பதஞ்சலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதஞ்சலி முனிவர்

பதஞ்சலி என்பவர் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் என கருதப்படுகிறார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றியதாக சொல்லப்படும் பதஞ்சலி யோக சூத்திரம்[1] எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.

தொன்மம்[தொகு]

ஓரு சமயம் ஆதிசேஷன் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று சிவனிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை வனத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக அத்திரி மகசிரியின் மகனாக வளர்ந்து வருமாறு ஆதிசேசனை பணிக்கிறார். அத்திரி மகரிசி ஆற்றில் சந்தியா வந்தனம் செய்யும்போது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து விழுகிறார். மகரிசியும் அந்தக் குழந்தையை எடுத்து பதஞ்சலி என்ற பெயரிட்டு வளர்க்கிறார்.

அத்திரி மகரிசியும், புலிகால் முனிவரும் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்கின்றனர். அப்போது பதஞ்சலியும் அவர்களுடன் சேர்ந்து தவமியற்றினார். இவர்களின் தவத்தற்கு இரங்கிய ஈசன் ஒரு வியாழக் கிழமையுடன் கூடிய தைப்பூச நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார்.

இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன.

தோற்ற அமைதி[தொகு]

பதஞ்சலி முனிவரின் தோற்றமானது இடுப்புவரை மனித உடலாகவும், இடுப்புக்குக் கீழே நாகத்தில் உடலாகவும் இருக்கும். தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடைபோல இருக்கும். இவர் ஆதிசேசன் அம்சம் என்பதால் வாயில் கோரைப் பற்கள் இருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Yoga Sutras of Patanjali
  2. சித்திரப் பேச்சு: ஆதிசேஷனின் அவதாரம் பதஞ்சலி முனிவர், ஓவியர் வேதா, இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 14

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதஞ்சலி&oldid=3783781" இருந்து மீள்விக்கப்பட்டது