கண்டனிச்சேரி
கண்டனிச்சேரி | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 10°36′0″N 76°4′0″E / 10.60000°N 76.06667°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூரவமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL- |
கண்டனிச்சேரி (Kandanissery) என்பது இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும்.
பிரபலமான இந்து புனித யாத்திரை மையமான 'குருவாயூர்' கண்டனிசேரிக்கு மிக அருகில் உள்ளது.
'கண்டனிசேரி' என்ற சொல்லிற்கான காரணம் தெரியவில்லை.
வரலாறு
[தொகு]கி. மு. 1000 இல் இந்த பகுதியில் மனித குடியேற்றம் தொடங்கியது. மிகவும் வளமான மண்ணும், நீர் வளமும் இங்கு மனித குடியேற்றத்தை ஈர்த்தது. நெல் மற்றும் தென்னை இப்பகுதியின் முக்கிய பயிர்களாக இருந்தன. [சான்று தேவை] சமண மற்றும் பிராமண குடியேற்றத்தின் எச்சங்களை இங்கே காணலாம். 'முனிமாடா ' என்று அழைக்கப்படும் சிறிய குகைகள் இன்னும் அப்படியே உள்ளன, குடக்கல்லு என்னும் பழைய ஈமக்குழி கண்டனிச்சேரியின் எல்லையில் உள்ளது. சில பழைய கோவில்கள் பிராமண குடியேற்றத்திற்கு தெளிவான சான்றுகளாக உள்ளன. கடந்த காலங்களில், பிராமணர்களின் சிறிய குழு அரசியல் ஆற்றலாலும், பணத்தாலும் ஈழவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தின. சில அறியப்படாத காரணங்களால் ஈழவர் சமூகத்தில் ஒரு வகை புரட்சி தொடங்கியது, அது பிராமண குடியேற்றத்தின் நசுக்கலுக்கு வழிவகுத்தது. இது பிராமணர்களுக்கு உண்மையில் ஒரு பின்னடைவு, அவர்கள் தங்கள் நிலத்தில் அகதிகளாயினர். அவர்கள் தங்களின் சில சொத்துக்களையும் தெய்வத்தையும் ஒரு நாயர் குடும்பத்திடம் ஒப்படைக்கின்றனர். இதனால் 40% நிலத்தின் உரிமை நாயர் குடும்பத்தின் கைகளுக்குச் சென்றது. அந்த நேரத்தில் சில ஈழவர் குடும்பங்கள் பெரும் நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தன. சிரலயம் மன்னர் குடும்பத்துக்கும், சூண்டகத்து ஒத்தலூர் மனாவுக்கும் வாடகை கொடுத்து வேறு சில குடும்பங்கள் நிலத்தை வைத்திருக்கின்றன. பிராமணரின் பின்வாங்கலுக்குப் பிறகு சில ஈழவர் குடும்பங்கள் ஏழை விவசாயிகளை சுரண்டின. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, கேரளத்தில் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தால் செய்யபட்ட 'நில சீர்திருத்தம்' மசோதா மூலம் ஈ. எம். எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் இது ஒரு முடிவுக்குவந்தது. [சான்று தேவை]
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ தளம்
- பொதுவகத்தில் Kandanassery burial cave தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.