ஐயப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அய்யப்பன்
Ayyappa Swamy bazaar art, c.1950's.jpg
ஐயப்பன்
அதிபதிவளத்தின் கடவுள்
எழுத்து முறைഅയ്യപ്പൻ
வகைஇந்து கடவுள்
இடம்சபரிமலை
மந்திரம்சுவாமியே சரணம் ஐயப்பா
ஆயுதம்வில்
பெற்றோர்கள்சிவன் மற்றும் மோகினி (விஷ்ணு வின் அவதாரம்) வளர்ப்புப் பெற்றோர் : ராஜசேகரன் கோப்பெருந்தேவி
வாகனம்குதிரை, புலி,யானை
விழாக்கள்மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை

ஐயப்பன் (Ayyappan) அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு தென்னிந்தியா மற்றும் இலங்கையில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் மகனாக மற்றும் அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாக கருதப்படுகிறார்.

ஐயப்பனின் வரலாறு[தொகு]

மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்குக் காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.

பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.[1][2]

பாண்டிய வம்சத்தின் பந்தள நாட்டு அரசனான ராஜசேகரன் என்பவர் பம்பாதீரத்தில் குழந்தையாக இருந்த ஐயப்பனைக் கண்டெடுத்தார். அவருக்குக் குழந்தை இல்லாமையினால் ஐயப்பனை வளர்க்க உத்தேசித்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்தமையால் மணிகண்டன் என்று பெயரிட்டார். அந்நேரத்தில் பந்தள அரசிக்கு ராஜராஜன் என்ற மகன் பிறந்தார். அதுவரை மணிகண்டன் மீது பிரியம் காட்டிய அரசிக்குத் தன் மகன் மீது பிரியம் உண்டானது.

ஆனால் பந்தள இளவரசனா மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதற்காக ராஜசேகரன் முடிவு செய்தார். இந்த முடிவினை விரும்பாத அரசி தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக நம்பச்செய்து, அதற்கு புலிப்பால் வேண்டுமென மருத்துவரைவிட்டு ஐயப்பனின் சொல்ல சொன்னார். அது சூழ்ச்சி என்பதை உணர்ந்த ஐயப்பன் தன் அன்னைக்காக கானகம் சென்றார். அங்கு மகிசியை வதைத்தார்.

ஐயனாரிலிருந்து ஐயப்பன்[தொகு]

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஐயனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்த்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்குமிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு. ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய முறையைத் தழுவியது, ஐயனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு குலதெய்வ வழிபாடு ஆகும்.

ஐயப்பனின் வேறு பெயர்கள்[தொகு]

மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன்
ஹரிஹரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லக்ஷ்மண பிராணதத்தா
பந்தள ராஜன்
பந்தளவாசன்
பம்பாவாசன்
சபரிவாசன்
சபரீசன்
சபரீஷ்வரன்
சபரி கிரீசன்
சாஸ்தா
வீரமணிகண்டன்
அரியரச்செல்வன்
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

ஐயப்ப வழிபாடு[தொகு]

ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனைக் காென்றவன் என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆறு அய்யப்பன் கோயில்கள்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயப்பன்&oldid=3605697" இருந்து மீள்விக்கப்பட்டது