பிழல

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிழல
தீவு
ஆள்கூறுகள்: 10°02′55″N 76°15′30″E / 10.048705°N 76.258225°E / 10.048705; 76.258225ஆள்கூறுகள்: 10°02′55″N 76°15′30″E / 10.048705°N 76.258225°E / 10.048705; 76.258225
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
வட்டம்கண்ணையனூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்,
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்682027
தொலைபேசி குறியீட்டு எண்0484
மக்களவை தொகுதிஎர்ணாகுளம்
அருகில் உள்ள நகரம்எர்ணாகுளம்/கொச்சி
இணையதளம்www.pizhalapokkalitourism.com
பிழலவில் உள்ள பள்ளி
பிழலவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம்
மீன் வளர்ப்புக்கு தயாராகும் போக்காலி பண்ணை

பிழல (மலையாளம் : പിഴല) என்பது கேரளத்தின், கொச்சிக்கு அருகில் பெரியாறாறால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இது கேரளத்தின், எர்ணாகுளம் மாவட்டம், கண்ணையனூர் வட்டம், கடமக்குடி கிராம பஞ்சாயத்தில் உள்ளது. [1] பிழல என்ற பெயர் போர்த்துகீசிய சொற்களான பாஸ் நா இல்ஹாவிலிருந்து உருவானது, இதன் பொருள் 'அமைதித் தீவு'. கி.பி 1341 இல் பெரியாறில் உருவான பெரும் வெள்ளம் [2] காரணமாக பிழல தீவு இயற்கையாகவே உருவானது, [3] இந்த வெள்ளிமானது பண்டைய உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான. [4] [5] முசிறித் [6] துறைமுகத்தை (இன்றைய கொடுங்கல்லூருக்கு அருகில் ) மூழ்கடித்தது.

வரலாறு[தொகு]

1341–1541[தொகு]

1341 இல், பெரியாறில் ஏற்பட்ட பெரு வெள்ளம் முசிறி துறைமுகத்தை அழித்தது. [7] புதிய துறைமுகம் பல தீவுகளுடன் கொச்சியில் உருவாக்கப்பட்டது. போர்த்துகீசிய படையெடுப்பு காலத்தில் இந்த தீவுக்கு பெயர் உண்டானது.

1741-1941[தொகு]

1859 ஆம் ஆண்டில், தி விகாரியேட் ஆஃப் வெராபோலியின் உத்தரவின் காரணமாக [8] பேராயர் பெர்னார்டோ (கியூசெப்) பாசினெல்லி, ஒ.சி.டி, [9] ஒ.சி.டி கத்தோலிக்க சமயப் பணியாளர்கள் [10] பிழலவில் முதல் பள்ளியை (பள்ளிக்கூடம்) கட்டினர்

நிலவியல்[தொகு]

பிழல வண்டல் மண்ணால் ஆனது. கி.பி 1341 இல் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ள காலத்தில் மணலாலும், சேற்றாலும் வண்டல் உருவானது. பிழல கொச்சியின் வடக்குப் பக்கத்திலும் [11] கார்மலைட் மிஷனரிகளின் பழைய தலைமையகமான வரபுழாவின் தெற்குப் பக்கத்திலும் அமைந்துள்ளது. இந்த தீவு பெரியாறால் சூழப்பட்டுள்ளது. தீவின் பெரும்பகுதி ஈரமான நிலம் பொக்காலி [12] நெல் கழனிகாளாக உள்ளது. பிழல தீவானது தென் பிரதான நிலமும், "பாலியமுருத்" என்று அழைக்கப்படும் வடக்கு பிரதான நிலமும் உள்ளடக்கியது. [13]

கலாச்சாரம்[தொகு]

ஜெர்ரி அமல்தேவ் தனது சிறுவயது நாட்களில் பிழலவில் தங்கியிருந்தார். [14] அவரது மாமா எப்ஆர். ஜோசப் மூன்ஜப்பிலி பிழலாவில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலய திருச்சபை பாதிரியாராக இருந்தார் [15]

2010 இக்கு முன்னர், பிழலவில் இரண்டு வார்டுகள் மட்டுமே இருந்தன, ஒன்று பிழல தெற்கு [16] மற்றொன்று பிழல வடக்கு. [17] பிழல வடக்கு வார்டில் பாலியம் துருத்தும் [18] சேர்க்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

 1. "Chief Electoral Officer, Kerala". Ceo.kerala.gov.in. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Flood of Periyar. Ancient History of Calicut (Kozhikode), and Kerala". Calicutnet.com. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Archived copy" (PDF). 5 January 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 20 October 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 4. "Archived copy". 9 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 October 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 5. "Archived copy". 9 October 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 October 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 6. "Muziris Heritage Tourism Project, Muziris Excavations, Muziris Museums". Muzirisheritage.in. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Locating the ancient port of Musiris" (PDF). Journalofromanarch.com. 3 மார்ச் 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 8. "CATHOLIC ENCYCLOPEDIA: Verapoly". Newadvent.org. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Archbishop Bernardo (Giuseppe) Baccinelli, O.C.D." Catholic-Hierarchy.org. டேவிட் எம். சேனி. 21 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Archived copy". 5 December 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 October 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 11. "Destination Kochi / Cochin". Cochin.org. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Oryza sativa Germplasm "Pokkali"". Archive.gramene.org. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 13. Reporter, Staff (3 June 2014). "Kadamakudy to soon get dedicated water supply". Thehindu.com. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 14. Francis Dianish Odipattil Sebastian (19 October 2013). "Jerry Amaldev talking about Pizhala Churuch and Our Great Vicar Fr. Joseph Moonjappilly". யூடியூப். 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Parish priest definition and meaning - Collins English Dictionary". Collinsdictionary.com. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Pizhala South Ward". Pizhala South Ward. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Pizhala North Ward". Pizhala North Ward. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.
 18. "Paliyamthuruthu Ward". Paliyamthuruthu Ward. 27 February 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிழல&oldid=3587608" இருந்து மீள்விக்கப்பட்டது