பயிப்பாடு வல்லம்களி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிப்பாடு வல்லராட்டு அல்லது ஜலோத்சவம் (Payippad Vallaarattu அல்லது Jalotsavam) என்பது தென்னிந்தியாவில், கேரள மாநிலத்தின் ஹரிப்பாடிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள பயிபாடு ஏரியில் நடத்தப்படும் மூன்று நாள் நீர் திருவிழா ஆகும். இந்த பயிப்பாடு வல்லம்களிக்கும் ஹரிபாடு சுப்பிரமண்ய சுவாமி கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

வெற்றியாளர்கள்[தொகு]

  • 1967-பச்சா சுண்டன், பயிப்பாடு படகு கிளப்
  • 1968-பச்சா சுண்டன், பயிப்பாடு படகு கிளப்
  • 1969-ரேஸ் நடத்தப்படவில்லை.

-மற்ற போட்டி விவரங்கள் கிடைக்கவில்லை -

  • 2004- [பாயிப்பாடன் சுண்டன்], பயிப்பாட் படகு கிளப்.
  • 2005- கரிச்சல் சுந்தன், கரிச்சல் படகு கிளப்.
  • 2006- கரிச்சல் சுண்டன், கரிச்சல் படகு கிளப்.
  • 2007- கரிச்சல் சுண்டன், கரிச்சல் படகு கிளப்.
  • 2008- கரிச்சல் சுண்டன், கரிச்சல் படகு கிளப்.
  • 2009-பாயிப்படன் சுண்டன், பயிப்பாடு படகு கிளப்.
  • 2010- வெற்றியாளர்கள் இல்லை
  • 2011- கரிச்சல் சுண்டன், கரிச்சல் படகு கிளப்.
  • 2012-அனரி சுண்டன், அனரி படகு கிளப்.
  • 2013-அனரி சுண்டன், அனரி படகு கிளப்.
  • 2014- கரிச்சல் சுண்டன், கரிச்சல் படகு கிளப்.
  • 2015-பாயிப்பதன் சுண்டன், பயிப்பாட் படகு கிளப்.
  • 2016-பாயிப்பதன் சுண்டன், பயிப்பாட் படகு கிளப்.
  • 2017-பாயிப்பதன் சுண்டன், பயிப்பாட் படகு கிளப்
  • வெள்ளம் காரணமாக 2018-படகுப் போட்டி இரத்து செய்யப்பட்டது.
  • 2019-பாயிப்பதன் சுண்டன், பயிப்பாட் படகு கிளப்.
  • உலகளவிலான கோவிட் 19 நோய்தொற்றின் காரணமாக 2020-படகுப் போட்டி இரத்து செய்யப்பட்டது

கதை[தொகு]

ஹரிப்பாட் கிராம மக்கள் ஒரு முருகன் சிலையையும் நிறுவ்வேண்டும் என்ற என்னத்துக்கு ஏற்ப்ப ஒரு ஐயப்பன் கோயிலைக் கட்ட முடிவெடுத்தனர். காயம்குளம் ஆற்றின் ஒரு நீர்ச்சுழியின் அடியில் முருகனின் சிலையை கண்டுபிடித்து, மக்கள் ஒரு படகில் சுப்பிரமணியர் சிலையை கொண்டு வந்தனர், பக்தர்கள் மற்ற படகுகளில் சடங்காசாரத்துடன் உடன் சென்றனர். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் நீர் திருவிழா நடத்தப்படுகிறது.

சுமார் 5000 ஆண்டுகள் பழமையான கோயிலில் "ஸ்கந்தகுமாரன்" சிலை நிறுவப்பட்டிருந்தது. எனவே அந்த இடத்தின் பெயர் குமாரபுரம் என்று அழைக்கபட்டது. இப்போது கூட ஹரிபாடின் சில பகுதிகள் குமாராபுரம் என்று அழைக்கப்படுகின்றன. அந்தக் காலத்தில் இந்த கோயில் சில பிரபலமான ஓரன்ம குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவை செங்கரப்பள்ளி, தாழூர், கிழிகுளம் மற்றும் 20 கரண்மா குடும்பங்கள் ஆகும். இந்த குடும்பங்கள் ஒரு புதிய பெரிய கோவிலைக் கட்ட முடிவு செய்தன. 'ஸ்ரீகோவில்' (கருவறை) கரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த அம்பக்கட்டு குடும்பத்தால் கட்டப்பட்டது. அந்த நேரத்தில் ஓரன்ம குடும்பங்களின் மூத்த உறுப்பினர்கள் ஒரு இரவில் கனவு ஒன்றைக் கண்டனர். கனவில் நான்கு கைகள் கொண்ட சுப்பிரமணியரின் சிலை கோவிந்தமுட்டம் ஏரியில் (கயம்குளம்) கிடப்பதைக் கண்டனர். இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலையை கண்டுபிடிக்க படகில் (பள்ளியோடம்) அந்த இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் ஏரியில் ஒரு சூறாவளியைக் கண்டார்கள். இப்போது அந்த இடத்தை கந்தல்லூர் (கந்த நல்ல ஊர்) என்று அழைக்கப்படுகிறது. சிலையைக் கண்டெடுத்த பிறகு, மக்கள் அதை ஒரு படகில் ஹரிப்பாடுக்கு அருகிலுள்ள நெல்புரக்கடாவிற்கு எடுத்துச் சென்றனர், கிராமங்களின் பல படகுகளால் (பள்ளியோடம்) சூழப்பட்டு அழைத்துச் சென்றனர். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாள் நீர் திருவிழா நடத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிப்பாடு_வல்லம்களி&oldid=3320625" இலிருந்து மீள்விக்கப்பட்டது