உள்ளடக்கத்துக்குச் செல்

ஆச்சாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிசங்கராச்சாரியர் பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர் எனும் சீடர்களுடன்

இந்து சமயம் மற்றும் சமூகத்தில் ஆச்சாரியர் (acharya) (IAST: ācārya), சமயச் சாத்திரங்கள், தத்துவங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள் தொடர்பான கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பவரும் மற்றும் ஆன்மீக வழிகாட்டியும் ஆவார். மேலும் இந்து சமயத்தின் ஒரு புதிய பிரிவின் நிறுவனரையும், தலைவரையும் ஆச்சாரியர் என்று அழைப்பர். வேத, வேதாந்த சாத்திரங்களை நன்கு கற்றவர்களை ஆச்சாரியர் எனும் அடைமொழியுடன் மரியாதையாகப் போற்றப்படுகிறர்கள்.[1] இந்து, சமணம் மற்றும் பௌத்த சமயச் சாத்திரங்களில், ஆச்சாரியர் எனும் அடைமொழி வேறுபட்ட பொருள்களில் குறிக்கப்படுகிறது. நேபாளம், இந்தியாவின் சில மாநிலங்களில் அந்தண சமூகத்வர்களில் சிலர் ஆச்சாரியா என குடும்பப் பெயர் இட்டுக் கொள்கின்றனர்.

ஆச்சாரியர் என்ற அடைமொழி ஏதேனும் ஒரு துறையில் மிகப்புகழ் பெற்று விளங்கிய அறிஞர்களுக்கு இடப்பட்டது. எடுத்துக்காட்டு: கணிதம் மற்றும் வானியல் துறையில் புகழ் பெற்ற அறிஞரான பாஸ்கராச்சாரி, அத்வைத நெறியை நிலைநாட்டிய ஆதிசங்கராச்சாரியர்.

பெயர்க்காரணம்

[தொகு]

சமஸ்கிருத மொழியில் ஆச்சார்யா எனும் சொல் சார்யா (நன்நடத்தை) எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்தது. இலக்கிய வழக்கில் ஒருவர் தனது நடத்தையால் மற்றவர்களுக்கு கற்பிப்பவர் எனப்பொருளாகும்.

இந்து சமயத்தில்

[தொகு]

இந்து சமயத்தில் ஆச்சார்யா அல்லது ஆச்சாரியர் (आचार्य) எனும் மதிப்புறு பெயர், வேதத்தின் வேதத்தின் ஆறு அங்கங்களான [2] உச்சரிப்பு, இலக்கணம், செய்யுள் இலக்கணம், சொல் இலக்கணம் மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றில் புலமை மிக்க அறிஞர்களை குரு என்பர்.

இந்து தர்மம் ஐந்து முக்கிய ஆச்சாரியர்களைக் கொண்டுள்ளது. அவர்கள்:

நவீன கால இந்து ஆச்சாரியர்கள்

[தொகு]

சமண சமயம்

[தொகு]
சமண சமய ஆச்சாரியரான குண்டகுண்டா

சமண சமயத்தில் மிக உயர்ந்த குருவை ஆச்சாரியர் என அழைப்பர். பஞ்ச பரமேஷ்டிகளில் ஒருவராக ஆச்சாரியரும் வணங்கப்படுகிறார். ஆச்சாரியர் துறவற நெறிகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவர். மேலும் சமணத்தில் புதிதாக துறவறம் மேற்கொள்ள விரும்பும் வாலிப ஆண்களையும், பெண்களையும் தகுதிகளை கண்டறிந்து ஆச்சாரியார் துறவறத்தில் அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவர்.

அறிவியல் மற்றும் கணிதவியல் அறிஞர்கள்

[தொகு]

ஆச்சாரியா (பட்டம்)

[தொகு]

சமஸ்கிருத மொழி கல்வி நிலையங்கள், சமஸ்கிருத மொழியில் பட்டமேற்படிப்பு (முதுகலை படிப்பு) முடித்தவர்களுக்கு ஆச்சாரியா எனும் பட்டம் வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Platts, John T. (1884). A dictionary of Urdu, classical Hindi, and English. London: W. H. Allen & Co.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2. வேதாங்கம்
  3. He propagated the bhakti of Bhagwan Vishnu. Source: Ramanujacharya பரணிடப்பட்டது 26 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம்
  4. His philosophy is called dvaita vad. His primary teaching is that "the only goal of a soul is to selflessly and wholeheartedly love and surrender to God" Source: [1]
  5. Bhaskara I
  6. "Bhaskara II". Archived from the original on 2017-08-15. பார்க்கப்பட்ட நாள் 2017-08-03.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆச்சாரியர்&oldid=3878526" இலிருந்து மீள்விக்கப்பட்டது