திருமாந்தம்குன்னு பூரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமாந்தம்குன்னு பூரம்
place അങ്ങാടിപ്പുറം
திருமாந்தம்குன்னு பூரம்
அதிகாரப்பூர்வ பெயர்திருமாந்தம்குன்னு(மலையாளம்: തിരുമാന്ധാംകുന്ന് പൂരം)
கடைபிடிப்போர்மலையாளி இந்துக்கள்
வகைஇந்து கோயில் திருவிழா /மலப்புறம் நகர பொது விடுமுறை நாள்
முக்கியத்துவம்இந்து கோயில் திருவிழா
அனுசரிப்புகள்ஓட்டன் துள்ளல்
(ഓട്ടൻതുള്ളൽ),
இலஞ்சிதார மேளம்
(ഇലഞ്ഞിത്തറമേളം),
வாண வேடிக்கை
(വെടിക്കെട്ട്)
நாள்மலையாள நாட்காட்டியில் மீனம் மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் நாள்

திருமாந்தம்குன்னு பூரம் (மலையாளம்: തിരുമാന്ധാംകുന്ന് പൂരം) என்பது இந்தியாவின், கேரளத்தின், நடு மலபாரின் முக்கியமான கோயில் திருவிழா ஆகும். கேரளத்தின் மூன்று முக்கியமான பகவதி கோயில்களில் திரும்ந்தம்குன்னு கோயிலும் ஒன்றாகும், மற்றவை கொடுங்ஙல்லூர் மற்றும் பனயண்ணார்காவு ஆகும். தினசரி பூசைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு நடக்கும் பிரபலமான மாங்கல்ய பூசைக்கு ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு நல்லபடி திருமணமாகவும், நற்பேறு கிட்டவும் வேண்ட வருகின்றனர். [1]

இந்தத் திருவிழா மீனத்தில் (மார்ச், ஏப்ரல்) மிருகசீரிடம் நட்சத்திரத்திலிருந்து 11 நாட்கள் நடக்கும். [2] பூரம் திருவிழா குறித்து 16 ஆம் நூற்றாண்டின் துவக்க தசாப்தங்களின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் ஓலைச் சுவடிகளில் உள்ளது என்பதை நிரூபிக்க சான்றுகள் உள்ளன. [3] திருவிழாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கடிபுரத்துக்கு மக்கள் செல்கின்றனர்.

யானைகள், நாதசுவரம், செண்டை மேளம் ஆகியவற்றுடன் 'ஆறாட்டு' என்ற புனித நீராட்டுக்காக பாகவதியின் சிலை கருவறைக்கு வெளியே யானை மீது எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த 'ஆறாட்டு' விழா 10 நாட்கள் தொடரும். ஊர்வத்துக்கு வெளியே எடுக்கப்படும், தெய்வத்தை அருகிலிருந்து பார்க்கும் பொருட்டு சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்று பார்ப்பர். இதை 'பூரப்புறப்பாடு' என்று அழைப்பர். [4] இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆறாட்டு. ஆகும். இது 21 முறை செய்யப்படுகிறது, காலையில் ஒருமுறை, மாலையில் ஒரு முறை என தொடர்ந்து, பத்து நாட்களும், அடுத்து இறுதி ஆரட்டு பதினொன்றாம் நாள் மாலை நடக்கும். பத்தாம் நாள் (ஏப்ரல் 21) மாலை பள்ளிவேட்டை நடக்கும்.

பூரம் நாளின் நள்ளிரவில், வரும் வள்ளுவநாடு இராச்சியத்தின் வள்ளுவக்கோனாதிரியும், பானா சமூகத்தின் தலைவர் மலாயங்குட்டி என இருவரும் பல்லக்கில் பூரம் மைதானத்திற்கு வரவர். இருவருக்கும் இடையே ஒரு சடங்கு சந்திப்பு நடக்கும். இது பனந்தே வரவு என்று அழைக்கப்படுகிறது. இது சமய நல்லிணக்கத்தையும், பழங்குடித் தலைவரால் அரசருக்கு கடந்த காலங்களில் செய்த உதவியையும் நினைவுகூர்கிறது. பன்னிரண்டாம் நாள், காலை முதல் மாலை வரை நாட்டுப்புற கலை வடிவமான சாவித்துகளி நிகழ்த்தப்படும். மேலும் விழா தாட்களில் ஓட்டன் துள்ளல், சாக்கைக் கூத்து, பாடகோம், நங்கியர் கூத்து, தயாம்பகா, மேளம் போன்ற கலாச்சார நிகழ்வுகள் நிகழ்த்தபடுகின்றன. நாட்டுப்புற கலை வடிவமான பூதன் திருவிழா நாட்களில் கோயில் வளாகத்தில் நிகழ்த்தபடுகிறது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]