உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கசேரி

ஆள்கூறுகள்: 8°53′04″N 76°33′49″E / 8.884359°N 76.563631°E / 8.884359; 76.563631
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்கசேரி
Thangassery
நகர்ப்புற சிற்றூர்
தங்கசேரி வளைவு
தங்கசேரி வளைவு
தங்கசேரி is located in கொல்லம்
தங்கசேரி
தங்கசேரி
கேரளத்தில் அமைவிடம்
தங்கசேரி is located in கேரளம்
தங்கசேரி
தங்கசேரி
தங்கசேரி (கேரளம்)
தங்கசேரி is located in இந்தியா
தங்கசேரி
தங்கசேரி
தங்கசேரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°53′04″N 76°33′49″E / 8.884359°N 76.563631°E / 8.884359; 76.563631
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
அரசு
 • நிர்வாகம்கொல்லம் மாநகராட்டசி
மொழிகள்
 • அலுவல் மொழிகாள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
691007
வாகனப் பதிவுKL-02
மக்களவை தொகுதிகொல்லம்
குடிமை நிர்வாகம்கொல்லம் மாநகராட்சி
சராசரி கோடை வெப்பநிலை34 °C (93 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை22 °C (72 °F)
இணையதளம்http://www.kollam.nic.in
தங்கசேரி கலங்கரை விளக்கம்
தங்கசேரியில் மீன்பிடி படகுகள்

தங்கசேரி (Tangasseri அல்லது Thangassery) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், கொல்லத்தில் அரபிக்கடலோரத்தில் மக்கள் செறிந்துவாழும் கடற்கரை பகுதியாகும்.

அமைவிடம்

[தொகு]

தங்கசேரியானது மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்திலிருந்து 71 (44 மைல்) தொலைவிலும், நகர மையத்திலிருந்து (சிட்டி செண்டர்) சுமார் 5 கிலோமீட்டர்கள் (3.1 mi) ) தொலைவிலும் அமைந்துள்ளது. அண்மையில் தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தக் கடற்கரையில் சீன நாணயங்கள் மற்றும் பிற கலைப்பொருட்களை கண்டுபிடித்தனர். இது இந்த இடத்தின் வரலாற்று பின்னணியை காட்டுகிறது. [1] கொல்லம் துறைமுகம் உலக கடல் வரைபடத்தில் தங்கசேரியை ஒரு முக்கியமான இடமாக மாற்றுகிறது. [2] [3]

வரலாறு

[தொகு]

1502 ஆம் ஆண்டில், தங்கசேரியில் வர்த்தக மையத்தை நிறுவிய முதல் ஐரோப்பியர்கள் போத்துக்கீசர்கள், இப்பகுதி விரைவில் மிளகு வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய மையமாக மாறியது. 1517 இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட தங்கசேரியின் சென் தாமஸ் கோட்டை, டச்சுக்காரர்களுடனான அடுத்தடுத்த போர்களில் அழிக்கப்பட்டது. [4]

1661 இல், டச்சுக்காரர்கள் நகரைக் கைப்பற்றினர். டச்சு மற்றும் போர்த்துகீசிய கோட்டைகளின் எச்சங்கள் இன்னும் தங்கசேரியில் காணப்படுகின்றன. 18 ஆம் நூற்றாண்டில், திருவிதாங்கூர் இராச்சியம் முதன்முதலில் கொல்லத்தை கைப்பற்றியது, 1795 இல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தங்கசேரி ஒரு ஆங்கிலோ-இந்திய குடியேற்றமாக இருந்தது. மக்கள்தொகையில் தற்போதும் சில ஆங்கிலோ-இந்தியர்கள் இருக்கின்றனர். போர்த்துகீசிய ஆட்சியில் பழைய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக தங்கசேரியில் உள்ள குழந்தை இயேசு பேராலயம் உள்ளது. [5] பழைய பேராலயம் இடிக்கப்பட்டு புதிய பேராலயமானது 4.5 கோடி (US$5,60,000) செலவில் கட்டபட்டு, 2005 திசம்ர் 3 அன்று ஆசீர்வதிக்கப்பட்டு புனிதபடுத்தபட்டது. மேலே உள்ள உலோக சிலுவை இந்தியாவின் மிகப்பெரிய சிலுவைகளில் ஒன்றாகும். [6]

முக்கியத்துவம்

[தொகு]

தங்கசேரி ஒரு அழகிய கடலோர கிராமமாகும். இது மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. இதில் 144 அடி உயர கலங்கரை விளக்கம் உள்ளது - இது 1902 ஆம் ஆண்டு முதல் இயங்கிவருகிறதுது. [7] இங்கு போர்த்துகீசிய மற்றும் டச்சு கோட்டைகள் மற்றும் 18 ஆம் நூற்றாண்டு தேவாலயங்களின் இடிபாடுகளும் உள்ளன. தங்கசேரியில் உள்ள மீன்பிடி துறைமுகம் பாரம்பரிய மீனவர்களுக்கு உதவியானதாக உள்ளது. இங்கு இரண்டு அலைதாங்கிகள் நிர்மாணிப்பட்டுள்ளன. பிரதான அலைதாங்கியின் நீளம் 2100 மீ மற்றும் துணை அலைதாங்கியின் நீளம் 550 மீ. ஆகும். தங்கசேரியானது கேரளத்தின் பழமையான பள்ளிகளான மவுண்ட் கார்மல் கான்வென்ட் ஆங்கிலோ-இந்தியன் மகளிர் உயர்நிலைப்பள்ளி [8] மற்றும் குழந்தை இயேசு பள்ளி ஆகியவற்றைக் கொண்டுள்ளது . [9]

படகாடசியகம்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Archaeologist Throws Light on Thangassery Artefacts". TNIE. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  2. "Thangassery Port". Infrawindow.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  3. "Cabinet approval for Thangassery port plans". Projectstoday.com. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014.
  4. "Thangassery: A flashback to Kerala's Portuguese past". On Manorama. பார்க்கப்பட்ட நாள் 22 July 2019.
  5. "Superb India Tours - Kollam". Superb India Tours. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  6. "Tangasseri - OOCITIES". OOCITIES. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  7. "New look for Tangasseri lighthouse". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
  8. "Mount Carmel School, Kollam". ICBSE. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
  9. "Infant Jesus Anglo-Indian School, Kollam". IJHSS Kollam. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கசேரி&oldid=3037557" இலிருந்து மீள்விக்கப்பட்டது