அங்கிடா முடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கிடா முடி
അങ്ങിണ്ട മുടി
Peacocke-Travellers Bungalow, Sispara.jpg
அங்கிடா பின்னணியில் சிஸ்பரா கணவாய்
உயர்ந்த இடம்
உயரம்2,383 m (7,818 ft)
ஆள்கூறு11°12′26″N 76°27′51″E / 11.20722°N 76.46417°E / 11.20722; 76.46417ஆள்கூறுகள்: 11°12′26″N 76°27′51″E / 11.20722°N 76.46417°E / 11.20722; 76.46417
புவியியல்
அங்கிடா முடி is located in கேரளம்
அங்கிடா முடி
அங்கிடா முடி
கேரளத்தில் அங்கிடா முடியின் அமைவிடம்
அமைவிடம்பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு வட்டத்தின் எல்லை மற்றும் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம்

அங்கிடா முடி (അങ്ങിണ്ട മുടി) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலைச் சிகரம் ஆகும். இதன் உயரம் 2,383 மீட்டர்கள் (7,818 ft) ஆகும். மேலும் அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் மிக உயர்ந்த சிகரம் இதுவாகும். இது சிஸ்பாரா கணவாய்க்கு தெற்கே உள்ளது, மேலும் இது தமிழ்நாட்டின் முக்கூர்த்தி தேசியப் பூங்காவின் தெற்கு எல்லையாக அமைகிறது.  சைரந்திரி பார்வையாளர்கள் மையத்தில்  உள்ள 30 மீ உயர காட்சிக் கோபுரத்திலிருந்து அங்கிடாவின் தடையற்ற காட்சி காண இயலும்.

அங்கிடா முடி

அமைதிப் பள்ளதாக்கு தேசிய பூங்காவிற்குள் உள்ள அங்கிடா- சிஸ்பாரா வட்டாரத்தில் அருகிய இனமான நீலகிரி சிரிக்கும் குருவி உள்ளன. முக்காலியில் இருந்து சைரந்த்ரி, பூச்சிபாரா, வாலக்காடு, சிஸ்பாரா வழியாக அங்கிடா வரை 4 நாள் மலையேற்ற பாதையில் செல்லலாம்.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  • Logan, William (2000), Malabar Manual (Volume 1), Asian Educational Services, ISBN 81-206-0446-6Logan, William (2000), Malabar Manual (Volume 1), Asian Educational Services, ISBN 81-206-0446-6
  • Pillai, Sridevi (25 March 2007), Ecowatch- A birder's trail, தி இந்து, 24 ஆகஸ்ட் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது, 8 December 2009 அன்று பார்க்கப்பட்டது
  • நாயர், சஜிதா (2005) அமைதி பள்ளத்தாக்கு . இந்தியாவுக்கான நுழைவாயில். பார்த்த நாள் 6 செப்டம்பர் 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கிடா_முடி&oldid=3512640" இருந்து மீள்விக்கப்பட்டது