பேப்பூர் கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 11°09.4962′N 75°48.351′E / 11.1582700°N 75.805850°E / 11.1582700; 75.805850
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேப்பூர் கலங்கரை விளக்கம்
Beypore lighthouse
சாலியார் ஆற்றின் வடக்குக் கரையில் இருந்து தோற்றம்
அமைவிடம்பெரோக், கேரளா
ஆள்கூற்று11°09.4962′N 75°48.351′E / 11.1582700°N 75.805850°E / 11.1582700; 75.805850
ஒளியூட்டப்பட்டது1977
கட்டுமானம்மசோன்றி
கோபுர வடிவம்ஆறு பக்க கோபுரம்
உயரம்30.48 மீட்டர்கள்
வீச்சு16 கடல் மைல்
சிறப்பியல்புகள்15 நொடிக்கு ஒரு முறை வெள்ளை விளக்கு கண்சிமிட்டும்

பேப்பூர் கலங்கரை விளக்கம் (Beypore lighthouse) என்பது இந்திய நாட்டின் கேரளாவில் கோழிக்கோடு நகருக்கு அருகிலுள்ள பெரோக் நகரில் சாலியார் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.[1] இந்த ஆறு பக்க கோபுரம் 30.48 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. கோபுரம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பட்டைகளாகப் பூசப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் இக்கலங்கரை விளக்கம் செயல்பட்டு வருகிறது. உலோக ஆலைடு விளக்குகள் இங்கு ஒளி மூலமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-01-21.

புற இணைப்புகள்[தொகு]