நாரதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாரதர்
நாரதர்
நாரத முனிவர்
அதிபதிபிரபஞ்சத்தின் ரிஷி
தேவநாகரிनारद
வகைவிஷ்ணு பக்தர், தேவ ரிஷி
இடம்பிரம்மலோகம் மற்றும் விஷ்ணுலோகம்
மந்திரம்ஓம் நாரதாய நமஹ
பெற்றோர்கள்பிரம்மன் (தந்தை)
நூல்கள்நாரத புராணம்
விழாக்கள்நாரத ஜெயந்தி
நாரதர்
நாரதருக்கு சனத்குமாரர் பூமா வித்தையை உபதேசித்தல்

நாரதர் அல்லது நாரத முனி, வைஷ்ணவ சமயத்தின் ஒரு உன்னதமான முனிவர் ஆவார். இவரைப் பற்றியச் சிறப்புகள் பாகவதப் புராணம், ராமாயணம், போன்ற புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆகமவிதிகளைப்பற்றி நாரதர் எழுதிய பஞ்சரத்ரா எனும் நூலே வைணவ மூர்த்தங்களுக்கு பூசைசெய்யும் முறைகளை விளக்கியுள்ளது. ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மத்தியில் இந்நூல் மிகவும் முக்கியமானது, காரணம் அவர்களும் இதே நாரதக் குருப் பரம்பரையில் வந்தவர்களே. நாரதர் எப்பொழுதும் தன்னுடன் ஒரு வீணையும் வைத்திருப்பார். நாராயண என்ற விஷ்ணுவின் நாமத்தை சர்வ காலமும் சொல்லும் இவரது பக்திக்கு ஈடு இணை கிடையாது. பக்தி யோகா முறையையும், நாரத பக்தி சூத்திரங்களையும் இவர் இயற்றியுள்ளார். நாரதஷ்ம்ரிதி எனும் தருமசாச்திரத்தையும் இவர் வழங்கியுள்ளார். இதுவே துறவறம் மற்றும் தவத்தின் முறைகளை எடுத்தியம்புகிறது.

பிறப்பு:[தொகு]

இவர் பிரம்மாவின் மானச புத்திரனாக கருதப்படுகிறார். முற்பிறவியில் கந்தர்வனாக பிறந்த இவர், ஒரு சாபத்தால் அடுத்தப்பிறவியில் ஒரு முனிவரின் வீட்டில் பிறந்தார். அங்கு விஷ்ணு புராணத்தைப் படித்து தேர்ச்சிபெற்ற இவர் பின்பு பரமாத்மாவை நினைத்து தவமிருந்து விஷ்ணுவின் தரிசனத்தைப் பெற்றார். விஷ்ணுவின் ஆசீர்வாதத்தால் நினைக்கும் பொழுது அவரது தரிசனம் பெறும் பாக்கியத்தையும் பெற்றார்.

சிறப்பு:[தொகு]

இவர் கந்தர்வ குலத்தில் பிறந்து ரிஷியானதால் இவரை தேவரிஷி என்று வேதங்கள் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தின் படி பன்னிரண்டு மகாஜனங்களில் இவரும் ஒருவர். நாரதர் முக்காலங்களையும் மூன்று லோகங்களையும் கடந்து செல்லக்கூடியவராகவே எல்லா புராணங்களும் கூறுகின்றன. எனவே அவரை திரிலோக சஞ்சாரி என்றும் அழைப்பர். போகும் இடங்களில் கலகங்களை தொடங்கிவைப்பதால் இவரை கலகப்பிரியர் என்றும் கூறுவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நாரதர் வரலாறு". தினகரன் (2013 ஏப்ரல் 21). பார்த்த நாள் 2015 ஆகத்து 2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரதர்&oldid=2928856" இருந்து மீள்விக்கப்பட்டது