வீரன்புழ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வீரன்புழ
Veeranpuzha buildings.jpg
அமைவிடம்கேரளம், கொச்சி
ஆள்கூறுகள்10°04′N 76°14′E / 10.07°N 76.24°E / 10.07; 76.24ஆள்கூறுகள்: 10°04′N 76°14′E / 10.07°N 76.24°E / 10.07; 76.24
வடிநில நாடுகள்இந்தியா

வீரன்புழ (വീരന്പൂഴ) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கொச்சியில் உள்ள ஒரு ஏரியாகும். இது வேம்பநாட்டு ஏரியின் வடக்கு விரிவாக்கம் ஆகும். கொச்சி ஆழி முதல் முனம்பம் ஆழி வரை, வேம்பநாடு ஏரி பிரபலமாக "வீரன்புழ" என்று அழைக்கப்படுகிறது. 1980 களின் முற்பகுதியில் முனம்பம் முதல் எர்ணாகுளம் வரை வழக்கமான படகு போக்குவரத்து வசதிகள் இருந்தன. இப்பகுதியில் மனித குடியிருப்புகள் இல்லாத பெருமளவிலான நெற்கழனிகள் உள்ளன. இங்கு போதிய அளவு நன்னீர் கிடைக்காத நிலையின் காரணமாக இங்கு அடர்த்தியான மனித குடியிருப்பு இல்லாத்தற்கு ஒரு காரணமாகும். வீரன்பழ ஏரியானது கடக்காரகாயல் ( കടക്കരക്കായല്) கன்றும் அறியப்படுகிறது. [1]

பொக்காலி சாகுபடி[தொகு]

வீரன்புழவின் கரையைச் சுற்றியுள்ள வயல்களில் உப்புநீரைத் தாங்கும் பொக்காலி நெல் பயிரிடப்படுகிறது. போக்காலி நெல் சாகுபடி செய்ய இங்கு சுழற்சி கரிம சாகுபடி முறையை மேற்கொள்கின்றனர். நீரில் உப்புத்தன்னமை குறைவாக இருக்கும் காலகட்டமான ஜூன் மாதத்தில் நெல் சாகுபடி தொடங்கி நவம்பர் மாதத்தில் அறுவடை ஆகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை, தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரிக்கிறது. இந்த காலகட்டத்தில், வயல்களில் இறால் வளர்ப்பு செய்கின்றனர். ஏரியிலிருந்து வயலுக்குச் நீர் செல்ல கலிங்குகள் உள்ளன. இந்த திறப்புகளின் மூலம், இறால் குஞ்சுகள் நெல் அறுவடைக்குப் பிறகு கடலிலிருந்தும் ஏரியிலிருந்தும் வயலுக்குள் நீந்தி அறுவடை செய்யப்பட்ட பயிரின் தண்டு எச்சங்களை உண்கின்றன. அண்மைக் காலங்களில், வீரன்புழ ஏரிப் பகுதியில் பல பொக்காலி நெல் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு மற்ற தொழில்களுக்கு மாறிவருகின்றனர். ஏனெனில் விவசாயம் லாபமற்றதாக மாறியுள்ளதால் ஆகும்.

உள்ளூர் சுற்றுலா[தொகு]

பல உள்ளூர் சுற்றுலா பயணிகள் வீரன்புழவுக்கு முக்கியமாக மழைக்காலங்களில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க வருகின்றனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை முதன்மையாக ஈர்ப்பதற்காக சில நீர்-முகப்பு சுற்றுலா விழாக்கள் அண்மைக் காலங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரன்புழ&oldid=3041113" இருந்து மீள்விக்கப்பட்டது