கேரள உப்பங்கழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டநாடு பகுதியில் கேரள உப்பங்கழிகள்

கேரள உப்பங்கழிகள் (Kerala backwaters) என்பது தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தின் அரபிக்கடல் கடற்கரைக்கு ( மலபார் கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது) இணையாக அமைந்துள்ள உப்பு கலந்த ஏரிகள் மற்றும் ஏரிகளின் வலையமைப்பாகும். அத்துடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நுழைவாயில்களையும் இது கொண்டுள்ளன. 900 கிலோமீட்டர் (560 மைல்) க்கும் மேற்பட்ட நீர்வழிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சிக்கலான அமைப்பாக அமைந்துள்ளது. [1] இந்த வலையமைப்பில் கால்வாய்களால் இணைக்கப்பட்ட ஐந்து பெரிய ஏரிகள் உள்ளன, அவை மனிதனால் உருவாக்கப்பட்டவை மற்றும் இயற்கையானவை. 38 ஆறுகளால் இதற்கு நீராதாரங்கள் கிடைக்கின்றன. மேலும் இது கேரள மாநிலத்தின் பாதி நீளம் வரை நீண்டிக்கிருன்றன. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கீழே பாயும் பல ஆறுகளின் வாய்க்கு குறுக்கே குறைந்த தடுப்பு தீவுகளை உருவாக்கும் அலைகள் மற்றும் கரையோர நீரோட்டங்களின் செயல்பாட்டால் உப்பங்கழிகள் உருவாகின. இந்த நிலப்பரப்பின் நடுவில் ஏராளமான நகரங்கள் மற்றும் ஊர்கள் உள்ளன. அவை உப்பங்கழிகள் பயணத்தின் தொடக்க மற்றும் இறுதிப் புள்ளிகளாக செயல்படுகின்றன. [2]

கொல்லம் முதல் கோட்டாபுரம் வரையிலான தேசிய நீர்வழி 3, 205 கிலோமீட்டர்கள் (127 mi) தூரத்தை உள்ளடக்கியது. இது தெற்கு கேரளாவின் கடற்கரைக்கு கிட்டத்தட்ட இணையாக இயங்குகிறது. [3] 2,033 சதுர கிலோமீட்டர்கள் (785 sq mi) பரப்பளவு கொண்ட ஏரிகளில் வேம்பநாடு மிகப்பெரியது. இந்த ஏரியில் குட்டநாடு பகுதி முழுவதும் ஒரு பெரிய கால்வாய்கள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆறுகளான வளபட்டணம் ஆறு 110 கிலோமீட்டர்கள் (68 mi), காளியாறு 169 கிலோமீட்டர்கள் (105 mi), கடலுண்டிபுழா (130 கி.மீ), பாரதப்புழா (209 கி.மீ), சாலக்குடி ஆறு (130 கி.மீ), பெரியாறு (244 கி.மீ), பம்பை ஆறு (176 கி.மீ), அச்சன்கோவில் ஆறு (128 கி.மீ), கல்லடையாறு (121 கி.மீ) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை தவிர, மேலும் 35 சிறிய ஆறுகள் மற்றும் சிற்றோடைகளின் தொடர்ச்சி மலைகளில் இருந்து கீழே பாய்கின்றன. இந்த ஆறுகளில் பெரும்பாலானவை மாநிலத்தின் உள்பகுதி வரை செல்லக்கூடியவை.

உப்பங்கழிகள் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளன: ஆறுகளில் இருந்து வரும் நன்னீர் அரபிக் கடலில் இருந்து கடல்நீரைச் சந்திக்கிறது. தன்னீர்முக்கோமுக்கு அருகே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. எனவே கடலில் இருந்து உப்பு நீர் ஆழமான உள்ளே நுழைவதைத் தடுக்கிறது. புதிய தண்ணீரை அப்படியே வைத்திருக்கிறது. இத்தகையப் புதிய நீர் பாசன நோக்கங்களுக்காக விரிவாக பயன்படுத்தப்படுகிறது. [3] [4] நண்டுகள், தவளைகள் , மீன் இனங்கள் ஆலா, மீன்கொத்திகள், பாம்புத் தாரா மற்றும் நீர்க்காகங்கள் போன்ற நீர் பறவைகள் மற்றும் நீர்நாய்கள் மற்றும் ஆமைகள் போன்ற விலங்குகள் உப்பங்கடல்களோடு சேர்ந்து வாழ்கின்றன. பனை மரங்கள், பாண்டனஸ் புதர்கள், பல்வேறு இலைச் செடிகள் மற்றும் புதர்கள் ஆகியவை உப்பங்கடல்களுடன் சேர்ந்து வளர்கின்றன. இது சுற்றியுள்ள நிலப்பரப்புக்கு ஒரு பச்சை நிறத்தை அளிக்கிறது.

சுற்றுலா[தொகு]

நூற்றாண்டு துவங்குவதற்கு முன்னர் "நேசனல் ஜியாகரபி டிராவலர்" என்ற இதழ் வெளியிட்ட சிறப்பிதழில் கேரளா "வாழ்நாளின் 50 இலக்குகளில்" ஒன்றாக மதிப்பிடப்பட்டது. ஆலப்புழாவில் படகு வீடுகள் மற்றும் உப்பங்கழிகள் விடுதி சுற்றுலா ஆகியவை முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன. [5]

படகு வீடுகள்[தொகு]

உப்பங்கழியில் உள்ள கட்டு வள்ளம் (கேரள படகு வீடுகள்) கேரளாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். 2000க்கும் மேற்பட்ட கட்டுவள்ளங்களை உப்பங்கழிகள் இயக்குகின்றன. [6] கேரள அரசின் சுற்றுலாத்துறை படகு வீடுகளை பிளாட்டினம், தங்கம் மற்றும் வெள்ளி என வகைப்படுத்தியுள்ளது.

ஒரு ஆழப்புழா கால்வாய்

குறிப்புகள்[தொகு]

  1. "Austin Pick: A Billion People in a Coconut Shell". 2009-02-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-12-28 அன்று பார்க்கப்பட்டது.
  2. "11 Prime Destinations in Kerala for Backwater Tour". 7 July 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-07-01 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 Ayub, Akber (ed), Kerala: Maps & More, Backwaters, 2006 edition 2007 reprint, pp. 40-53, Stark World Publishing, Bangalore, ISBN 81-902505-2-3
  4. "Backwaters in Kerala". Kerala Backwater. Kerala Backwater Pvt. Ltd. 2015. 25 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. Mathew, Mony K. (13 July 2000). "Going beyond God’s own country". Business Line. Archived from the original on 20 ஜனவரி 2008. https://web.archive.org/web/20080120021123/http://www.hinduonnet.com/businessline/2000/07/13/stories/111302c4.htm. பார்த்த நாள்: 2 September 2016. 
  6. Abraham, Tanya (31 October 2005). "Eco-friendly boats to ply backwaters". தி இந்து. Archived from the original on 20 மே 2009. https://web.archive.org/web/20090520163825/http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005103101070300.htm&date=2005%2F10%2F31%2F&prd=mp&. பார்த்த நாள்: 20 October 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_உப்பங்கழிகள்&oldid=3551416" இருந்து மீள்விக்கப்பட்டது