நெல்லியம்பதி
நெல்லியம்பதி மலை
നെല്ലിയാമ്പതി Nelliampathi | |
---|---|
Village | |
![]() சீதார் குன்டுப் பகுதி | |
Country | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-கேஎல் |
வாகனப் பதிவு | கேஎல்-70 |
அருகிலுள்ள நகரம் | நெம்மரா மற்றும் பாலக்காடு |
நெல்லியம்பதி (Nelliampathi) இது இந்தியா நாட்டில் கேரளம் மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழிடம் ஆகும். இது ஏறத்தாள 60 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
நிலவியல்
[தொகு]இங்கு உள்ள பகுதிகளில் டீ தயாரிக்க பயன்படும் தேயிலையும் மற்றும் காப்பியும் பயிரிடப்படுகிறது. இப்பகுதி சிற்றூர் வட்டத்திற்கு உட்பட்டதாகும். போத்துண்டி அணை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது. நெல்லியம்பதியின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள இந்த அணையானது 19 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டதாகும்.
சீதார்குன்டு
[தொகு]நெல்லியம்பதியிலிருந்து 8 கிலோ மீற்றர்கள் தொலையில் அமைந்துள்ள இது ஒரு காட்சிக் கோணப் பகுதியாகும். இந்த இடத்தில்தான் சீதை, இராமர், இலட்சுமணன் ஆகியோர் வனவாசத்தின் போது தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது.
கேசவன் பாறை
[தொகு]இந்த பகுதியில் மேலும் பார்க்க வேண்டிய இடம் கேசவன்பாறை ஆகும். இங்கு திரைப்படக் காட்சிகள் எடுக்கப்படுவதுண்டு.[1][2] மம்மூட்டி நடித்த மிருகயா திரைப்படம் இங்கு படமாக்கப்பட்டது.[3][4]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4,358 ஆண்களும், 4,360 பெண்கள் உட்பட மொத்த மக்கள் தொகை 8,718 பேர் உள்ளனர்.[5]
காட்சித் தொகுப்பு
[தொகு]-
பயிரிடப்பட்டுள்ள பகுதி
-
மலையின் தோற்றம்
-
மலையில் விழும் அருவி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Maradei, Irene (2007). "Nelliyampathy". Things to Do and See Around Palakkad. Palakkad. Archived from the original on 7 October 2010. Retrieved 25 January 2010.
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. Retrieved 29 December 2013.
- ↑ Maradei, Irene (2007). "Nelliyampathy". Things to Do and See Around Palakkad. Palakkad. Archived from the original on 7 October 2010. Retrieved 25 January 2010.
- ↑ "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 30 December 2013. Retrieved 29 December 2013.
- ↑ "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 29 December 2013.
வெளி இனைப்புகள்
[தொகு]- Silent Valley model eco-tourism proposed to save Nelliampathy Hills
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Nelliampathy