட்டவை பரிமாறப்படுகின்றன.

அடபிரதமன், அரவண பாயசம், அவல், அவியல், நேந்திரம் சிப்சுக்கள், மிளகாய் சட்னி, சுக்கு வெள்ளம், தயிர், எள்ளுருண்டை, வறுத்த வாழை, நெய், இஞ்சி கறி, பம்பா ஆற்று புனித நீர்; காலன், காலிபழம் பயாசம், கற்கண்டு, கடலை பிரதமான், கிச்சடி, மாங்கறி, முந்திரி பச்சடி, ஓலன், பச்சடி, பால் பயாசம், பச்சமோரு; புலிசெர்ரி, ரசம், சிவப்பு சீரா தோரன், சாம்பார், தகர தோரன், உன்னியப்பம்.

செப்டம்பர் 2016 இல் பங்கேற்ற பள்ளியோடங்கள்[தொகு]

(படகில் பயணித்துவந்த அதிகபட்ச ஆடவர்களுடன் பாம்பு படகுகளின் மொத்த நீளமும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. )

 1. அராட்டுப்புழா . (139 ,. . )
 2. அய்ரூர் (125, 143 ')
 3. சென்னிதலா . (80, 117).
 4. செருகோல் ஸ்ரீ பத்மநாப தசா பள்ளியோடம். (110, 99 ')
 5. எடநாடு. (.., 146)
 6. எடப்பாவூர். (110, 123)
 7. எடப்பாவூர் –பேரூர் (110, 142 ')
 8. எடசெரிமல . (.., 139).
 9. எடசெரிமலா - கிழக்கு .. (85, 139).
 10. எடயரன்முலா . (140
 1. எடயரன்முலா- கிழக்கு. (100, 146 ')
 2. கடப்ரா . (. .,. . )
 3. கீழ்வன்மொழி (110, 139)
 4. கட்டூர் (80, 140 ')
 5. கீழுக்கரா. (135, 142 '). மிக உயரம் 20 ', இது மிக நீளமானது
 6. கோடியாட்டுக்கரா. (80 ,. . )
 7. கொய்பிராம் (100, 139). 84 வயது.
 8. கோட்டத்தூர் . (60 ,. . )
 9. கோழஞ்சேரி (100, 133 ')
 10. குரியன்னூர் . (100, 139 ')
 11. லஹா. (95, 140 ')
 12. மலாக்கரா (110, 143 ')
 13. மல்லப்புழசேரி (.., 99 ')
 14. மங்களம். (85 ,. . )
 15. மெலுகரா (.., 142 ')
 16. மராமோன் . (100, 142)
 17. முண்டன் காவு (112,…). நூறு வயது.
 18. முத்துவழி. (65 ,. . )
 19. நெடும்பரையர். (.., 142 ')
 20. நெல்லிக்கல், (.., 137 ')
 21. ஒதாரா (81, 124 ')
 22. பூவத்தூர் கிழக்கு. (77, 124)
 23. பூவதூர் மேற்கு (104, 129 ')
 24. பிரயார்
 25. புன்னம்தோட்டம் (140, 144 ')
 26. ரண்ணி . (.., 121 ')
 27. தெக்கேமுரி (112, 137 ')
 28. தொட்டபுழசேரி . (85 ,. . )
 29. தைமரவும்காரா. (64, 124)
 30. உமயாட்டுக்கரா. (110, 120 ')
 31. வான்மழி. (70, 120).
 32. வென்பலா (.., 125 ')
ஆறன்முளா படகுத் திரளணி (வள்ளம் களி) என்பது ஆறான்முளா மட்டுமல்லாது ஒட்டுமொத்த கேரள மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. The கேரளம் Companion, கேரளம் Tourism Dept. Page 40.

கேரளத்தின் பிற புகழ்பெற்ற படகு பந்தயங்கள்[தொகு]

 • ஜனாதிபதியின் கோப்பை படகுப் போட்டி
 • சம்பக்குளம் மூலம் படகு பந்தயம்
 • நேரு கோப்பை படகுப் போட்டி
 • பயிப்பாட் ஜலோத்ஸவம்
 • குமரகம் படகுப் போட்டி
 • கல்லடா படகுப் போட்டி
 • பம்பா படகுப் போட்டி, நீரெட்டுபுரம்
 • 1938 முதல் கோதுருத் படகுப் போட்டி, எர்ணாகுல்லம் https://web.archive.org/web/20140518075839/http://gothuruthboatrace.com/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முளா_படகுப்போட்டி&oldid=3792522" இலிருந்து மீள்விக்கப்பட்டது