வலியபரம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மடக்கல் தீவிலிருந்து வலியாபரம்பாவை இணைக்கும் இடிந்த தொங்கு பாலம்.
வலியாபரம்பா கடற்கரை சூரிய அஸ்தமனம்

வலியபரம்பா (Valiyaparamba) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கடலோர தீவு ஆகும்.

அமைவிடம்[தொகு]

வாலியபரம்பாவை முதன்மை நிலப்பரப்பிலிருந்து காவ்வாய் காயல் என்ற நீர்பகுதி பிரிக்கிறது. வலியபரம்பாவானது செருவதூருக்கு தென்மேற்கே ஐந்து கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவிலும், வட கேரளத்தின் காசர்கோடு பெக்கலில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.   இந்தத் தீவு சுமார் 16.14 சதுர கிலோமீட்டர்கள் (6.23 sq mi) பரப்பளவு கொண்டது. 1991 மக்கள் கணக்கெடுப்பின்படி இங்கு 11,917 மக்கள் தொகை இருந்தது. தீவின் முக்கிய வருவாய் ஆதாரமாக வேளாண்மையும், மீன்பிடித்தலும் ஆகும்.   [ மேற்கோள் தேவை ]

நிலவியல்[தொகு]

வாலியபரம்பா காயலுக்கு நான்கு ஆறுகளின் வழியாக நீர் வந்து சேர்கிறது. இந்த காயலில் ஏராளமான சிறிய தீவுகள் உள்ளன. முதன்மை நிலப்பகுதியிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பான வலியாபரம்பா, மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க மீன்பிடி மையமாக உள்ளது. கடலை ஒட்டி பேக்கால் கோட்டை உள்ளது. இந்த தீவின் வழியாக ஒரு தேசிய நீர்வழி பாதை செல்கிறது.

கல்வி[தொகு]

இந்தத் தீவில் ஏழு தொடக்கப் பள்ளிகள், ஒரு உயர்நிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி ஆகியன உள்ளன.

போக்குவரத்து[தொகு]

தீவுக்கு முதன்மை நிலப்பகுதியிலிருந்து செல்ல படகு மூலமாகவோ, மாவில கடப்புரம் பாலத்தின் வழியாகவோ செல்லலாம்.

மேலும் காண்க[தொகு]

  • பையனூர்
  • பெரிங்கோம்  பயனூரிலிருந்து 20 கி.மீ.
  • எழிமலை   பயனூர் நகரில் இருந்து 12 கி.மீ.
  • குஞ்ஞிமங்கலம் கிராமம்   பயனூர் நகரத்திலிருந்து 8 கி.மீ.
  • காவ்வாய் தீவு   பயனூரிலிருந்து 3 கி.மீ.
  • ராமந்தளி   பயனூரிலிருந்து 7 கி.மீ.
  • கரிவெல்லூர்   பயனூரிலிருந்து 10 கி.மீ.
  • திருக்கரிப்பூர்   பயனூரிலிருந்து 6 கி.மீ.

குறிப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 12°08′40″N 75°08′40″E / 12.144443°N 75.144323°E / 12.144443; 75.144323 about Valiyaparamba

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலியபரம்பா&oldid=3040674" இருந்து மீள்விக்கப்பட்டது