திருப்புகழ் (அருணகிரிநாதர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.

பாடல்[தொகு]

1. விநாயகர் துதி (இராகம் - நாட்டை; தாளம் - ஆதி)

தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் -- 3"
"முத்தைத்தரு"
இராகம்: கௌளை
தாளம்: திஸ்ர த்ருபுடை/மிஸ்ரசாபு
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை
கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

மந்திரத் திருப்புகழ்[தொகு]

திருத்தணியில் பாடப்பட்ட ’இருமல் உரோகம்..’ எனத்தொடங்கும் திருப்புகழ் ’மந்திரத் திருப்புகழ்’ எனப்படுகிறது. இத்திருப்புகழ் நோய் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.[1]

மந்திரத் திருப்புகழ் பாடல்[தொகு]

இருமல் உரோகம் முயலகன் வாதம்
எரிகுண நாசி விடமே நீர்
இழிவு விடாத தலைவலி சோகை
எழுகள மாலை இவையோடே
பெருவயிறு ஈளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனை நலியாத
படிஉன் தாள்கள் அருள்வாயே
வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக இசைபாடி
வரும் ஒரு கால வயிரவர் ஆட
வடிசுடர் வேலை விடுவோனே
தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி
தரு திரு மாதின் மணவாளா
ஜலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!

மந்திரத் திருப்புகழின் பொருள்[தொகு]

"இருமல், ரோகம், முடக்கு வாதம், எரிவாயு, விஷநோய்கள், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, எழுகள மாலை மற்றும் வேறு நோய்கள் எதுவும் இப்பிறவியிலும், இனி வரும் பிறவிகளிலும் என்னை வாட்டாத வகையில் முருகா, உனது திருவடிகளை தந்து அருள வேண்டும்.கோடிக்கணக்கான அசுரர்கள் அழியவும் அதனால் கால பைரவர் மகிழ்ந்து ஆடவும் வடிவேலை விடும் வேலாயுதக் கடவுளே! மேகத்தை வாகனமாக கொண்ட தேவேந்திரனின் மகளான தெய்வயானை மணவாளனே! திருத்தணிகை மலையில் வாழும் பெருமானே!"

புற இணைப்புகள்[தொகு]

