உள்ளடக்கத்துக்குச் செல்

டிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க் (Dreamworld Water Park) என்பது இந்தியாவின் கேரளத்தின், திருச்சூர் மாவட்டம் கஞ்ஞிராப்பள்ளி அஞ்சல், சாலக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும். சாலக்குடிக்கு எட்டு கி.மீ தொலைவில் அதிரப்பள்ளி அருவிக்கு அருகில் உள்ள இந்த பொழுதுபோக்குப் பூங்காவில் 42க்கும் மேற்பட்ட விளையாட்டு சவாரிகள் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை நீர் விளையாட்டுகளாகும். இந்த வளையாட்டுகளில் குறிப்பிடத்தக்கவை எட்டு அடி ஆழ அலைகுளம், மழை நடனம், அமேசான் ஆறு, சூம் ரைட், ரிவால்விங் பேரல், லேசி ரிவர், அக்வா-ஷட்டில், டிராகன் தொடருந்து, ஏர்-ஹாக்கி, டால்பின் சவாரி போன்றவை ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]