எலிவை மலை
Appearance
எலிவை மலை Eliva Malai ഏലിവ മല | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,088 m (6,850 அடி)[1] |
புடைப்பு | 1,540 m (5,050 அடி)[1] |
பட்டியல்கள் | அல்ட்ரா |
புவியியல் | |
அமைவிடம் | பாலக்காடு, கேரளா மற்றும் கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா |
மூலத் தொடர் | மேற்கு தொடர்ச்சி மலை |
எலிவை மலை (ஆங்கிலம்: Elivai Malai, மலையாளம்: ഏലിവ മല) தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில் 2088 மீட்டர் உயரமுள்ள ஒரு சிகரமாகும் [1]. இம்மலை இந்தியாவின் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கும், தமிழ்நாடு மாநிலம் கோயம்பத்தூர் மாவட்டத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. 1540 மீட்டர்கள் [2] நில முக்கியத்துவம் பெற்ற இம்மலை தெற்காசியாவின் மிகமுக்கிய சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாலக்காட்டு கணவாய்க்கு வடக்கில் மேற்கு தொடர்ச்சி மலையின் உயர்ந்த புள்ளியாக உருவாகியுள்ளது.
சிறுவாணி அணை மற்றும் நீர்தேக்கத்திற்கு அருகில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் எலிவை மலை இருக்கிறது. கோவையின் குற்றாலம் என்றழைக்கப்படும் சிறுவாணி நீர்வீழ்ச்சியும் ஆராளம் அட்லா நீர்வீழ்ச்சியும் இங்கு காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Elivai Malai, India". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.
- ↑ "Southern India Mountain Ultra-Prominence". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.