அகத்தியர், அகப்பொருள் துறை, அடிமை, அடியவர், அடியார், அடியார்கள், அடைக்கலம், அத்திப்பட்டு, அத்துவைதம், அனல்வாதம், அனுபூதி, அனுமன், அன்பர், அன்பு, அயன், அரி, அருணகிரி, அருணையில் தரிசனம், அருள், அலங்கார வர்ணணை, அவிநாசி, ஆட்கொண்டது, ஆய்க்குடி, ஆறுமுகம், ஆலகால விஷம், இகபரசௌக்கியம், இந்திரன், இரத்தினகிரி, இராமன், இராமயணம், இராமாயணம், இராமேசுரம், இராவணன், இரு வினை, இருவினை, இலக்குமி, உத்தர மேரூர், உத்தரமேரூர், உபதேசம், உபநிடதம், உமை, உமை நாமங்கள், உமைக்கு இடபாகம் அளித்தது, உருத்திர சமணர், உருத்திரன், ஊதிமலை, எண்கண், எமன், எழுகரை, ஏரகம், ஐங்கரன், ஐம்புலன், ஐம்புலன்கள், ஐம்பூதம், ஓம், கங்கை, கஜேந்திரன், கடவூர், கணபதி, கண்ணன், கதிர்காமம், கந்தனூர், கந்தன், கயிலை, கயிலை மலை, கருவூர், கருவூர் வேல், கலிசை, கலிசை சேவகன், கழுக்குன்றம், கழுமலம், கவுணியர், காசி, காலன், கிரியை, குடந்தை, குன்றுதோறாடல், குமரன், குரங்காடுதுறை, குரு, குரு உபதேசம், குருநாதன், குருநாதர், குருநாதா, குருமூர்த்தி, குற்றாலம், குவலயா பீடம், கோடைநகர், கோவர்த்தன மலை, சங்கரன், சடச்சரம், சந்திரகாசம், சந்திரசேகர மூர்த்தி, சமணர், சமணர்கள், சமாதி, சம்பந்தன், சம்பந்தராய் முருகன் வந்தது, சம்பந்தர், சரணம், சரணாகதி சிவன், சரியை, சாயுச்சியம், சிக்கல், சிரகிரி, சிராப்பள்ளி, சிராமலை, சிறுதொண்டர், சிறுவை, சிவ ஞானம், சிவ யோகம், சிவஞானம், சிவனுக்கு உபதேசம், சிவன், சிவபுரம், சிவபெருமான், சிவயோகம், சிவரூபம், சிவலோகம், சீகாழி, சீதை, சுந்தரருக்காக தூது, சுந்தரர், சுப்பிரமணி, சுவாமி மலை, சுவாமிமலை, சூரன், சூர்ப்பனகை, சூலம், செங்கோடு, செட்டி, செண்டு, செந்தில், சேலம், சேவகன், சேவல், சேவல் கொடி, ஜானகி, ஜெப மாலை, ஞான உபதேசம், ஞானமலை, ஞானம், தணிகை, தத்துவம், தனிச்சயம், தமிழ், தம்பிரான், தரிசனம், தற்பரம், தியானம், திருநள்ளார், திருநீறு, திருப்புகழ், திருப்புகழ் அடியார், திருப்புகழ் துதி, திருப்புக்கொளியூர், திருப்பெருந்துறை, திருப்போரூர், திருமால், திருமால் கண் அளித்தது, திருவடி, திருவடி தத்துவம், திருவடிகள், திருவருள், திருவிளயாடல், திருவேங்கடம், திருவேரகம், தீர்த்தமலை, துதி, துரிய நிலை, தெய்வயானை, தேவ சேனை, தேவசேனை, தேவயானை, தேவர், தேவாரம், தேவி துதி, தொண்டு, நக்கீரன், நக்கீரர், நடனம், நடராஜன், நாமங்கள், நாரயணா, நிலையாமை, நெறி, பக்தி, பஞ்சாக்கரம், பஞ்சாக்ஷரம், பரகதி, பரஞ்ஜோதி, பரம்பொருள் இலக்கணம், பல குன்று, பழநி, பழனி, பவ ரோக வயித்திய நாதன், பாண்டிக்கொடுமுடி, பாண்டியன் கூண், பாரதம், பார்வதி, பிணி, பிரகலாதன், பிரணவ உபதேசம், பிரணவம், பிரபுட தேவ ராசன், பிரமனை தண்டித்தல், பிரமன், பிறவி, பூசை, பொய்யா மொழி, மயிலை, மயில், மயில் குதிரை, மவுனம், மாயை வினை பிணி திருவடி, மாருதி, மார்கண்டேயன், மார்க்கண்டன், மார்க்கண்டேயன், முகுந்தன், முத்தமிழ், முத்தி, மும்மலம், முருகன் சம்பந்தராக வந்தது, மூலப் பொருள், மூவாசை, மெய்ப் பொருள், மெய்ப் பொருள் தத்துவம், மெய்ப்பொருள், யமன், யோகம், வயலூர், வள்ளி, வள்ளி தேவசேனை, வள்ளி மடல், வள்ளி மலை, வள்ளிமலை, வள்ளியூர், வாமனாவதாரம், வாள், வாழ்வு, விடமுண்டகண்டன், விநாயகன், விநாயகமலை, விநாயகர், வினை, விபீஷணர், விராலிமலை, விஷ்ணு, வீடு, வேங்கடம், வேதம், வேதம் தத்துவம், வேலவன், வேலாயுதம், வேல், ஸ்ப்ர தீட்சை வேண்டல்=மேற்கோள்கள்==

  1. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மூலமும் உரையும்; நல்லறப் பதிப்பகம்; பக்கம் 473